| தமிழ் நாட்காட்டி மார்ச் 2026 | |
|---|---|
| அமாவாசை | 18-மார்ச்-2026 புதன்கிழமை |
| பௌர்ணமி | 03-மார்ச்-2026 செவ்வாய்கிழமை |
| கார்த்திகை | 23-மார்ச்-2026 திங்கட்கிழமை |
| சஷ்டி விரதம் | 24-மார்ச்-2026 செவ்வாய்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 06-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை |
| சதுர்த்தி | 22-மார்ச்-2026 ஞாயிறு |
| பிரதோஷம் | 01-மார்ச்-2026 ஞாயிறு 16-மார்ச்-2026 திங்கட்கிழமை 30-மார்ச்-2026 திங்கட்கிழமை |
| திருவோணம் | 15-மார்ச்-2026 ஞாயிறு |
| மாத சிவராத்திரி | 17-மார்ச்-2026 செவ்வாய்கிழமை |
| ஏகாதசி | 5-மார்ச்-2026 ஞாயிறு 29-மார்ச்-2026 ஞாயிறு |
| அஷ்டமி | 11-மார்ச்-2026 புதன் 26-மார்ச்-2026 வியாழன் |
| நவமி | 12-மார்ச்-2026 வியாழன் 27-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | 19-மார்ச்-2026 வியாழன் உகாதி தெலுங்கு வருடப் பிறப்பு 21-மார்ச்-2026 சனிக்கிழமை ரமலான் பண்டிகை 31-மார்ச்-2026 செவ்வாய் மஹாவீர் ஜெயந்தி |
| திருமண நாட்கள் | 05-மார்ச்-2026 வியாழன் தேய்பிறை 06-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை தேய்பிறை 08-மார்ச்-2026 ஞாயிறு தேய்பிறை 15-மார்ச்-2026 ஞாயிறு தேய்பிறை தேய்பிறை 16-மார்ச்-2026 திங்கட்கிழமை தேய்பிறை தேய்பிறை 25-மார்ச்-2026 புதன்கிழமை வளர்பிறை |
| திருவிழாக்கள் | 02-மார்ச்-2026 திங்கட்கிழமை மாசிமகம் 03-மார்ச்-2026 செவ்வாய் ஹோலிப் பண்டிகை 14-மார்ச்-2026 சனிக்கிழமை காரடையான் நோன்பு 19-மார்ச்-2026 வியாழன் உகாதி தெலுங்கு வருடப் பிறப்பு 27-மார்ச்-2026 வெள்ளிக்கிழமை ஸ்ரீ ராமநவமி |
இன்றைய ராசி பலன் 16 மார்ச் 2026 திங்கள்
மேஷ ராசி அன்பர்களே,
மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் மேலோங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
ரிஷப ராசி நேயர்களே,
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த பதட்ட நிலை குறையும். எந்த ஒரு செயலையும் பொறுமையாக செய்வது நல்லது. புது பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மிதுன ராசி அன்பர்களே,
மிதுன ராசி நேயர்களே, பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். இரவு நேர பயணங்களை குறைக்கவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கடக ராசி நேயர்களே,
கடக ராசி நேயர்களே, குடும்ப நபர்கள் நேசக்கரம் நீட்டுவர். அனாவசிய செலவுகளை குறைக்கவும். நண்பர்கள் சிலர் எதிராக செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் சில இடையூறுகள் இருக்கும்.
சிம்ம ராசி நேயர்களே,
சிம்ம ராசி அன்பர்களே, குடும்ப உறவுகளில் சண்டை சச்சரவுகள் வந்து போகும். சிக்கனமாக வாழ பழகிக்கொள்ளவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி ராசி நேயர்களே,
கன்னி ராசி நேயர்களே, அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். நல்லவர்களின் தொடர்பால் ஆதாயம் உண்டு. வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
துலாம் ராசி நேயர்களே,
துலாம் ராசி நேயர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். எல்லாரிடமும் நட்புடன் பழகும் சுபாவம் இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
விருச்சிக ராசி நேயர்களே,
விருச்சிக ராசி நேயர்களே, எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தேவை இல்லாத சிந்தனைகளை தவிர்க்கவும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
தனுசு ராசி நேயர்களே,
தனுசு ராசி நேயர்களே, சொந்தங்களால் வந்த வருத்தங்கள் அகலும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மகர ராசி நேயர்களே,
மகர ராசி நேயர்களே, புது முயற்சிகள் நாளடைவில் கைகூடும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். உத்யோத்தில் ஆதரவு பெருகும்.
கும்ப ராசி நேயர்களே,
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தினரிடம் சுமுக உறவு ஏற்படும். யாருடைய பேச்சுக்கும் செவி சாய்க்க வேண்டாம். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மீன ராசி நேயர்களே,
மீன ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனைகள் குறையும். வேண்டியவர்கள் சிலர் பகைமை பாராட்டுவர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 16-03-2026 To 22-03-2026

மேஷ ராசி அன்பர்களே,
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்பத்தில் எதிர்பார்த்த வருமானமும் அதற்கேற்ற செலவுகளும் இருந்து கொண்டே இருக்கும். தெய்வ காரியங்களில் ஈடுபாடும் உண்டாகும். அண்டை, வீட்டாரிடம் கவனமுடன் செயல்படுவது நல்லது. சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். சுற்று வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். . பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். மருத்துவ செலவுகள் அவ்வப்போது வரும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். அடுத்தவர் மனம் வருந்தும்படி பேச வேண்டாம். கணவன் மணவிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை இருக்கும். வெளி நபர்களிடம் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் ஒன்று நடந்து முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்.

ரிஷப ராசி அன்பர்களே,
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். குல தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். வெளியிடங்களில் நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்னை வராமல் தடுக்கும். குடும்ப நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பல எதிர்ப்புகளை சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். கடன் நெருக்கடிகள் குறையும். திட்டமிட்ட பயணங்களால் நிறைய நன்மைகள் உண்டு. உங்களது செயல்கள் அனைத்தும் மற்றவர்களை கவரும்படி இருக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெற முடியும். உத்யோகத்தில் அனுகூலமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்.

மிதுன ராசி அன்பர்களே,
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார ராசி, குடும்பத்திற்காக எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பண வரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். உண்ணும் உணவிலும், உபயோகப்படுத்தும் பொருளிலும் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் எப்போதும் பக்கபலமாக இருப்பர். நீண்ட நாட்களாக தடைப்பட்ட விஷயங்கள் சீக்கிரத்தில் முடியும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். உங்கள் திட்டங்களை பற்றி விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். கையில் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.
பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்.

கடக ராசி அன்பர்களே,
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் புத்திசாலித்தனத்தால் அதை எதிர்த்து போராட முடியும். புது வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. புது நண்பர்களின் அறிமுகமம் அவர்களால் ஆதாயமும் உண்டு. நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் கைகொடுப்பர். உடன்பிறப்புகளால் அலைச்சல், வீண் செலவுகள் ஏற்படும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்ப பிரச்சனைகளை திறமையாக கையாள முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே,
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். உற்றார், உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மறைமுக எதிரிகளின் தொல்லை குறையும். உடல் உபாதைகள் படிப்படியாக குறையும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். கணவன் மனைவிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தேவையில்லாத செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இதமான சூழல் இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

கன்னி ராசி அன்பர்களே,
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. மன சஞ்சலங்களும் குழப்பங்களும் ஏற்படாமல் இருக்க தினமும் தியானம் செய்யவும். குடும்ப பெரியோர்களின் அறிவுரை உதவியாக இருக்கும்.கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உங்களை சுற்றி பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : மகாலக்ஷ்மியை வணங்கி வழிப்படவும்.

துலாம் ராசி அன்பர்களே,
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, நீண்ட நாள் பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். தொடர் அலைச்சல் காரணமாக உடலில் அசதியும், சோர்வும் ஏற்படும். உறவினர்களிடையே இருந்து வந்த மன கசப்பு நீங்கும். பண விஷயத்தில் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். யாரிடத்திலும் வீண் வாதங்களால் பகைமையை வளர்க்க வேண்டாம். பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு திரும்ப வரும். குடும்ப ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிப்படவும்.

விருச்சிக ராசி அன்பர்களே,
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ஆரம்பிக்கும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்ப எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகும். பேச்சிலும் செயலிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்கள் கேட்கும் உதவியை செய்து தர இயலும். ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆன்மிக நாட்டம் கூடும். கணவன் மனைவிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் முடிவுக்கு வரும். திட்டமிட்ட செயல்கள் ஒவ்வொன்றும் நடக்க ஆரம்பிக்கும். உத்யோகத்தில் வேலைப்பளு குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்.

தனுசு ராசி அன்பர்களே,
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பின் சீராகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். பணம் சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது நல்லது. முடிந்துபோன விஷயங்களை நினைத்து கவலைப்படுவதால் எந்த பயனும் இல்லை, இனி நடக்கவேண்டியதை செய்து முடியுங்கள் வெற்றி கிட்டும். குடும்ப சிக்கலை பேசி சரிசெய்து கொள்ள முடியும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : குரு பகவானை வழிபடவும்

மகர ராசி அன்பர்களே,
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்ப தேவைக்காக அதிக நேரம் செலவிட நேரிடும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். இஷ்ட தெய்வ வழிபாடு மன நிம்மதியை தரும். பெற்றோர்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். உற்றார், உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். எதிர்பாரா மருத்துவ செலவுகள் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். அடுத்தவர்களின் விமர்சனங்களைப் பற்றி கவலை பட வேண்டாம். நட்பு வட்டம் விரிவடையும். குடும்ப நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
பரிகாரம் : சாய் பாபாவை வணங்கி வழிபடவும்.

கும்பம் ராசி அன்பர்களே,
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, குடும்பத்தில் சற்றும் எதிர்பாராத பல திருப்பங்கள் வரும். கடுமையான முயற்சியால் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய முடியும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். பாலிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். உத்யோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிப்படவும்.

மீன ராசி அன்பர்களே,
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறும். மனதில் பல நல்ல சிந்தனையும் அறிவாற்றலும் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். சொந்த பந்தங்களால் நிறைய நன்மையை எதிர்பார்க்கலாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உடல் நலம் சீராகும். உடன்பிறப்புகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து தர முடியும். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். தேவையற்ற செலவுகளால் கடன்கள் அதிகமாக வாய்ப்புண்டு. குடும்ப விஷயங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.
ரிகாரம் : சாஸ்தாவை வணங்கி வழிப்படவும்.
மார்ச் மாத ராசி பலன்கள் 2026
| மார்ச் மாத ராசி பலன்கள் 2026 |
| (2026) – மார்ச் மாத ராசி பலன்கள் விசுவாவசு வருடம் மாசி மாதம் 17ம் தேதி முதல் பங்குனி மாதம் 17ம் தேதி வரை (01-03-2026 – 31-03-2026) வாக்கிய பஞ்சாங்கப்படி 01-03-2026 முதல் 31-03-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் திசை, புத்தி, அந்தரம் மற்றும் கோச்சாரம் கணக்கிட்டு பார்க்கும் போது ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும், இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை. மார்ச் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : 06.03.2026- மீன சனி 15.03.2026 – மீன சூரியன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் A.வினோத் குமார் (Ph.d Astrology) |
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் உண்டு. நீண்ட நாள் எண்ணங்கள், திட்டங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். மன சங்கடங்கள் நாளடைவில் தீரும். பல முக்கிய சவால்களையும், விவாதங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எப்போதும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவைகள் பூர்த்தியாகும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர்களிடம் சின்ன சின்ன சின்ன மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரிய செலவுகள் அதிமாகும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது எல்லா வகையிலும் சிறப்பு. உடல் உபாதைகள் நீங்கும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிரபலங்களின் அறிமுகவும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். புது முயற்சிகளை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் தொடங்க முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 9,10,11 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு வெகுவாக உயரும். இனிமையான பேச்சின் மூலம் பலரது ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதாமல் வெளியில் கைமாற்ற பணம் வாங்க வேண்டியிருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் கூட சீக்கிரத்தில் முடிவடையும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். குடுமபத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோசனையை சற்று தள்ளி வைப்பது நல்லது. பெற்றோர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் ஏற்படும். பல நாட்களாக திட்டமிட்டு இருந்த தெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ளவும். உடல் நலத்தை பொறுத்தவரை எந்த தொந்தரவும் இருக்காது. உங்கள் முக்கிய காரியங்கள் நாளடைவில் நிறைவேறும். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 11,12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் வரும் இன்னல்களை சமாளிக்க முடியும். எதிர்பார்க்கும் காரியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். மனம் மகிழ்ச்சியில் துள்ளும். போதிய வருமானம் தங்கு தடையின்றி கிடைக்கும். உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்யவும். மனம் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். தெய்வ காரியங்களில் நாட்டம் உண்டாகும். குடும்பத்தினருடன் சென்று பிராத்தனையை செய்யவும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வேண்டியவர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப வர தாமதமாகும். வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிரியமானவர்கள் வழியில் சில அனுகூலமான பலன் உண்டு. நண்பர்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகவும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். .
சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் எதிர்பார்த்ததும், எதிர்பார்காததும் இரண்டுமே சீக்கிரத்தில் நடந்து முடியும். பல நாட்களாக இழுபறியில் இருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். தெய்வ வழிபாடு மூலம் நல்லது நடக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சில நேரங்களில் திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். நட்பு வழியில் ஆதாயம் உண்டு. சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும். வீண் வாக்குவாதங்களை முடிந்தவரை தவிர்க்கவும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நல்லது. அடிப்படை தேவைகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். குடியிருக்கும் வீட்டை மாற்ற நேரிடும். பழைய கடனை அடைக்க புது வழி கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய சொந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. புது தொழில், யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் பல வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சிரமம் இன்றி சமாளிக்க முடியும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தன்னம்பிக்கையும், மன தைரியம் அதிகரிக்கும். குடும்ப சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. புது நண்பர்கள் அறிமுகமாவர். உற்றார், உறவினர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் வர வாய்ப்புண்டு. புதிய வண்டி, வாகனங்களை வாங்க முடியும். குடும்ப நபர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். கிடைக்க வேண்டிய நல்லது அனைத்தும் ஒவ்வொன்றாக கிடைக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். பல நாட்களாக தடைபட்ட திருமணம் விரைவில் கைகூடும். கடன் சுமைகள் பாதியாக குறையும். உடன்பிறப்பு வகையில் ஆதரவும் கூடும். உங்கள் அன்றாட வரவு செலவு கணக்குகளை தினசரி சரி பார்க்கவும். வெளிநாடு செல்லாதவர்க்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். அடிக்கடி பயணங்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 18,19,20,21 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உங்கள் விருப்பங்களை எதுவாகினும் அது நிறைவேற்ற வழி கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நிறைய சந்தர்ப்பங்கள் வரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாக்கு சாதுரியம் ஏற்படும். மனக்கவலைகள் அடியோடு மறையும். குடும்பத்தில் முக்கிய விசேஷங்கள் நடக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க பழகவும். தெய்வ வழிபாட்டின் மூலம் பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும்.வாகன யோகம் உண்டு. நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நண்பர்கள் கேட்ட உதவியை செய்து தருவர். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வேண்டாதவர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாற வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எடுத்த வேலைகளை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். உத்தியோகத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ, செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். எல்லா விஷயத்திலும் பொறுமையை கடை பிடிக்க வேண்டியது அவசியம். மனதில் ஒரு விதமான குழப்பங்கள் நிலவினாலும் அது நாளடைவில் சரியாகிவிடும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. புது வீடு மாற்றம் ஏற்படும். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தடைப்பட்ட திருமண பணிகள் மீண்டும் தொடரும். பூர்வ புண்ணிய பாக்கியங்கள் கிட்டும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்துடன் தூர பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பயணங்கள் தொடர்பாக அலைச்சல், செலவுகள் ஏற்பட்டாலும் மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். புது நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் கிட்டும். பெண்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து வந்தால் உடல் மேன்மை பெரும். வரும் வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்தி கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். பண வரவு வெளியில் சொல்லும்படி இருக்கும். உங்கள் கஷ்டங்கள் எல்லாம் விலகி விடும். புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். அடுத்தவர் செய்ய தயங்கும் காரியத்தை கூட தைரியமாக செய்ய முடியும். மற்றவர்களை கவரும் திறமை உங்களிடம் நிறைவே இருக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவும். ஆன்மீக ஆர்வம் கூடும். கொடுக்கல் வாங்கலில் அவசரம் காட்ட வேண்டாம். புதிதாக ஏதேனும் செய்ய விரும்பினால் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 27,28,29 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மிகுதியாக இருக்கும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எப்போதும் நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். வீட்டில் அனாவசிய செலவுகளை குறைக்கவும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். உங்கள் வித்தியாசமான அணுகுமுறையாலும் சாதுரியமான பேச்சாலும் எதையும் சாதிக்க முடியும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிகொள்ள முடியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். கடன் பிரச்சனைகள் அவ்வபோது தலைதூக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். வாகன யோகம் உண்டு. எப்போதும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சந்திராஷ்டமம் : 2,3,4 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். மனம் நிம்மதிக்காக தினமும் தியானம் செய்யவும். இழுபறியில் இருந்த வேலைகளை சீக்கிரத்தில் முடிக்க முடியும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத அளவிற்கு செலவுகள் வரும். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். முடிந்தவரை அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் குதூகலமும் இருக்கும். திருமணம் காரியம் கைகூடும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் பூர்விக இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். வாகனங்களில் செல்லும் போது தொலைபேசியை உபயோகிக்க வேண்டாம். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கும் காணப்படும். நண்பர்களிடம் உங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளவும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். குடும்ப நபர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 4,5,6 & 31 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீண்ட காலமாக திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செய்யவும். எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். சேமிப்பில் கவனம் செலுத்தினால் பல வகையில் நன்மை அடையலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். புது வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டு. குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் நற்செய்தி உண்டு. கொடுக்கல் வாங்கலில் சில சிரமங்கள் இருக்கும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். உத்யோகத்தில்அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 6,7,8,9 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.