ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் டெக்சாஸில் முதல் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் டெக்சாஸில் முதல் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார்.

டெக்சாஸின் பிரவுன்ஸ்வில்லில், கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்கா முதல் சுத்திகரிப்பு நிறுவனம் திறக்கிறது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த சாதனை இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முதலீட்டின் உதவியுடன் கிடைத்தது.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க 300 பில்லியன் டாலர் ஒப்பந்தமாகும். இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தமாகும். மேலும் இது அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும், அமெரிக்காவின் எரிசக்தி துறைக்கும், தென் டெக்சாஸின் மக்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.

இந்த மிகப்பெரிய முதலீட்டிற்காக, இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளிகளுக்கும், அந்நாட்டின் மிகப்பெரிய தனியார் ஆற்றல் நிறுவனமான ரிலையன்ஸ்க்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்கா அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தியது மற்றும் வரிகளைக் குறைத்தது ஆகிய காரணங்களாலேயே, பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் மீண்டும் நமது நாட்டிற்கே ஈர்க்கப்பட்டுள்ளன.

பிரவுன்ஸ்வில் துறைமுகத்தில் அமையவுள்ள இந்தப் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய புதிய உத்வேகத்தை அளிக்கும். நமது தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தும்; அமெரிக்காவின் எரிபொருட்கள் உற்பத்தியைப் பெருக்கும்; பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பொருளாதாரப் பலன்களை ஈட்டித்தரும்.

உலகிலேயே மிகவும் தூய்மையான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாகத் திகழும். இது உலகளாவிய ஏற்றுமதி வர்த்தகத்திற்கு பேருதவியாக இருக்கும். நீண்ட காலமாகவே தேவைப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தும். எரிசக்தி துறையில் வளர்ச்சியை கொண்டு வருவதையே அமெரிக்கா எப்போதும் முதன்மையாக கொண்டிருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Related posts

84 ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை தூதரகத்திற்கு கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சங்ககிரியில் பாரவுந்து தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்பு பணி மையம் (ஆட்டோ நகர்) அமைத்துத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அன்னை பூபதி – விளையாட்டுப்போட்டி 2026 சுவிஸ்