134
தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடந்து வருகின்றன. கடந்த காலங்களில், பள்ளி ஆண்டு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளுக்கு, நடிகர் விஜயின் பாடல்களே பிரதான தேர்வாக இருந்தன.
தற்போது, அவர் கட்சி துவங்கி உள்ளதால், தமிழகம் முழுதும் நடக்கும் பள்ளி ஆண்டு விழாக்களில், விஜயின் திரைப்பட பாடல்கள் வேண்டாம் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் வட்டாரங்கள் கூறியதாவது: இந்த முறை, ஆண்டு விழா நடன நிகழ்ச்சிகளுக்கு, விஜயின் பாடல்களை தவிர்க்க, பள்ளி தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.
ஏனெனில், சில பல்கலை, கல்லுாரிகளில், விஜயின் பாடல்கள் இசைக்கப்படும்போது, அவரது கட்சி கொடிகளை காண்பித்தும், கட்சியின் பெயரை ஆரவாரமாக உச்சரித்தும், மாணவ, மாணவியர் வீடியோக்களை வெளியிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
You Might Be Interested In
- புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இலங்கையில் 8,000 போலீசார் நாட்டளாவிய பாதுகாப்பு மற்றும் கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அறிவிப்பு
- பொங்கல் அரசியல் மேடையாகும்: தமிழ்நாட்டில் தேர்தல் சூடு அதிகரிப்பு
- இந்திய ரூபாய் சரித்திர குறைந்த நிலைக்கு சரிவு
- பிரிகேடியர் பானு | 18.05.2009
- 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் திறன் DMK-க்கு உள்ளது: முதல்வர் ஸ்டாலின்
- டாக்டர் வரதராஜா துரைராஜா அவர்களுக்கு ஆதரவாக – நன்கொடை
You Might Be Interested In