தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1ம் நாளையும், ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்ட அண்ணாதுரை சட்டசபையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.
- ஐக்கிய இராச்சியத்தில் புதிய அகதிகள் கொள்கை: நிரந்தர பாதுகாப்பு நீக்கம், ஆதரவு விருப்பமானதாக மாறும்
- பரமக்குடி எஸ்எஸ்ஐ, பெண் காவலர்களை ரகசியமாக படம் பிடித்த குற்றச்சாட்டில் கைது
- தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளின் தரம் குறைவாக இருப்பதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
- இலங்கை: பொருளாதார நிலைபேறாக்கம், ஐஎம்எப் சீர்திருத்தங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பில் தொடர்ந்த கவனம்
- ரூட் மாபியா வின் TVK வெற்றி ! | அதிகாரம் முழுக்க DMK கையில் ? | எவ்வளவு காலம் இந்த ஆ(கா)ட்சி !
- ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழகம் உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்