பஞ்சாப் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, நாடு முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என, மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில், எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் உட்பட இரண்டு இடங்களில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கான சதிச் செயல்களின் பின்னணியில், பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., இருப்பது தெரியவந்துள்ளது.
இக்குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின், நாடு முழுதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்காத நிலையில், கல்பாக்கம் அனல் மின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, மத்திய உளவுத் துறையும் எச்சரிக்கை செய்துள்ளது.
- இறையாண்மை கொண்ட போராளிகள்: மரபுவழி மேலாதிக்கத்தின் “பொற்காலம்” (1990–2001) (பகுதி 4)
- பிரபல அரசியல் மேடை பேச்சாளர் நாஞ்சில் சம்பத், நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
- தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சியை அகற்ற இந்தியப் பிரதமர் மோடி வந்துள்ளார்!
- முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் “வீரசிங்கம்” அணையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
- இலங்கையின் மலையகம் பகுதிகளில் உதவியின்றி சிக்கித் தவிக்கும் மக்களின் அவலநிலை, மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
- நாங்கள் இதை விடமாடோம் ! பாரியளவில் தொடர இருக்கும் போராட்டம் !
இது தொடர்பாக, கவர்னர் மற்றும் டி.ஜி.பி., அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதையடுத்து, மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கள் வாயிலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன; வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.