இந்நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அவர்களது கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

போர் சூழலில் இவர் யாழிலிருந்து, துணிவுள்ள ஊடகவியலாளராக பணியாற்றி இருந்தார். இதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.
- காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெரும்பாலான தென்னை பயிர்களை சேதமாக்கிச் சென்றுள்ளது.
- அகவை வாழ்த்து – அக்டோபர் 04
- பயிர்க் கடன் தள்ளுபடி ஏமாற்றம்; தமிழக விவசாயிகள் சங்கம் வருத்தம்
- ஐரோப்பா விளிம்பில்: ரஷ்யா–உக்ரைன் போரின் புதிய பரிமாணம்
- பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டம்: அடக்குமுறைக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது – மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கிறது!
- சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலனுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக் குண்டுத்தாக்குதலையும் மேற்கொண்டனர்.
இதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
