தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தேசியத்தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து தமிழீழ விடுதலைக்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுசுமந்த அடிக்கற்கள் எழுச்சி நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் மாவீரர் பணிமனையால் டுயிஸ்பேர்க் நகரில் நினைவு கூரப்பட்டது.
👇பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 👇
நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாகப் பொதுச்சுடர்; ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதுடன் 18 அடிக்கற்கள் நாயகர்களின் திருவுருவப் படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 18 அடிக்கற்கள் நாயகர்களின் திருவுருவப் படங்களுக்கு மக்கள் மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் செலுத்தினர்.
நிகழ்வில் எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் மற்றும் சிறப்புப் பேச்சு ஆகியன இடம்பெற்றதோடு அடிக்கற்கள் நாயகர்களின் நினைவைத் தாங்கிய வரலாற்றுத் தொகுப்பு நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி கையேந்தப்பட்;டு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி