யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில்  திங்கட்கிழமை (16-03-2026) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஓபன்AI வழக்கில் மூன்றாம் நாளில் மஸ்க்–வழக்கறிஞர் மோதல் தீவிரம்

மே தின ஊர்வலம் 2026 – பிரான்சு

மாமனிதர் பாசறைப்பாணர் “தேனிசை செல்லப்பா”  அவர்களின்  வீரவணக்க நிகழ்வு – பிரான்சு.