மொனராகலை மாவட்டத்தின் விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் புத்தளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குறித்த ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 84 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் தராசு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புத்தளம் பகுதியில் அண்மைக்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிகளவிலான ஹெரோயின் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்றைய வானிலை அறிக்கை
- மட்டக்களப்பு சிறைக் கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழாநடைபெற்றது.
- சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
- முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு 17ஆம் ஆண்டு நினைவு நாள் – லண்டன்
- நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி நினைவு சுமந்த உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் – நெதர்லாந்து
- அடிப்படை மாற்றம்! அரசியல் மாற்றம்!!
சந்தேகநபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மொனராகலை மாவட்ட விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.