தமிழகம் முழுவதும் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடலுக்குத் தடை.

Chengalpattu: Tamilaga Vettri Kazhagam (TVK) founder-chief Vijay meets supporters at the party's special general council meeting, at Mahabalipuram in Chengalpattu district of Tamil Nadu, Wednesday, Nov. 5, 2025. (PTI Photo) (PTI11_05_2025_000240B)

 தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடந்து வருகின்றன. கடந்த காலங்களில், பள்ளி ஆண்டு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளுக்கு, நடிகர் விஜயின் பாடல்களே பிரதான தேர்வாக இருந்தன.

தற்போது, அவர் கட்சி துவங்கி உள்ளதால், தமிழகம் முழுதும் நடக்கும் பள்ளி ஆண்டு விழாக்களில், விஜயின் திரைப்பட பாடல்கள் வேண்டாம் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் வட்டாரங்கள் கூறியதாவது: இந்த முறை, ஆண்டு விழா நடன நிகழ்ச்சிகளுக்கு, விஜயின் பாடல்களை தவிர்க்க, பள்ளி தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

ஏனெனில், சில பல்கலை, கல்லுாரிகளில், விஜயின் பாடல்கள் இசைக்கப்படும்போது, அவரது கட்சி கொடிகளை காண்பித்தும், கட்சியின் பெயரை ஆரவாரமாக உச்சரித்தும், மாணவ, மாணவியர் வீடியோக்களை வெளியிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

இஸ்ரேல்: “ஈரானிய உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப்பை நாங்கள் கொன்றோம்” — இரண்டு நாட்களில் இது மூன்றாவது இலக்குத் தாக்குதல்.

WHO‑வில் இருந்து அர்ஜென்டினா விலகல் உறுதி; “சுகாதார இறையாண்மை” காரணம் என மிலே அரசு விளக்கம்

பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.