Home தமிழகம்ஈரான் போரின் எதிரொலி: இந்தியா முழுவதும் சிலிண்டர் விலைகள் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளன.

ஈரான் போரின் எதிரொலி: இந்தியா முழுவதும் சிலிண்டர் விலைகள் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளன.

by Amizhthu

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் போர் தொடுத்தள்ளது. இதனால் உலகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. போர் காரணமாக கச்சா வினியோகம் தடைபட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் சிலிண்டர் விலை, நள்ளிரவு முதல் உயர்வு கண்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.115 ம், 14.2 கிலோ எடை கொண்ட, வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ. 60ம் உயர்ந்தது.

புதிய விலையின்படி சென்னையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர், ரூ.928.50 க்கும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர், ரூ. 2043.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00