ஈரானின் கடற்படை மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகின்றன. அண்மையில், இந்தியாவில் 2 நாள் கடற்படை பயிற்சியை முடித்து விட்டு, தாயம் திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் ‘டீனா’ என்ற போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்தது. இதில், 87 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, மற்றொரு ஈரான் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.என்.எஸ்., புஷெர்’ என்ற போர்க் கப்பலை, தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அனுமதித்து இலங்கை ஆதரவு அளித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானின் கோரிக்கையின் பேரில், அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான மற்றொரு கப்பலை கொச்சியில் நிறுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் மீதான கூட்டுத் தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய பிப்ரவரி 28ம் தேதியன்று, சர்வதேச கடற்படை ஆய்வுக்கு வந்த ‘லவன்’ என்ற கப்பலை கொச்சியில் நிறுத்த அனுமதி கேட்டு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கப்பலில் அவசர தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான அனுமதி மார்ச் 1ம் தேதி வழங்கப்பட்டு, மார்ச் 4ம் தேதியன்று ‘லவன்’ கொச்சியை வந்தடைந்தது. அக்கப்பலில் இருந்த 183 பணியாளர்கள் தற்போது கொச்சி துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- திமுக அரசில் ஊழல், மோசடி நடக்காத துறையே இல்லை; அண்ணாமலை குற்றச்சாட்டு
- விகடனும் மொத்த வியாபாரமும் ! | நான் சொன்னது என்ன அவர்கள் எழுதியது என்ன ?
- இந்தியாவை புறக்கணித்து பங்களாதேஷுக்கு ஆதரவு: டி20 உலகக் கோப்பையில் இந்தியா போட்டியை புறக்கணிப்போம் — பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப்
- புகழ் வணக்க நிகழ்வு “மாமனிதர், பாசறைப் பாணர்தேனிசை செல்லப்பா” கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்
- ஐரோப்பா விளிம்பில்: ரஷ்யா, நேட்டோ, ஜெர்மனி மற்றும் புதிய அணுசக்தி நெருக்கடி
- காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் “மரண தண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷவை” மீண்டும் சந்திக்க அனுமதி கோரியுள்ளனர்.