Thursday, March 26, 2026

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், வேட்பாளர்கள் கோடிக்கணக்கான 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்துள்ளனர், அதனால் மக்களிடையே அதிக புழக்கம் இல்லை.

0 comments

சட்டசபை தேர்தலுக்கு ஒவ்வொரு தொகுதி யிலும், அ.தி.மு.க.,வினரும், தி.மு.க.,வினரும் பூத் வாரியாக வாக்காளர்களை கணக்கெடுத்து வைத்துள்ளனர். ஒருவருக்கு, 100 வாக்காளர்களை கண்காணிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக இப்போதே, 500 ரூபாய் நோட்டுகளை லட்சக்கணக்கில் வேட்பாளர்கள் பதுக்கி வைத்துள்ளதால், மக்களிடத்தில் அதிக புழக்கமில்லை.

மதுரை உள்ளிட்ட நகரங்களில், சில வங்கி ஏ.டி.எம்.,களில், 500 ரூபாய் நோட்டுகள் இருநாட்களாக வரவு வைக்கப்படவில்லை. வெறும், 200, 100 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால் குறைந்த மதிப்பில் மட்டுமே, ரூபாய் நோட்டுக்களை எடுக்க முடிகிறது.

வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தேர்தல் அறிவித்த பின், 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது உண்மை தான்’ என்றார். முக்கிய கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தேர்தல் சமயத்தில் வாக்காளர்களை, ‘கவனிப்பது’ அவசியம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது, குறிப்பிட்ட மதிப்பில், 200 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளை கொடுப்பதும், கையாள்வதும் சிரமம்.

இதை தவிர்க்கவே, 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துகிறோம். 2016க்கு முன், 1,000 ரூபாய் நோட்டு இருந்தது. அது ரொம்ப வசதியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00