சென்னையில் இன்று (ஜூலை 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 13,135 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன் தினம் (ஜூலை 16) ஆபரண தங்கம் கிராம், 13,150 ரூபாய்க்கும், சவரன், 1,05,200 ரூபாய்க்கும் விற்பனையானது .வெள்ளி கிராம், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம் – நேற்று (ஜூலை 17) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 13,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,04,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராம் ஐந்து ரூபாய் குறைந்து, 235 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம் – இந்நிலையில் இன்று (ஜூலை 18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 13,135 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நவம்பர் 17 ஆம் தேதி கனமழை!
- இலங்கையில் உள்ள அனைத்து வரி செலுத்துவோருக்கும் சிறப்பு அறிவிப்பு.
- இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு வீர வணக்கத்துடன் ஆழ்ந்த இரங்கல்
- “உடனடியாகத் தாக்குவோம்”: ரஷ்யாவின் அதிகரிக்கும் அச்சுறுத்தலும், முடக்கப்பட்ட சொத்துகள் மீதான ஐரோப்பாவின் உள் மோதலும்
- சிறப்புச் செய்தி: வினாத்தாள் கசிவு; இந்தியாவில் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
- 2025’ம் ஆண்டு கத்தாரில் பணியாற்றியபோது இறந்த இலங்கையர்களின் உறவினர்களுக்கு 197 மில்லியன் இழப்பிப்பீடு.
வெள்ளி நிலவரம் – வெள்ளி விலை மாற்றமின்றி இன்று ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.