FOR IMMEDIATE RELEASE








📩 Contact Us For questions about refunds or returns, reach out to our support team: Email: amizhthu.com@gmail.com Dismiss
தற்போது காவலில் உள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கெஹல்பத்தார பத்மேயைச் சுட்டவர் எனக் கூறப்படும் பொம்புவலா தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன என்ற “மத்தியா” என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் இருந்தபோது நாட்டின் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்ட அவர், 25ஆம் திகதி வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டு, அவரது வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர் மேலதிக விசாரணைக்காக கொழும்பு வடக்கு குற்றப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
42 வயதான அந்த சந்தேக நபர், கொட்டுகொட யகொடமுல்லவைச் சேர்ந்தவர். அவர் மீது சர்வதேச செஞ்சேனை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2022, ஜூலை 22 அன்று கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள், பஸ்போடா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியையும் அவருடன் இருந்த மற்றொரு நபரையும் சுட்டுக் கொன்றதாகவும், அங்கு இருந்த மற்றொரு குழுவினரைச் சுட்டுக் காயப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான அகழ்வாராய்ச்சி மற்றும் விசாரணைகளை திசை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே விடுதலைப்புலிகளை மலினப்படுத்துவதற்காக கிழக்கில் குருக்கள் மடத்தில் ஒரு மனிதப் புதைகுழி இருப்பதாக கூறி செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25-06-2026) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடந்த கால ஆட்சியாளர்களினால் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளினால், கைதுகளினால் ஆரம்பத்தில் போதைப்பொருள் வர்த்தகம் குறைவடைந்திருந்தபோதும் தற்போது அது மீண்டும் தலைவிரித்தாடுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்தான் போதைப்பொருள் வர்த்தகம் அதிகளவில் நடக்கின்றது. யுத்தத்திற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கு, கிழக்கில் போதைப் பொருள் என்பது மிக மிக அரிது. எனெனில் விடுதலைப்புலிகளிடம் மிகக் கட்டுக்கோப்பான நிர்வாகம் இருந்தது.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்குஇகிழக்கில் அதிகளவில் போதைப் பொருள் வர்த்தகத்தை இராணுவத்தினரும் இராணுவத்தினரோடு சேர்ந்து செயற்படுகின்றவர்களும் பேரினவாத குழு அரசியலோடு சேர்ந்து செயற்படுகின்றவர்களுமே தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு, கிழக்கு தமிழர்களின் கலாசாரத்தை,பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதற்காக, தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்க வேண்டும் என்பதற்காக சீரழிக்க வேண்டும் என்பதற்காக போதைப்பொருள் வர்த்தகம் திட்டமிடப்பட்ட முறையில் வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
தற்போதைய ஆட்சி இதனை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.தற்போது கூட வடக்குஇகிழக்கில் மாணவர்களிடையில், அவர்களை முக்கிய இலக்காகக் கொண்டு இந்த போதைப் பொருள் வர்த்தகம் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு இந்த போதைப் பொருள் வர்த்தகர்கள் போதைப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
செம்மணி மனிதப்புதை குழியில் இது வரை 412 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழினப் படுகொலை நடந்ததற்கான முக்கிய சாட்சியாகவுள்ளது.செம்மணி மட்டுமல்ல வடக்குஇகிழக்கில் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பெண்கள்,குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் பல மனிதப் புதைகுழிகள் உள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அகழ்வாராய்ச்சிக்கு இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்குகின்றது.செம்மணி விடயத்தில் அரசாங்கத்தின் நிதி மட்டும் போதாது நீதியும் வேண்டும். இந்தப் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களை கண்டறிய வேண்டுமானால் அதற்கு சர்வதேச பொறிமுறையே வேண்டும்.
இந்தப்படுகொலைகளுக்கு இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச என்பவர் சாட்சியாகவுள்ளார்.இந்தப்படுகொலையுடன் இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள் தொடர்புபட்டுள்ளதால் உள்ளூர் விசாரணை மூலம் உண்மைகள் வெளிவராது. எனவேதான் சர்வதே பொறிமுறையுடனான விசாரணை அவசியமாகவுள்ளது
இது ஒரு அப்பட்டமான தமிழினப்படுகொலை.இவ்வாறான தமிழினப்படுகொலைகள் வடக்கு, கிழக்கில் பல இடங்களில் நடந்துள்ளன. செம்மணி மனிதப்புதக்குழி தொடர்பான அகழ்வாராய்ச்சிஇ விசாரணைகளை திசை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே விடுதலைப்புலிகளை மலினப்படுத்துவதற்காக கிழக்கில் குருக்கள் மடத்தில் ஒரு மனிதப் புதைகுழி இருப்பதாக கூறி செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயன்றார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான நீதி விசாரணை வேண்டுமென்றே நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பாக சர்வதேச நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து தொழில்நுட்ப உதவி, தடயவியல் நிபுணத்துவம் அல்லது டி.என்.ஏ பகுப்பாய்வு ஆதரவை அரசாங்கம் கோரியுள்ளதா?

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி வழக்கைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட செம்மணி விசாரணைகளுடன் தொடர்புடைய சான்றுகள் மற்றும் பொருட்களை மீளாய்வு செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நீதி அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25-06-2026) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்பொழுது பொதுமக்களிடையே பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ள ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது. 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் விசாரணைகளின்போது, மோதல்களின்போது காணாமல் போன பொதுமக்கள் செம்மணிப் பகுதியில் புதைக்கப்பட்டதாக வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தொடர்ந்தே இப்பகுதி முதன்முதலில் பொதுமக்களின் கவனத்திற்கு வந்தது.
அண்மைகால அகழ்வாராய்ச்சிகளின் போது 380க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியாக செம்மணியை மாற்றியுள்ளது. இந்த கண்டுபிடிப்புகளின் அளவானது, பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணுதல், தடயவியல் விசாரணைகள், பொறுப்புக்கூறல் மற்றும் உண்மைகளைக் கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
சமீபத்திய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின்படி செம்மணி அகழ்வாராய்ச்சி இடத்தில் அடையாளப்படுத்தப்பட்ட மொத்த மனித எலும்புக்கூட்டு எச்சங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகளில், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் முழுமையான எலும்புக்கூடுகள் மற்றும் பகுதி அளவிலான எலும்புக்கூட்டு எச்சங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விரிவான விபரங்களை அரசாங்கத்தால் வழங்க முடியுமா?
அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகளில் எத்தனை தடயவியல் பரிசோதனை, டி.என்.ஏ பகுப்பாய்வு அல்லது பிற அறிவியல் ரீதியான அடையாளங்காணல் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவற்றில் எத்தனை நேர்மறையாக அடையாளம் காணப்பட்டுள்ளன? பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம், மரணத்திற்கான காரணம் மற்றும் மரணம் நிகழ்ந்த தோராயமான காலகட்டம் ஆகியவற்றைத் தீர்மானிப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பாக சர்வதேச நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து தொழில்நுட்ப உதவி, தடயவியல் நிபுணத்துவம் அல்லது டி.என்.ஏ பகுப்பாய்வு ஆதரவை அரசாங்கம் கோரியுள்ளதா?
படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி வழக்கைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட செம்மணி விசாரணைகளுடன் தொடர்புடைய சான்றுகள் மற்றும் பொருட்களை மீளாய்வு செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லாந்து அல்லது வெளிநாடுகளுக்கு முன்னதாக அனுப்பப்பட்ட எலும்புக்கூடுகள் மாதிரிகள் அல்லது தடயவியல் அறிக்கைகள் அடங்குமா, மற்றும் அவற்றின் தற்போதைய நிலை என்ன?
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகள் மன்றக் கூட்டத்தில், அடையாளப்படுத்தப்பட்ட மனித எலும்புக் கூடுகளை அடையாளம் காணும் அடுத்த கட்டத்திற்கு விசாரணையை நகர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் உதவி பெறுவதற்காக, சிறந்த மற்றும் சர்வதேச அனுபவமிக்க தடயவியல் நிறுவனம் ஒன்று ஈடுபடுத்தப்படும் என்பதை நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் உறுதியளிப்பாரா, செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பதில்களை வழங்குவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள மேலதிக நடவடிக்கைகள் யாவை என கேட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு ஒன்றரை வருடகாலமாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். மனித உரிமைகளை பாதுகாப்பதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்.
அதற்குரிய நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25-06-2026) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பாரபட்சமின்றிய வகையில் கைதுகள் இடம்பெறுகின்றன. அதேபோல் பாதாளக் குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். பாதாளக் குழு உறுப்பினரான ஹரக்கட்டாவுடன் தொடர்புக் கொண்டு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் நீதியமைச்சரின் மகனும், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளரான சரித் அபேசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் போதைப்பொருளுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடுகிறார். சிங்கப்பூர் நாட்டின் மரண தண்டனை சட்டத்தை இங்கு அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார். போதைப்பொருள் குற்றவாளியிடமிருந்து இலஞ்சம் பெற்ற சரித் அபேசிங்கவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை எதிர்க்கட்சி குறிப்பிட வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்புகிறார். 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எத்தனை அரசாங்கங்களில் பதவி வகித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு ஏதேனும் யோசனைகளாவது முன்வைத்துள்ளாரா, பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு ஒன்றரை வருடகாலமாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.
மனித உரிமைகளை பாதுகாப்பதுடன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும். அதற்குரிய நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும்.
நீதியரசர்கள் நியமனம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். கடந்த காலத்தில் நீதி அமைச்சரும் ஜனாதிபதியும் இணைந்தே, தமக்குத் தேவையானவர்களை நியமித்துக் கொண்டனர். தற்போது நாம் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையிலான நியமனங்களை வழங்கும் சுதந்திரத்தை பிரதம நீதியரசருக்கு வழங்கியுள்ளோம். கீழ் நீதிமன்றங்களில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்கு தகுதியின் அடிப்படையில் நியமிப்பதே தற்போது நடைபெறுகிறது. ஒரு முழுமையான கட்டமைப்பாகக் கருதி இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
முன்னர் உயர் நீதிமன்றம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களே வழக்குகளை விசாரித்தது. தற்போது ஐந்து நாட்களும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கொள்கலன் சம்பவம் குறித்துப் பேசினார்கள். அவர்களே ஒரு பொயைக் கூறிவிட்டு, இப்போது அவர்களே அதில் சிக்கியுள்ளனர் என்பதுதான் உண்மை. இதைவிடப் பொறுப்புக்கூறும், இதைவிடப் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படும் ஒரு அரசாங்கம் இருந்ததில்லை. நாம் சட்டத்தின் மற்றும் நீதியின் கோட்பாடுகளுக்கு இணங்கவே செயற்படுகிறோம்.
2025 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகளில், சுமார் 23,692 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெரோயின் கைப்பற்றப்படுவது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இந்நாட்டில் நடக்கும் அனைத்து சட்டவிரோத செயல்களுக்கும் பின்னால் ஒரு கடத்தல் வலையமைப்பு உள்ளது. கோட் – சூட் அணியும் சட்டத்தரணிகளும் இவர்களில் அடங்குவர் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.
கடந்த 24 மாதங்களில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் தங்கியிருந்து செயற்படும் இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 95 பேருக்கு எதிராக ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. தனது குழுவைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவரால் முடியுமா? சரித் அபேசிங்கவிற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்னவென்று நாம் பார்ப்போம் என்றார்.
தமிழீழத்தை நாசமாக்குவது யார் என்பதனை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ளாவிட்டால் வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் அழியும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
வவுனியா மாநகர மேயரையும் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரையும் வடக்கு ஆளுநர் பதவி நீக்கியமை முற்றிலும் சரியானது. அதனை நான் வரவேற்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25-06-2026) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
எதிர்வரும் மாதங்களில் நான் எனது பாராளுமன்ற பதவியை இராஜிநாமா செய்தால், எனது ஆவனத்துக்கு பெண் ஒருவர் நியமிக்கப்படுவார். தயவு செய்து அந்தப் பெண்மணியை பாதுகாப்பான இடத்தில் அமரக்கூடியவாறு ஆசன நிரல் நிலையை இங்கே ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்விடத்தில் ஒரு பெண்மணி இருக்கும் போது அதற்கு அடுத்ததாக பெண் பித்தர் இருந்தால் அந்த பெண்ணால் இருக்க முடியாது. இதனால் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி கதிரைகளை மாற்றியமைக்க வேண்டும். கதிரைகளை மாற்றித் தருமாறு நான் பல தடவைகள் கடிதம் கொடுத்துள்ளோம். இதில் கவனம் செலுத்துமாறு கோருகின்றோம்.
இதேநேரம் வவுனியா மாநகர மேயரையும் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரையும் வடக்கு ஆளுநர் பதவி நீக்கியுள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கை முற்றிலும் சரியானது. அதனை நான் மிகவும் வரவேற்கின்றேன். தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவும், அவதானமாகவும் இருக்க வேண்டும். தமிழரை கொலை செய்வது யார்? தமிழீழம் என்ற பெயரில் தமிழரை நாசமாக்குவது யார் என்பதனை தமிழ் இனம் என்றாவது ஒருநாள் விளங்கிக்கொள்ளாவிட்டால் எமது வடக்கும், கிழக்கும் தொடர்ந்தும் அழியும் என்பதனை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.
சைக்கிள் கட்சியினரும், வீட்டு சின்னக் கட்சியினரும் எனது உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்தார்கள். மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதால் நான் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன். மக்களுக்காகவே நான் அரசியல் செய்கிறேன். உண்மையை பேசுவதால் நெருக்கடிக்குள்ளாக்குவதாயின் சாகும் வரை அரசியல் செய்வேன். எவன் எதிர்த்தாலும் அரசியல் செய்வேன் என்றார்.
அரசாங்க அதிபராக வேதநாயகத்தை சிறப்பான சேவகராக மக்கள் கருதினாலும் இப்போது ஜனாதிபதியின் முகவராக நியமிக்கப்பட்டு ஆளுநராக ஜனாதிபதியின் விருப்பத்தை திருப்திபடுத்தவும், ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அடிபணிந்து செயற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளரை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக வடக்கு ஆளுநர் அறிவித்துள்ளமை ஜனநாயக விரோத செயற்பாடாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25-06-2026) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
போதைப்பொருள் விடயத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமாயின் அங்குள்ள முப்படையின் ஒத்துழைப்பும் அவசியமாகும். வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் இருப்பானது யாழ்ப்பாணத்தில் ஒரு சிப்பாய்க்கு 14 பொதுமக்கள் என்ற அடிப்படையிலும் வன்னி மாவட்டத்தில் ஒரு சிப்பாய்க்கு இரண்டு பொதுமக்கள் என்ற அடிப்படையில் ஆக்கிரமித்துள்ளனர். இராணுவத்தின் 20 பிரிவுகளில் வடக்கு மற்றும் கிழக்கில் 16 பிரிவுகள் இருக்கின்றன. ஜனாதிபதி இராணுவத்தைப் பற்றி பெரியளவில் புகழ்ந்து உரையாற்றினார்.
இராணுவத்தினர் போரை வென்றவர்கள் என்றும், அவர்களுக்கு கௌரவத்தை வழங்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் போதைப் பொருள் அந்த மக்களை அழித்துக்கொண்டிருக்கின்றது என்றால் இந்த அரசின் ஒத்துழைப்பு இன்றி அந்த விடயம் அங்கு நடக்க முடியாது. இந்த அரசாங்கம் இனவாத கோணத்தில் செயற்பாடாது என்று கூறினாலும். இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் வடக்கு, கிழக்கை இலக்கு வைத்து முன்னெடுத்த அதே பாணியிலேயே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது என்றே குறிப்பிட வேண்டும்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் பொலிஸ் சேவை மாகாணத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும் அங்கு நியமிக்கப்படும் பொலிஸ் அதிகாரி முற்றுமுழுதாக பொலிஸ்மா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் அடிபணிய வேண்டியுள்ளது. அந்த அதிகாரிகள் மத்திய அரசாங்கத்தின் கீழேயே செயற்பட வேண்டியுள்ளது.
அதேபோன்றே ஆளுநரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றார். ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரிலேயே அவர் இருப்பார். இவ்வாறான ஆளுநரின் கையிலேயே நிறைவேற்று அதிகாரம் 13ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர், மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களும் ஆளுநருக்கு உதவுபவர்களாகவே இருக்கின்றனர். அங்கு அதிகாரங்களை செலுத்தும் நிலையில் இல்லை.
வடக்கில் நடக்கும் விடயங்கள் அனைத்துக்கும் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். அரசாங்க அதிபராக வேதநாயகத்தை சிறப்பான சேவகராக மக்கள் கருதினாலும் இப்போது ஜனாதிபதியின் முகவராக நியமிக்கப்பட்டு ஆளுநராக ஜனாதிபதியின் விருப்பத்தை திருப்திபடுத்தவும், ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அடிபணிந்து செயற்படும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
வடக்கு ஆளுநர் வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் உபதவிசாளரை பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். ஆளுநர் எந்தளவுக்கு இந்த அரசாங்கத்தின் மற்றும் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு துணை போகின்றார். உண்மையின் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு அவர் ஒரு கூலியாக வேலை செய்கின்றார். அதுவே வடக்கில் நடக்கின்றது. ஆளுநர் ஜனாதிபதியின், அரசாங்கத்தின் மற்றும் அரசியல்வாதிகளின் கட்டளைகளுக்கிணங்க செயற்படுகின்றார். இதுவே உண்மை.
இந்த அரசாங்கம் மிகத் தெளிவாக போதைப் பொருளை பரப்புவதில் இருந்து வடகிழக்கில் வாழுகின்ற மக்களை அழிக்கும் வேலைகளையே முன்னெடுக்கின்றது. இதற்கு முன்னர் இருந்த இனவாத அரசாங்கங்கள் முன்னெடுத்தவற்றை இந்த அரசாங்கமும் முன்னெடுக்கின்றது. ஜனாதிபதி ஜனநாயகம் பற்றி வகுப்பெடுப்பதில் நேர்மாறாகவே வடக்கு, கிழக்கில் அவரின் முகவராக எடுபிடியாக நியமிக்கப்படும் ஆளுநரை வைத்து செயற்படுகின்றது என்றார்.
2026ஆம் ஆண்டு நெல்லுக்கான கேள்வி 2.8 மில்லியன் மெற்றிக் தொன்னாக காணப்படுகின்ற நிலையில் 2.85 மில்லியன் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்தில் போதுமான நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட நிலையில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே 2026ஆம் ஆண்டு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற அமர்வில் கடந்த மாதம் 6ஆம் திகதி இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2025 (2026)ஆம் ஆண்டு பெரும்போக விவசாயத்தில் 2.8 மில்லியன் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு நெல்லுக்கான கேள்வி 2.8 மில்லியன் மெற்றிக்தொன்னாக காணப்படுகின்ற நிலையில் 2.85 மில்லியன் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்தில் போதுமான நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வரையறுக்கப்பட்ட நிலையில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே 2026ஆம் ஆண்டு அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது.
தற்போதைய விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உரத்தை கமநல அபிவிருத்தி மத்திய நிலையம் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருசில பகுதிகளில் உர விநியோகத்தில் தட்டுப்பாடு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. அவற்றுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க நிறுவன மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் உற்பத்தி செலவுக்கு அமைய விலைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
எல் நினோ நிலைமை தற்போது இலங்கையை நேரடியாகப் பாதிக்கவில்லை. எல் நினோ நிலைமையின் போது பொதுவாக தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மழை குறையும். இது குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மழையின் அளவு ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாத இறுதியின் பின்னரே இந்த காலநிலையில் மாற்றம் ஏற்படக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலகளாவிய ரீதியில் தற்போது பலவீனமான எல் நினோ காலநிலை நிலைமை காணப்படுகிறது. இந்த எல் நினோ நிலைமையானது வரும் காலங்களில் நடுத்தரமான அல்லது ஒரு வலுவான எல் நினோ நிலைமையாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எல் நினோ தாக்கத்தின் காரணமாக, இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழையின் அளவில் ஒரு சிறிய குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தென்மேற்கு பருவக்காற்று ஓட்டம் ஓரளவுக்குக் குறைவடைந்துள்ளமையாகும்.
இப்போதைக்கு எல் நினோ நிலைமை இலங்கையை நேரடியாகப் பாதிக்கவில்லை. எல் நினோ நிலைமையின் போது பொதுவாக தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மழை குறையும். இது குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலேயே பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.இலங்கை செய்திகள்
தற்போழுது மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் மழை வீழ்ச்சி ஓரளவு குறைந்துள்ளதால், மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறையும் நிலை காணப்படுகிறது. எனினும், இந்த தென்மேற்கு பருவக்காற்று அவ்வப்போது தீவிரமடைவதால் கடலை ஒட்டிய பகுதிகளான வடமேல் மாகாணம், மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி வரை ஓரளவுக்கு பலத்த மழை பெய்து வருகிறது.
24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மழையின் அளவு ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத இறுதி வரை வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களின் பின்னர், அதாவது ஜூலை மாதமாகும் போது இந்த மழைப்பொழிவு படிப்படியாகக் குறைவடைந்து செல்லும். அதன் பின்னர், எல் நினோ தாக்கத்தினால் ஜூலை மாத இறுதிப் பகுதியிலும் மற்றும் ஆகஸ்ட் மாதத்திலும் மழை மிகவும் குறைவாகவே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எல் நினோவின் மறைமுகத் தாக்கம் தற்போது ஆரம்பித்துள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதுடன், ஈரப்பதனான காற்று வீசுவதும் குறைந்துள்ளது. எனவே, ஜூலை மாதத்திற்குப் பிறகு இதன் தாக்கம் ஓரளவுக்குத் தெரிய ஆரம்பித்து, ஆகஸ்ட் மாதமாகும்போது இலங்கைக்கு நன்றாகவே உணரப்படும். ஆகஸ்ட் மாதத்தில் மழைப்பொழிவு பெருமளவில் குறையும்.Travel Guides & Travelogues
எல் நினோ நிலைமை என்றால் மழை குறையும் என்று மட்டும் கூற முடியாது, மழையின் அளவு அதிகரிப்பதும் குறைவதும் ஆகிய இரண்டுமே இதில் நடக்கும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழை மிகவும் குறையும். ஆனால், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கமான மழையளவை விடக் கூடுதலான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.
டிசம்பர் மாதத்தின் பின்னர் எல் நினோவின் நேரடிப் பாதிப்பு அடுத்த வருடத்தின் (2027) ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களின் முதல் காலாண்டில் கடுமையான வறட்சியாக இலங்கையை பாதிக்கக்கூடும். அந்த காலப்பகுதியில் மழைப்பொழிவு மிகவும் குறைவடைவதுடன், நாட்டின் வெப்பநிலையும் பெருமளவில் அதிகரிக்கும். இது நாட்டின் அனைத்து துறைகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கவும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கூறுகிறார்.
தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதையும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
அரசின் வரவிருக்கும் பாதுகாப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து கருத்து தெரிவித்தபோது, ஜனாதிபதி இதை வலியுறுத்தினார்.
மேலும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நீண்ட காலமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இந்த புதிய சட்டக் கட்டமைப்பு ரத்து செய்யும் என்றும், அதற்குப் பதிலாக இன்றைய சமூகத்திற்கு ஏற்ற வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்கி, அதன் மூலம் நாட்டின் சாதாரண குடிமக்களின் மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் உறுதி செய்யும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து இதே மட்டத்தில் நீடித்தால், அதன் நன்மைகளை வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் மக்களுக்கு வழங்க அரசாங்கத்துக்கு முடியுமாகும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தற்போதைய எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விற்பனை மூலம் லாபம் ஈட்டும் எந்தவொரு நோக்கமோ அல்லது எண்ணமோ அரசாங்கத்திற்கு இல்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமான நிலை ஏற்பட்டவுடன் அதனை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
உலகயாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. அதனால் எமது நாட்டிலும் எரிபொருட்களின் அதிகரித்ததுடன் ஏனைய பொருட்களின் விலைகளும் ஓரளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றாலும் மக்களின் சுமையைக் குறைப்பதற்காக, அரசாங்கம் ஏற்கனவே ஒரு லீட்டர் டீசலுக்கு சுமார் 100 ரூபாவும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு சுமார் 20 ரூபாவும் நிவாரணமாக வழங்கி வருவருகிறது.
அத்துடன் சாதாரண சந்தையில் பொருட்களை வாங்குவதைப் போல எரிபொருளை உடனடியாக கொள்வனவு செய்ய முடியாது. எரிபொருளை முன்கூட்டியே இணங்கப்பட்ட விலைகளின் அடிப்படையில், முறையான விலை விமனு நடைமுறைகளைப் பின்பற்றியே கொள்வனவு செய்ய வேண்டும்.
அதனால், உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைந்ததுடன் அதன் நன்மையை உடனடியாக மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது சாத்தியமில்லை. தற்போது உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து இதே மட்டத்தில் நீடித்தால், அதன் நன்மைகளை வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் மக்களுக்கு வழங்க அரசாங்கத்துக்கு முடியுமாகும் என்றார்.
19 ஜூன் 2026 — பீஜிங், சீனா
இலங்கையின் பொது போக்குவரத்து துறையை மேம்படுத்தும் நோக்கில் 104 புதிய FOTON மெட்ரோ பேருந்துகள் இன்று பீஜிங்கில் இலங்கை அரசுக்கு அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டன. சீனாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான FOTON தயாரித்த இந்த பேருந்துகள், தீவின் நகர்ப்புற மற்றும் இடநகரப் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பீஜிங்கில் நடைபெற்ற கையளிப்பு விழாவில் சீன வர்த்தக அமைச்சக அதிகாரிகள், இலங்கை தூதரக பிரதிநிதிகள் உள்ளிட்ட இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஒத்துழைப்பு, இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்பை நவீனப்படுத்தும் நீண்டகால திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
புதிய பேருந்துகள் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், அதிக எரிபொருள் திறன், பயணிகளுக்கான வசதிகள் போன்ற அம்சங்களுடன் வருகிறது. கொழும்பு, கண்டி, களுத்துறை, யாழ்ப்பாணம் போன்ற அதிக நெரிசல் காணப்படும் பகுதிகளில் இவை முதன்மையாக பயன்படுத்தப்பட உள்ளன.
இலங்கை போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, பழைய வாகனங்களின் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த புதிய பேருந்துகள் சேவைகளை நிலைப்படுத்த உதவும். மேலும், சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்துக்கான அரசின் நீண்டகால நோக்கத்துக்கும் இது இணங்குகிறது.
இலங்கை–சீனா இருதரப்பு ஒத்துழைப்பில் இது மேலும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. பேருந்துகள் அடுத்த சில வாரங்களில் கொழும்பு துறைமுகத்தை அடையும் எனவும், அதன் பின்னர் தேசிய போக்குவரத்து ஆணையம் கட்டத்தார்முறையில் சேவைக்கு அறிமுகப்படுத்தும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
