நான் ஒரு Josephite என்பதை நினைத்து வருந்துகிறேன் !
இன்று நடிகர் விஜய் அவர்கள் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல திருச்சி வந்து st. joseph கல்லூரியில் உரை நிகழ்த்தி உள்ளார் !
ஆறு முழுக்க தண்ணீர் ஓடினாலும் நாயி நக்கிதான் குடிக்கும் என்பார்கள். அதைப்போல, எவ்வளவு பெரிய மேடை இருந்தாலும் அந்த எமனூர்தி மேலே ஏறி நின்றுதான் பேசுவார் நடிகர் விஜய் அவர்கள் !
Joseph கல்லூரி தன்னுடைய வரலாற்றில் ஒரு பெரிய அசிங்கத்தை பதிவு செய்து கொண்டது. Joseph கல்லூரியில் நடிகர் விஜய் அவர்கள் பேசியது அசிங்கமில்லை, அங்கே நடந்த சம்பாசினைகள் அசிங்கமாக இருந்தது.
நான் ஒரு joseph கல்லூரியின் முன்னாள் மாணவன் என்பதை இதுநாள் வரை அடைந்த பெருமைக்கு தீ வைத்து கொளுத்துகிறேன். திருச்சி கல்லூரிகளை பொறுத்தவரை “ஜாலி for Jamal” என்றும் “jail for Joseph” என்றும் சொல்வார்கள். ஏனென்றால் ஜோசப் கல்லூரியில் அவ்வளவு கட்டுபாடுகளோடு, ஒழுக்கம் நிறைந்த கல்லூரி. வெளியில் இருந்து வந்த மாணவர்களும் சரி, அங்கே படிக்கும் மாணவர்களும் சரி, அந்த கல்லூரி வளாகம் அவ்வளவு ஒழுக்கங்களால் நிரம்பி வழியும் !
ஜோசப் கல்லூரியில் படிப்பது என்பது பெருமைக்குரிய விடயம் என்று இன்றும் நினைப்பதற்கு காரணம் அங்கே கடைபிடிக்கப்படும் நல்லொழுக்கங்கள் !
ரவீந்தரநாத் தாகூர், பேரறிஞர் அண்ணா பெருந்தலைவர் காமராஜர் என்று பலர் வந்து பேசியிருக்கும் லாலி ஹால், பரத் ரத்னா டாக்டர் APJ அப்துல் கலாம் படித்த, 2003 ஆண்டில் அவர் பாரத நாட்டின் குடியரசு தலைவர் என்ற நிலையில் பெரிய கூட்டத்தில் உரை நிகழ்த்திய மாஹி கிரவுண்ட் என எல்லா பெருமைகளையும் தன்னுள்ளே வைத்திருக்கும் ஜோசப் கல்லூரி இன்று நடிகர் விஜய் மற்றும் அவரை காணவந்த கூட்டம் செய்த அசிங்கங்களையும் தன்னுள்ளே வைத்திருக்குமா ?

சுய ஒழுக்கமற்ற கூட்டம், மேடையில் பேசும் நடிகனுக்கு flying kiss, அதும் 18 வயது பெண்ணில் இருந்து 60 வயது பேரிளம் பெண் வரை பறக்கும் முத்தங்கள், இந்திய நாட்டில் மதிப்புமிகு மாநிலத்தின் முதல்வர் என்ற நினைப்பு மேடையில் நின்று பேசிய நடிகர் விஜய்க்கும் இல்லை, அதே போல வந்திருப்பது தமிழகத்தின் முதல்வர் என்ற மரியாதை காணவந்த கூட்டத்திடமும் இல்லை என்பது எனது கவலை இல்லை.
எனது கவலையெல்லாம் எப்படி இருந்த Joseph கல்லூரி, இப்படி ஆயிடுச்சே என்ற வருத்தம்தான். அங்கிருந்த சில நண்பர்களிடம் இது குறித்து பேசினேன். நடிகர் விஜய் லயோலா கல்லூரி மாணவர் என்பதன் அடிப்படையில், லயோலோ கல்லூரியும், Joseph கல்லூரியும் ஒரே கவுன்சில் கீழே இயங்குபவை என்பதாலும் இது நடந்து இருக்கிறது என்றார்கள் !
எது எப்படியோ Joseph college எனும் “தூய வளனார் கல்லூரி” இன்று கல்லூரி வளாகத்திற்குள் விசில் பறந்து, flying kiss பறந்து தன்னுடைய தூய என்ற பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டு புதிய வரலாறை பதிவு செய்து கொண்டது.
எனது கவலையெல்லாம், வந்து சென்ற கூட்டத்தை பற்றியது அல்ல, வாழ்த்த கோயிலின் புனிதம் (St. Joseph college) பற்றியது.

தமிழம் செந்தில்நாதன்