| தமிழ் நாட்காட்டி ஜூலை 2026 | |
|---|---|
| அமாவாசை | 14-ஜூலை-2026 செவ்வாய்கிழமை |
| பௌர்ணமி | 29-ஜூலை-2026 புதன்கிழமை |
| கார்த்திகை | 10-ஜூலை-2026 வெள்ளிக்கிழமை |
| சஷ்டி விரதம் | 19-ஜூலை-2026 ஞாயிறு |
| சங்கடஹர சதுர்த்தி | 03-ஜூலை-2026 வெள்ளிக்கிழமை |
| சதுர்த்தி | 17-ஜூலை-2026 வெள்ளிக்கிழமை |
| பிரதோஷம் | 12-ஜூலை-2026 ஞாயிறு 26-ஜூலை-2026 ஞாயிறு |
| திருவோணம் | 02-ஜூலை-2026 வியாழன் 30-ஜூலை-2026 வியாழன் |
| மாத சிவராத்திரி | 12-ஜூலை-2026 ஞாயிறு |
| ஏகாதசி | 10-ஜூலை-2026 வெள்ளிக்கிழமை 25-ஜூலை-2026 சனிக்கிழமை |
| அஷ்டமி | 07-ஜூலை-2026 செவ்வாய்கிழமை 21-ஜூலை-2026 செவ்வாய்கிழமை |
| நவமி | 08-ஜூலை-2026 புதன்கிழமை 22-ஜூலை-2026 புதன்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | – |
| திருமண நாட்கள் | 02-ஜூலை-2026 வியாழன் தேய்பிறை 05-ஜூலை-2026 ஞாயிறு தேய்பிறை 12-ஜூலை-2026 ஞாயிறு தேய்பிறை |
| திருவிழாக்கள் | 02-ஜூலை-2026 வியாழன் தேவமாதா காட்சியருளிய நாள் 29-ஜூலை-2026 புதன்கிழமை சங்கரன்கோவில் தபசு |
இன்றைய ராசி பலன் 18 ஜூலை 2026 சனிக்கிழமை
மேஷ ராசி :
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வர். புது பொருள் சேர்க்கை உண்டாகும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷப ராசி:
எதிலும் போராடி வெற்றி பெற வேண்டியிருக்கும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். உடன் இருப்போரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
மிதுன ராசி :
குடும்பத்தினர் பாச மழை பொழிவர். வெளிப்படையான பேச்சால் சில பிரச்சனைகள் வரும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கடக ராசி :
நம்பியவருக்கு நல்லுதவி செய்ய முடியும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
சிம்ம ராசி :
குடும்ப நிதி நிலைமை சீர் பெரும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. புது நட்பால் பல நன்மைகள் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கன்னி ராசி :
பல நாள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
துலாம் ராசி :
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வித்தியாசமான அணுகுமுறையால் நிறைய சாதிக்க முடியும். யாரிடத்திலும் கடன் வாங்க வேண்டாம் தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
விருச்சிக ராசி:
குடும்பத்தில் சுமுகமான சூழல் உருவாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
தனுசு ராசி:
குடும்பத்தில் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். பல எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம் வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறகும்.
மகர ராசி:
குடும்ப கௌரவத்தை உயர்த்த முடியும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
கும்ப ராசி:
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டு. தேக ஆரோக்கியம் பலம் பெரும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மீன ராசி:
எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 13-07-2026 To 19-07-2026

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, மனதில் நினைத்த காரியம் நாளடைவில் நடந்தேறும். குடும்ப வருமானம் சொல்லும்படி இருக்கும். சோர்வு நீங்கி எதிலும் உற்சாகம் ஏற்படும். ஞாபக மறதித் தொல்லை அடிக்கடி ஏற்படும். வாழ்க்கையில் சிறப்பான ஒரு முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும் ஆன்மிக ரீதியான செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பல நல்ல விஷயங்கள் நடக்கும். கடன் பிரச்சனை படி படியாக குறைய தொடங்கும், வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. பெற்றோர்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர்களிடையே இருந்து வந்த மன கசப்பு நீங்கும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிக்க முடியும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் லாபம் வரும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சாதகமான சூழ்நிலைகள் உருவாக நிறைய வாய்ப்புள்ளது. நீண்ட நாள் எண்ணங்களும், திட்டங்களும் நல்லமுறையில் செயல்படும். சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். அண்டை, அயலாருடன் கொண்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உடல் உபாதைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தேவையற்ற செலவுகள் ஏதும் செய்யாமல் பார்த்துக்கொள்ளவும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம்: தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்துடன் பல முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டிவரும். ஒவ்வொரு விவகாரத்திலும் அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் தொடங்கும். குடும்பப் பெரியோர்கள் மீது நல்ல மரியாதை உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உடன்பிறப்பு வகையில் சுமூக உறவு ஏற்படும். புது வீட்டிற்கு மாற வேண்டிய சூழல் உருவாகும். கடன் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க முடியும். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிப்படவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகளை ஏற்பட்டாலும், அதை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். மன தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்த முடியும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். தேக ஆரோக்கியத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும். முன்பின் தெரியாத நபர்களுக்கு பொருளுதவி செய்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணைவர் பக்கபலமாக இருப்பார். ஒரு சில நேரங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தர்ம காரியங்களுக்கு நிறைய செலவழிக்க வேண்டி இருக்கும். உற்றார், உறவினர்களிடம் சுமுக உறவு காணப்படும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகம் இருக்கும். திட்டமிட்ட காரியத்தை விரைவில் முடிக்க முடியும். மனதில் தர்ம சிந்தனைகளைத் தூண்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரியமானவர்களுடன் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் அகலும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். உடல் நலம் சீரான நிலையில் இருக்கும். குடும்ப வருமானம் வெகுவாக உயரும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய சொத்து ஒன்றினை வாங்கும் முயற்சியில் தடை உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீண் செலவுகள் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். உத்யோகத்தில் பொறுமை அவசியம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியும். மனக்குழப்பங்கள் படிப்படியாக குறையும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சலால் சில சமயம் உடல் நலம் பாதிக்கலாம், முன்கூட்டியே திட்டமிட்டு காரியத்தில் ஈடுபடுவதன் மூலம் ஒரு சில இழப்புகளை தவிர்க்க இயலும். குடும்பத்தில் சலசலப்பான சூழல் நிலவும். கொடுக்கல், வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த சில நல்ல விஷயங்கள் நடக்காமல் போகும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். தொலை தூர பயணங்களால் ஆதாயம் இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிலும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நிதி நிலைமை சீரடையும். குடும்ப வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்க முடியும். உடன்பிறப்புகளால் சில மனவருத்தம் ஏற்படும். உறவினர்களோடு இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்து காணப்படும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். உணவு கட்டுப்பாடு அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரியமானவர்களுடன் அனுசரணை அவசியம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பர். புதிய தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல புதுமையான விஷயங்களை செய்ய முடியும். யாருக்கும் யோசிக்காமல் வாக்குறுதிகள் தர வேண்டாம். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க முடியும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அண்டை, அயலாரோடு மனஸ்தாபம் தோன்றலாம். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. புது வீடு மாற்றத்திற்கு நிறைய வாய்ப்புண்டு. உடன்பிறப்பு வகையில் சில மனக்கசப்புகள் வரலாம். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பாராத பொருள் விரையம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் சில நேரங்களில் விரோதமாக செயல்படலாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : துர்கையை வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களால் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பயனடைவர். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகம் உண்டு. எந்த ஒரு காரியத்திலும் பிறரை நம்பாது நேரடியாக செயலில் இறங்குவது சிறப்பு. பொருளாதார சிரமங்கள் வெகுவாகக் குறைந்து சேமிப்பு உயர்வடையத் துவங்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. குடும்பத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். வாகனம் யோகம் உண்டு. தேவையில்லாத வீண் செலவுகளும் ஏற்படும். மற்றவர்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு. தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
பரிகாரம் : நவகிரகத்தை தினமும் 9 முறை சுற்றவும்

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வெளிவட்டாரத்தில் நிறைய புது தொடர்புகள் கிடைக்கும். அடுத்தவரிடம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. மன வலிமை கூடும். குடும்ப கௌரவத்தை உயர்த்த முடியும். பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். உடல் உபாதைகள் படி படியாக குறையும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். உறவினர்கள் சிலர் உங்கள் இல்லம் நாடி வருவர். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு வரும்.குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பிறகு சீராகும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நெடுநாட்களாக மனதில் திட்டமிட்டு வைத்திருக்கும் காரியத்தினை சாதித்துக்கொள்ள முடியும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் யாரும் நம்பை புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். திட்டமிட்ட காரியத்தை விரைவில் முடிக்க முடியும். இக்கட்டான சூழலில் அமைதி காப்பது அவசியம். பொருள் வரவு தொடர்ந்தாலும், பொருளாதார சிக்கல்கள் தொடரும். குடும்ப பெரியவர்களோடு மனஸ்தாபம் தோன்றி மறையும். உறவினர்கள் மத்தியில் புகழ், கெளரவம் உயரும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழல் உருவாகும். கடன் விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சகஜ நிலைக்கு திரும்ப முடியும். தியானம் மனதிற்கு அமைதியைத் தரும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
பரிகாரம் : வரசித்தி விநாயகரை வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் தாராளமாக ஈடுபடலாம். எதிலும் தீர யோசித்து முடிவு எடுப்பது நல்லது. ஓயாத அலைச்சல் காரணமாக உடலில் அசதியும், சோர்வும் ஏற்படும். இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது வந்துபோகும். வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் உஷ்ணம் தொடர்பான தொந்தரவு இருக்கும். கணவன் மனைவிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து போகும். எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தெய்வ பிராத்தனைகள் நிறைவேற்றும் வாய்ப்புகள் கூடிவரும். உத்யோகத்தில் உங்க கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : குருபகவானை வணங்கி வழிபடவும்
ஜூலை மாத ராசி பலன்கள் 2026
| ஜூலை மாத ராசி பலன்கள் 2026 |
| (2026) ஜூலை மாத பலன்கள் (01.07.2026 முதல் 31.07.2026) பராபவ வருடம் ஆனி மாதம் 17ம் தேதி ஆடி மாதம் 15ம் தேதி வரை வாக்கிய பஞ்சாங்கப்படி 01-07-2026 முதல் 31-07-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. உங்கள் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி, அந்தரம் மற்றும் கோச்சாரம் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். ஜாதக ரீதியாக யோக திசை நடைபெறுமானால் வரும் கெடு பலன்கள் மாறி நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த மாதம் கிரக நிலை மாற்றம் : 04.07.2026 – சிம்ம – சுக்கிரன் 07.07.2026 – மிதுன – புதன் வக்ர கதி 17.07.2026 – கடக – சூரியன் 24.07.2026 – மிதுன – புதன் 27.07.2026 – மீன – சனி வக்ர கதி ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார் PH.D ASTROLOGY (அலைபேசி: 09003019831) |
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு மாதமாக இருக்கும். மனதில் தைரியமும் உற்சாகமும் அதிகரிக்கும். நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. குடும்பத்திற்காக சில செலவுகளை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், மாதத்தின் இரண்டாம் பாதியில், விஷயங்கள் சாதகமாக மாறத் தொடங்கும். பயணங்கள் சாதகமாக இருக்காது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடவும். அதேவேளையில் உங்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும், புதிய சொத்துக்கள் சேரும். யாருக்கும் கடன் கொடுப்பதையோ, புதிய முதலீடுகள் செய்வதையோ தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீகப் பயணங்களுக்கு வாய்ப்புகள் அமையும். எனினும், உறவுகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், போதுமான ஓய்வு எடுக்கவும் கவனம் தேவை. உத்யோகத்தில் முக்கிய முடிவுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. நெருங்கிய வட்டத்திலுள்ளவர்களும் உங்கள் தொழில் வாழ்க்கையில் உதவிகரமாக இருப்பர். தொழில், வியாபாரம் சீராக நடைபெறும்
சந்திராஷ்டமம் : 23,24,25,26 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் சிறப்பான மற்றும் அனுகூலமான பலன்களைத் தரும். உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். மனதில் பட்டதை தைரியமாக செய்து முடிக்க முடியும். சிறிய அளவிலான தவறான புரிதல்கள் ஏற்படலாம். எதிர்கால திட்டங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலைமை சீராக இருக்கும். எனினும், புதிய முதலீடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் சற்று கவனம் தேவை. ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க இது மிகச் சிறந்த நேரமாகும். புது திட்டங்கள் தொடர்பான பயணங்களுக்குத் தயாராக இருக்கவும், ஏனெனில் அவை நிச்சயமாக வெற்றியைத் தேடித்தரும். தற்போதுள்ள உடல் நலப் பிரச்சினைகள் தீரக்கூடும். மனதில் தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் மன அமைதிக்கு வழிவகுக்கும், ஆனால் தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது மன உளைச்சலை குறைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடியே எல்லாம் நலப்படியே நடக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பணியிடத்தில் உயர்வுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 26,27,28 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது நிதானமும் பொறுமையும் தேவை. உங்கள் மனத் தெளிவும் ஆற்றலும் கணிசமாக அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக மிகவும் அனுகூலமாக இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் கவலைக்குரியதாக அமையலாம், எனவே, உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட உறுதிப்படுத்திக்கொள்ளவும். முதலீடுகள் செய்வதற்கு இது ஏற்ற காலமாக இருந்தாலும், பணப் பரிவர்த்தனைகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் நிதி விவகாரங்களில் கவனம் செலுத்தவும், மற்றும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க முயலவும். எதிர்பாராத பண வரவு மற்றும் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். திருமண முயற்சிகள் சுமுகமாக முடியும். தம்பதியரிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இருப்பினும், வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வைத் தவிர்க்க முறையான ஓய்வு அவசியம். குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். பணியில் தடைகளைச் சந்திக்க நேரிடலாம், தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், புதிய வாய்ப்புகளும் தேடி வரும். குறிப்பாக வெளிநாட்டுத் தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எனினும், அவசரப்பட்டு எந்த முதலீடுகளையும் செய்ய வேண்டாம்.
சந்திராஷ்டமம் : 1,2,3,4 & 28,29,30,31 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் சுய மதிப்பையும் உணர்ச்சிப்பூர்வமான எல்லைகளையும் நீங்கள் வலுவாகக் கடைப்பிடிக்க இதுவே சரியான நேரம். இது நீங்கள் ஜொலிப்பதற்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்கும் ஏற்ற காலமாகும். நீண்ட கால இலக்குகள் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும் நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்காது. மாதத்தின் நடுப்பகுதி நிதி வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. புதிய திட்டங்களைத் தொடங்க இது ஏற்ற நேரமல்ல. பயணங்களுக்குத் தயாராக இருக்கவும், ஏனெனில் அவை குடும்ப உறவுகளை வலுப்படுத்தக்கூடும். உங்கள் பெற்றோரின் ஆசிர்வாதம் இல்லாமல் உங்கள் பணிகளை முழுமையாக முடிக்க முடியாது. உடல் நலனில் கவனக்குறையாக இருக்க வேண்டாம். சரியான நேரத்தில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை உங்கள் நல்வாழ்வை உறுதி செய்யும். இந்த காலகட்டம் தொழில் மற்றும் பண விஷயங்களில் சாதகமான பலன்களைத் தரும். மாதத்தின் முற்பகுதியில் உங்கள் உணர்வுகள் மற்றும் தேவைகளை நீங்கள் தெளிவாக உணர முடியும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உங்களைச் சுற்றியுள்ள உறவுகளில் உள்ள தெளிவற்ற தன்மைகள் விலகி, உண்மையான புரிதல் உண்டாகும். உங்கள் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தவும். தொழில் மற்றும் வருமானத்தில் புதிய வழிகள் பிறக்கும்.
சந்திராஷ்டமம் : 4,5,6 & 31 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதத் தொடக்கம் அமைதியாக அமையலாம். இது நீங்கள் ஓய்வெடுத்துப் புத்துணர்ச்சி பெறத் தூண்டக்கூடும். உங்கள் கருத்துகளுக்கு நல்ல மதிப்பும் முக்கியத்துவமும் உண்டு. சமூகத்தில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். பண விவகாரங்களும் உங்கள் தனிப்பட்ட ஈர்ப்புத்திறனும் மிகவும் சிறப்பாக அமையும். கோபத்தையும், உணர்ச்சிவசப்படுவதையும் தவிர்க்கவும். மற்றவர்கள் சொல்வதைக் கேட்பது உங்கள் பணிக்கு நன்மை பயக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும். பயணம் செய்வது மிகவும் பயனுள்ளதாக அமையும். உங்கள் தொடர்புகளின் ஆதரவு, குடும்பத்தில் ஒரு இனிமையான சூழலைப் பராமரிக்க உதவும், மேலும் குடும்பத்தின் நிதி நிலைமை வலுவாக இருக்கும். உங்கள் உறவுகள் மேம்படும். உடல் அல்லது மனச் சோர்வுக்கான அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம்.மாதத்தின் முற்பகுதியில் சில மனக்குழப்பங்களும் தேவையற்ற விரயங்களும் ஏற்படலாம். உயர் அதிகாரிகளுடனான கருத்து வேறுபாடுகள் பிரச்சனைகளை அதிகப்படுத்தி, பணியிடச் சிக்கல்களுக்கு வழிவகுத்து, உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும். தொழில்முறை நடவடிக்கைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். தொழில் ரீதியான முன்னேற்றமும் புதிய சீரமைப்புத் திட்டங்களைத் தொடங்க சாதகமான சூழலும் உருவாகும்.
சந்திராஷ்டமம் : 6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் ஆற்றலைப் பாதுகாத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் தனியொருவராகச் சுமக்க முயலாமல், மற்றவர்களின் உதவியை நாடவேண்டிவரும். நிதித்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், குடும்பத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளைக் குறைத்து, பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். கடின உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் வீட்டுச் சூழலைப் பாதிக்கலாம். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் புதிய திட்டங்கள் உருவாகலாம். எவருமானம் நன்றாக இருந்தாலும், தேவையற்ற பயணங்கள் மற்றும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, நிர்வகிப்பதில் கவனம் தேவை. மாத முற்பகுதியில் குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் தலைதூக்கலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. சிறிய உடல் நலக் குறைபாட்டைக் கூட அலட்சியப்படுத்த வேண்டாம். வேலையில் கூடுதல் கவனம் தேவை. கடின உழைப்பு தொழிலில் சிறந்த பலன்களைத் தரும், மேலும் இக்காலத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் வாய்ப்புள்ளது. பணி மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் புதிய திட்டங்களில் வெற்றியை எதிர்பார்க்கலாம். எனினும் பண விஷயங்களில் நிதானமும், பிறர் ஆலோசனையை ஏற்பதில் எச்சரிக்கையும் தேவை. குடும்பப் பிரச்சினைகளை தீர்க்க முடியும். தடைபட்ட அனுமதிகள் மற்றும் திட்டங்கள் மீண்டும் செயல் வடிவம் பெறும். புது முயற்சிகளுக்கு உங்கள் புத்திசாலித்தனம் கைகொடுக்கும். நீங்கள் பேசுவதற்கு முன் நன்கு யோசித்துச் செயல்படவும். ஓய்வு மற்றும் அமைதியான செயல்பாடுகள் மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும். சட்ட வழக்குகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். நிதிநிலை சீராக இருந்தாலும், எதிர்பாராத ஆசைகள் மற்றும் மற்றவர்களைக் கவர பணம் செலவழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கலாம், எனவே வரவு செலவு கணக்குகளில் கவனம் தேவை. ஆன்மீக வழிபாட்டினை மேற்கொள்ள முடியும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லையென்றாலும், உணவு மற்றும் ஆரோக்கியத்தில் வழக்கமான கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், இது தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்தவும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் வளர்ச்சி நிறைந்ததாகவும், சில கவனத்துடன் செயல்பட வேண்டியது இருக்கும். அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தி, பணத்தைச் சேமிக்க முயற்சிக்கவும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டாம், ஏனெனில், இது உறவுகளில் கசப்புணர்வை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், உங்கள் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். தடைபட்ட பொருளாதார வரவு வந்து சேரும். அடமானம் வைத்த நகைகள் அல்லது சொத்துக்களை மீட்கும் வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் ஏற்படும். புதிய திருப்பங்கள் அல்லது நன்மைகள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் திருமண வாழ்க்கைக்கான இனிமையான சூழல் உருவாகும். குடும்பக் கலந்துரையாடல்களும் சிந்தனைமிக்க திட்டமிடலும் தேவையற்ற பின்னடைவுகளைத் தவிர்க்க உங்களுக்கு உதவும்.உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் மற்றும் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். துணிச்சல் அதிகரிக்கும். மன அழுத்தத்தைச் சந்திக்க நேரிடலாம். வீட்டில் உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். பயணங்களால் குறிப்பிடத்தக்க நன்மைகள் ஏதும் கிடைக்காது. குடும்பச் சூழல் சற்று இறுக்கமாக இருக்கலாம்கீழ்நிலையில் உள்ளவர்களால் நன்மைகளும், நிதி வளர்ச்சியும் பிரகாசமாக இருக்கும். பண வரவு வெளியில் சொல்லுபடி இருக்கும். பொருளாதார ரீதியாக உங்கள் வரவு செலவுத் திட்டத்தைக் கவனமாகக் கண்காணிக்கவும், ஏனெனில் பணத்திற்குக் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடுகள் மற்றும் சேமிப்புகளை மேற்கொள்ள சாதகமான சூழல் நிலவுகிறது. குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் உறவு பலப்படும். நீண்டகால உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நல்ல முன்னேற்றம் அல்லது நிவாரணம் கிடைக்கும். சீரான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி புத்துணர்ச்சி தரும். பணியிடத்தில் மேற்கொள்ளும் கடின உழைப்பு நல்ல பலன்களைத் தரும். தொழில், வியாபாரத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும், எதிர்பாராத வெற்றிகளும் உண்டாகும்.
சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கடின உழைப்பு உங்களுக்கு நிலையான வெற்றியைத் தரும். உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குடும்ப வருமானம் உயர வாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையற்ற தவறான புரிதல்களைத் தவிர்க்க, தெளிவான மற்றும் நிதானமான தகவல் பரிமாற்றத்தில் கவனம் செலுத்தவும். புதிய திட்டங்களைத் தொடங்க இது சாதகமான நேரம் அல்ல. குடும்பச் சூழல் மகிழ்ச்சியாகவும், பரஸ்பர நல்லிணக்கம் நிலவுவதாகவும் இருக்கும். பொருளாதார ரீதியாக சுமாரான ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், சரியான திட்டமிடல் மூலம் வெற்றியைத் தழுவலாம் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் சுமுகமான சூழலும் நிலவும். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த காரியங்கள் சுமூகமாக முடியும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சீரான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உங்கள் திறமைக்குரிய வெகுமதி கிடைக்கும். தொழில் ரீதியான நிலையான வளர்ச்சி மற்றும் திருப்திகரமான நிதி நிலையை வழங்கும். உத்தியோகத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிடல்கள் மூலம் நல்ல லாபம் ஈட்டலாம்.
சந்திராஷ்டமம் : 16,17,18ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் முழுவதும் கலவையான பலன்களைத் தரும். மாதத்தின் நடுப்பகுதியில் குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால், குறிப்பாக நீங்கள் வீட்டுத் தேவைகளுக்காகவோ செலவு செய்தால், கவனமான வரவு செலவுத் திட்டமிடல் அவசியமாகிறது. மனக் குழப்பங்கள் மற்றும் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் கூடுதல் கவனம் தேவை. உங்கள் வருமானம் சீராக இருக்கும் என்றாலும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. உங்கள் ராசி நாதன் சனியின் நிலையால், உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் தேவை. வயிறு மற்றும் வாய் தொடர்பான உபாதைகள் ஏற்படலாம் என்பதால், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவும். ஜூலை 16-க்குப் பிறகு, வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகலாம். ஆன்மீகம் விஷயங்களில் உங்கள் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது அனுசரித்துச் செல்வது உறவை பலப்படுத்தும். உத்யோகத்தில் பணிச்சுமை மிக அதிகமாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. மிகுந்த ஆர்வமும் உற்சாகமும் தொழில் வளர்ச்சியையும் சாதகமான முடிவுகளையும் பெற்றுத்தரும்.
சந்திராஷ்டமம் : 18,19,20,21 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். சுயநம்பிக்கை அதிகரிக்கக்கூடும் என்றாலும், முன்முயற்சி இல்லாமை நிதி நிலையைப் பாதிக்கலாம். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதே நேரம், வேலை செய்யும் சூழல் சுமூகமாக இருக்கும். பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குடும்பத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும், கையில் பணம் புரளும். திட்டமிட்ட காரியங்களில் சிறு தாமதம் ஏற்படலாம். நிதி விஷயங்களில் சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத செலவுகள் வரக்கூடும் என்பதால், விவேகத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு உடனே சரியாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளில் கவனம் செலுத்துவது நல்லது. சாதகமான கிரக நிலைகளால், நீண்டகால நோய்கள் குணமாகி உங்கள் உடல்நலம் சிறப்பாக இருக்கும். குடும்ப விவகாரங்களில் கூடுதல் கவனமும் வெளிப்படையான உரையாடலும் தேவை. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு இல்லாததால் பணியிடத்தில் முன்னேற்றம் தடைபடலாம்.
சந்திராஷ்டமம் : 21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.