ஞாயிற்றுக்கிழமை (22-03-2026) அன்று முத்தூர் – அறபாநகர் பகுதியில் ஒரு முச்சக்கர வண்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சம்பூரிலிருந்து மூதூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, குறித்த முச்சக்கர வண்டியில் திடீரென தீப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக ஒன்று திரண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, குறுகிய நேரத்திலேயே அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், தீ விபத்தால் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளது.

தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Related posts

“மத்திய கிழக்கு யுத்தத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையில் சிக்கல் இருக்கிறது.” என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

ஒருபுறம், மத்திய கிழக்கு போர் நெருக்கடியால் ‘மகா வலி’; மறுபுறம், இலங்கை அரசாங்கத்தின் ‘மகா வலி’யையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.! – ரவிகரன் எம்.பி.

இலங்கையில் இன்றிரவு முதல் எரிபொருள் விலை உயரவிருக்கிறது!