132
தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடந்து வருகின்றன. கடந்த காலங்களில், பள்ளி ஆண்டு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளுக்கு, நடிகர் விஜயின் பாடல்களே பிரதான தேர்வாக இருந்தன.
தற்போது, அவர் கட்சி துவங்கி உள்ளதால், தமிழகம் முழுதும் நடக்கும் பள்ளி ஆண்டு விழாக்களில், விஜயின் திரைப்பட பாடல்கள் வேண்டாம் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் வட்டாரங்கள் கூறியதாவது: இந்த முறை, ஆண்டு விழா நடன நிகழ்ச்சிகளுக்கு, விஜயின் பாடல்களை தவிர்க்க, பள்ளி தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.
ஏனெனில், சில பல்கலை, கல்லுாரிகளில், விஜயின் பாடல்கள் இசைக்கப்படும்போது, அவரது கட்சி கொடிகளை காண்பித்தும், கட்சியின் பெயரை ஆரவாரமாக உச்சரித்தும், மாணவ, மாணவியர் வீடியோக்களை வெளியிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
You Might Be Interested In
- Suriya Puthalvikal Part 2 – Honouring the Women of the Tamileelam Struggle
- தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- பிரிட்டன் அரசு கடும் ஆன்லைன் பாதுகாப்பு நடவடிக்கைகள்: சமூக ஊடகங்கள் மற்றும் AI தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
- தமிழீழத்தில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவேந்தல்!
- “நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை
- களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெட்டப்பட்டுள்ளது.
You Might Be Interested In