டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த வெளிநாட்டு கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.

கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சா பொதிகள் அண்மையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கிளிநொச்சியின் டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல் புவனேகவுடன் இணைக்கப்பட்ட விரைவு நடவடிக்கை படைப்பிரிவை பயன்படுத்தி சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே வெளிநாட்டு கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த கடல் பகுதியில் மிதக்கும் எட்டு (08) சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த எழுபத்தெட்டு (78) கிலோகிராம் மற்றும் முன்னூறு (300) கிராம் வெளிநாட்டு கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா, கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக தரையிறங்க முடியாததால் கடலில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா கையிருப்பின் மொத்த தெரு மதிப்பு 15 மில்லியன் ரூபாய்க்கு மேல் என்று நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சியில் உள்ள ஜெயபுரம் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

Related posts

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு

கோப்பாய் காவல் நிலையத்தில் தீ விபத்து

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.