இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில், அழைப்பு மையம் (call center) ஒன்றின் மூலம் அமெரிக்கர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உ.பி.,யில், ‘ஆப்பரேஷன் சை வஜ்ரா’ என்ற பெயரில், கடந்த 7 – 13 வரை சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, லக்னோவின் கோம்தி நகரில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில், சட்டவிரோதமாக கால் சென்டர் செயல்படுவது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், அங்கு பணியாற்றிய ஏழு பேரை கைது செய்தனர்.
விசாரணையில், கைதான ஏழு பேரும் இணையதளம் வாயிலான போன் அழைப்பை பயன்படுத்தி வெளிநாட்டினரிடம் சைபர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. குறிப்பாக, அமெரிக்கர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதும், அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறி, அவர்களிடம் பணம் மற்றும் கிரிப்டோ கரன்சிகளை ஆன்லைன் மூலம் பெற்றதும் தெரிய வந்தது. சைபர் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், ஐ–போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.