த.வெ.க. வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 115 பேரை தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்து போட்டியிட உள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த நிர்வாகிகளில், தேர்வு செய்யப்பட்ட 115 பேருடன், இரண்டு கட்டமாக விஜய் ஆலோசனை நடத்தினார். அவர்கள் முதற்கட்ட வேட்பாளர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களை வேட்பு மனு தயாரிக்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

வேட்பு மனுவில் இணைக்கப்படும் ஆவணங்களை சரி பார்ப்பதற்காக, பனையூர் த.வெ.க., தலைமை அலுவலகத்துக்கு, இன்று 115 பேரும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தலைமை அலுவலகத்தில் சட்ட வல்லுனர்கள் குழுவிடம், வேட்பு மனு குறித்து 115 பேரும் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

த.வெ.க., முதல்முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளதால், வேட்பாளர்கள் வேட்பு மனுவை தவறாக பதிவு செய்து, அது நிராகரிக்கப்படக்கூடாது என்பதாலேயே இப்படியொரு ஏற்பாட்டை கட்சி தலைமை செய்துள்ளது.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.