குறித்த இளைஞனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாம் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி இருந்தனர்.

வவுனியாவை சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரண் (வயது 27) என்ற இளைஞன் , விபத்தில் சிக்கிய நிலையில் , கடந்த 08ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது மூளையின் செயற்பாடுகள் படிப்படியாக குறைவடைந்து மூளைச்சாவை அடைந்தார்.
அது தொடர்பில் இளைஞனின் பெற்றோருக்கு வைத்தியர்கள் அறிவித்ததை அடுத்து, குடும்பத்தினர் இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர்.

அதனை அடுத்து இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு வெள்ளிக்கிழமை (12-11-2025) வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன.
- மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை’யின் 35வது ஆண்டு நிறைவு.
- சுவிஸ்லாந்து கருத்தரங்கு – அரசியல்–வரலாற்றுப் பகுப்பாய்வு
- மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக சட்டத்திற்கு எதிரான பிரேரணை!
- சமூக நீதி கண்காணிப்பு குழுவின் பணிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்த தமிழ்நாடு அரசு
- தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை: பா.ஜ.க
- இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை புதன்கிழமை (18) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது!
அதேவேளை உயிரிழந்த ராஜ்கரனுக்கு சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாமால் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது.