சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பாக போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வினியோகம், கடந்த பிப்., 20ம் தேதி துவங்கியது. தி.மு.க., தலைமையகமான சென்னை அறிவாலயத்தில், மார்ச் 2 வரை, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் பெறப்படும் என, தி.மு.க., அறிவித்தது.
விருப்ப மனு அளிப்போர் எண்ணிக்கை அதிகரித்ததால், மார்ச் 6 வரை நீடிக்கப்பட்டது. அதன்படி, நேற்றுடன் விருப்ப மனுக்கள் வினியோகம் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள, 234 தொகுதிகளுக்கும், நேற்று மதியம் நிலவரப்படி, 11,000 விருப்ப மனுக்கள் விற்கப்பட்டு உள்ளன.
ஒரு மனுவின் கட்டணம் 1,000 ரூபாய். பூர்த்தி செய்த விண்ணப்ப கட்டணமாக பொதுத்தொகுதிக்கு, 25 ஆயிரம் ரூபாய், தனித் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாய் என வசூலிக்கப்பட்டது. அந்த வகையில், 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், போடிநாயக்கனுார் தொகுதிக்கும், அவரது மகன் ரவீந்திரநாத், ஆண்டிபட்டி தொகுதிக்கும் விருப்ப மனு அளித்தனர். திருவண்ணாமலை தொகுதியில், மீண்டும் போட்டியிட அமைச்சர் வேலு, கரூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஏராளமான தி.மு.க.,வினர் நேற்று, விருப்ப மனுக்கள் அளித்தனர்.
- தமிழக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைகளில், 5,944 மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கான இடங்கள் உள்ளன.
- மக்களின் மாநாடு | சோழன் மு.களஞ்சியம்
- திமுகவின் நாடகத்தாலும், வெற்று விளம்பரங்களாலும் தமிழக மக்கள் சலித்துவிட்டனர். – நயினார் நாகேந்திரன்
- கூட்டணியில் 10 இடங்களுக்கும் குறைவாகக் கிடைத்தால் நாங்கள் ராஜினாமா செய்வோம் – தே.மு.தி.க
- திருக்காட்டுப்பள்ளி கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும்! முனைவர் செந்தில்நாதன்
- ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
