கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் புகையிரதத்தில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டி ஊடாக சென்று இறங்க முற்பட்ட வேளையில் புகையிரதமும் நகர்ந்ததால் பெண் கீழே விழுந்து படுகாயமடைந்திருந்தார்.
படுகாயமடைந்த பெண்ணை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் மகனிடம் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- அமெரிக்கா–இரான் பதற்றம் உச்சத்தை எட்டும் நிலையில் இராணுவ நடவடிக்கை பரிசீலனை
- தேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.!
- கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
- அகவை வாழ்த்து – ஜனவரி 12
- அகவை வாழ்த்து – செப்டம்பர் 25
- மன்னார் பண்டிகை கால வணிகக் கடைகள் ஏலம்; வருவாய் 4 கோடியைத் தாண்டியது.
சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53வயதான சு.சுபாசினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மேற்படி விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.