இலங்கையை புரட்டிப் போட்ட ‘டிட்வா’ புயலுக்கு இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 191 பேர் மாயமாகியுள்ளனர். பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதையடுத்து அங்கு, அவசரநிலையை, அந்த நாட்டின் அதிபர் அநுர குமார திசநாயகே அறிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், 21 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுடன் சென்ற நம் விமானப் படைக்கு சொந்தமான விமானம் இலங்கையை அடைந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உதவி செய்து வருகின்றனர். கடற்படை வீரர்களும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை வெள்ளம் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்கத் தமிழக அரசு தயாராக உள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கோமாளியான கதாநாயகன் விஜய்!
- THE WORLD AT THE EDGE: Hypersonic WAR, ENERGY EMPIRES & THE COLLAPSE OF OLD ALLIANCES
- சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
- தமிழ்த் தேசியத்தை நேசித்த சமூகத் தலைவர் சின்னத்தம்பி சிற்றம்பலம் மாஸ்ரர் காலமானார்
- வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிசார் அழைத்துள்ளார்கள்.
- புளோரிடாவின் டம்பாவில் ஒரு கட்டிடத்திற்கு வெளியே ஒரு கார் கூட்டத்தின் மீது மோதியதில் நான்கு பேர் இறந்தனர், குறைந்தது 13 பேர் காயமடைந்தனர்
துயருறும் அந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் என மத்திய அரசு மூலம் உதவிக்கரம் நீட்டிட அதிகாரிகள் குழுவை அமைக்கிறோம். அவர்கள் மீண்டெழுந்திடத் துணை நிற்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.