Wednesday, April 1, 2026

இன்றைய ராசி பலன் 01 ஏப்ரல் 2026 புதன்கிழமை

0 comments
தமிழ் நாட்காட்டி ஏப்ரல் 2026
அமாவாசை17-ஏப்-2026 வெள்ளிக்கிழமை
பௌர்ணமி01-ஏப்-2026 புதன்கிழமை
கார்த்திகை19-ஏப்-2026 ஞாயிறு
சஷ்டி விரதம்22-ஏப்-2026 புதன்கிழமை
சங்கடஹர சதுர்த்தி05-ஏப்-2026 ஞாயிறு
சதுர்த்தி20-ஏப்-2026 திங்கட்கிழமை
பிரதோஷம்15-ஏப்-2026 புதன்
29-ஏப்-2026 புதன்கிழமை
திருவோணம்11-ஏப்-2026 சனிக்கிழமை
மாத சிவராத்திரி15-ஏப்-2026 புதன்கிழமை
ஏகாதசி13-ஏப்-2026 திங்கட்கிழமை
27-ஏப்-2026 திங்கட்கிழமை
அஷ்டமி10-ஏப்-2026 வெள்ளிக்கிழமை
24-ஏப்-2026 வெள்ளிக்கிழமை
நவமி11-ஏப்-2026 சனிக்கிழமை
25-ஏப்-2026 சனிக்கிழமை
அரசு விடுமுறை நாட்கள்03-ஏப்-2026 வெள்ளிக்கிழமை
புனித வெள்ளி

14-ஏப்-2026 செவ்வாய்
தமிழ் வருடப் பிறப்பு

14-ஏப்-2026 செவ்வாய்
அம்பேத்கர் பிறந்த நாள்
திருமண நாட்கள்06-ஏப்-2026 திங்கட்கிழமை
தேய்பிறை


12-ஏப்-2026 ஞாயிறு
தேய்பிறை


13-ஏப்-2026 திங்கட்கிழமை
தேய்பிறை


16-ஏப்-2026 வியாழன்
தேய்பிறை


20-ஏப்-2026 திங்கட்கிழமை
வளர்பிறை


23-ஏப்-2026 வியாழன்
வளர்பிறை


30-ஏப்-2026 வியாழன்
வளர்பிறை
திருவிழாக்கள்01-ஏப்-2026 புதன்கிழமை
பங்குனி உத்திரம்

14-ஏப்-2026 செவ்வாய்
தமிழ் வருடப் பிறப்பு

20-ஏப்-2026 திங்கட்கிழமை
அட்சய திரிதியை

21-ஏப்-2026 செவ்வாய்
ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி

28-ஏப்-2026 செவ்வாய்
மீனாட்சி திருக்கல்யாணம்

30-ஏப்-2026 வியாழன்
கள்ளழகர் எதிர்சேவை

இன்றைய ராசி பலன் 01 ஏப்ரல் 2026 புதன்கிழமை

மேஷ ராசி அன்பர்களே,

மேஷ ராசி நேயர்களே, சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். புதிய முயற்சிகளில் இருந்த தடை விலகும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

ரிஷப ராசி நேயர்களே,

ரிஷப ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியங்களை உடனுக்குடன் செய்ய முடியும். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மிதுன ராசி அன்பர்களே,

மிதுன ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் நன்மையான தகவல்கள் வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே,

கடக ராசி நேயர்களே, குடும்ப சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

சிம்ம ராசி நேயர்களே,

சிம்ம ராசி நேயர்களே, நினைத்த காரியம் நினைத்தபடியே நடக்கும். ஆலய வழிபாடு மனநிம்மதியை தரும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கன்னி ராசி நேயர்களே,

கன்னி ராசி நேயர்களே, நல்ல மனிதர்களின் சந்திப்பால் மனமகிழும். பணம் சேமிப்பில் கவனம் செலுத்தவும். பிடிவாத குணத்தை மாற்றிக்கொள்ளவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே,

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் திட்டமிடல் அவசியம். யாரையும் குறை சொல்ல வேண்டாம். நண்பர்கள் கஷ்ட நேரங்களில் துணை நிற்பர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிக ராசி நேயர்களே,

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தினர் ஆதரவும், அன்பும் அதிகரிக்கும். பழைய கசப்பான விஷயங்களை மறக்க முயற்சிக்கவும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே,

தனுசு ராசி அன்பர்களே, பிறர் மனம் அறிந்து செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். பெற்றோர்கள் சாதகமாக இருப்பர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகர ராசி நேயர்களே,

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி நேயர்களே,

கும்ப ராசி நேயர்களே, ஆன்மீக ஆர்வம் கூடும். சவாலான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். பண வரவில் இருந்த சிக்கல் நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே,

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. பொருளாதார நெருக்கடிகள் குறையும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 30-03-2026 To 05-04-2026

மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. மன வலிமை கூடும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பணவரவு இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் வரும். பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. பயணங்களால் ஏற்பட்ட அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் கூட வேகமாக நடக்கத் தொடங்கும். உடல் ஆரோக்யம் பலம் பெரும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான பலன்கள் உண்டு. கொடுத்த கடன் கைக்கு திரும்ப வரும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்
.

ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். எல்லா விஷயத்திலும் சிந்தித்து செயல் படவேண்டியது மிக முக்கியம். வரும் வாய்ப்புகளை சரியான விதத்தில் பயன்படுத்திக்கொள்ளவும். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை விரைவில் உருவாகும். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிப்படவும்

மிதுன ராசி அன்பர்களே

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களது நேர்மையான செயல்களால் பலரது பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத பல விஷயங்கள் நடக்கும். பொருளாதார நிலை மேம்படும். பொது நலக் காரியங்களில் ஆர்வம் இருக்கும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்க முடியும். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். புதிய திட்டங்கள் நல்ல பலனை தரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வர வேண்டிய பணம் சிறிது தாமத்திற்கு பின் கைக்கு வரும். குடும்பத்தினர் அனைத்து விஷயங்களிலும் ஆதரவாக இருப்பர். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே

கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் பேச்சில் பொறுமையும், நிதானத்தையும் பின்பற்றுவது அவசியம். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெற முடியும். எதிர்ப்புகள் தானாக விலகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அது நாளடைவில் சீராகும். உடல் நலத்தில் கவனம் தேவை. உதவி கேட்டு வந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தர இயலும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். புது வீடு, மனை வாங்கும் எண்ணம் வரும். நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் பயணம் செல்ல விருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, குடும்பத்திற்கு வேண்டியதை செய்து தர இயலும். பொருளாதாரத்தில் ஏற்றமான நிலை காணப்படும். எந்த ஒரு வேலையைச் செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளவிலையே என்ற ஆதங்கம் ஏற்படும். வேண்டியவர்கள் வழியில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புது நண்பர்கள் அறிமுகமாவர். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்

கன்னி ராசி அன்பர்களே

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் செயல்திறனை கண்டு மற்றவர்கள் வியப்படைவர். பொருளாதாரத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுய ரூபம் புரியவரும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேறும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். தேக நிலையில் முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். பல பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத அளவிற்கு செலவுகள் வரும். பயணங்களால் செலவுகளும், அலைச்சல்களும் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்ப்புகள் அகலும். பயணங்கள் சாதகமான பலன் தரும். பெரியோர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது. தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளவேண்டிவரும். பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். அனாவசியச் செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டாம். வரவுக்குத் தகுந்த செலவுகளைச் செய்யவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பொருள் சேர்க்கை இருந்த போதிலும் எதிர்பாராத பல செலவுகள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் வசதிகள் பெறுக வழி பிறக்கும். திட்டமிட்டபடி செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். உத்யோகத்தில் வேலை பளு குறையும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்.

விருச்சிக ராசி அன்பர்களே

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். உங்களை சுற்றி நிறைய நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். நிதி நிலைமை சீரடையும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமும், மன நிம்மதியும் இருக்கும். பாலிய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மனதில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் சகஜ நிலை காணப்படும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்.

தனுசு ராசி அன்பர்களே

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பொருளாதார பாதிப்புகள் படிப்படியாக குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற சிரம பட வேண்டியிருக்கும், எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. பேச்சு திறமையால் அன்றாட பணிகளை எளிதாக்கி கொள்ள முடியும். மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் கூட சில நேரத்தில் எதிராகவே மாறலாம். குடும்பத்தில் ஆனந்தமும், குதூகலமும் நிலவும்.. நண்பர்கள் அனுசரனையுடன் இருப்பர். முன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்களைத் தவிர்க்கலாம். மனக்கவலைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம் : குரு பகவானை வழிப்படவும்

மகர ராசி அன்பர்களே

மகர ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். பல நாட்களாக முடியாமல் இருந்த காரியம் கூட இப்போது முடியும். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த மந்த நிலை மாறும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற முடியும். திட்டமிட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கடன் தொந்தரவுகள் குறையும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். பெரியோர்களின் ஆலோசனை படி கேட்டு நடப்பது நல்லது. உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : வரசித்தி விநாயகரை வழிபடவும்.

கும்ப ராசி அன்பர்களே

கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மனதில் புது பிறக்கும். உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் பாராட்டி பேசுவர். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். குலதெய்வ வழிபடு சிறப்பாக அமையும். குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வெளி உணவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க வீண் வாக்குவாதங்கள் தவிர்க்கவும். மனதில் உள்ள திட்டங்களை செயல்படுத்த வழி கிடைக்கும். கடன் பிரச்சனை குதலைதூக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். இது வரை இருந்து வந்த நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாகவே மறையும். உத்யோகத்தில் அமைதி நிலவும். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே

மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். மனசங்கடம் வராமல் தடுக்க தினமும் தியானம் செய்யவும். குடும்பத்துடன் விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். உங்கள் ஒவ்வொரு செயல்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அண்டை அயலாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்களை பற்றி யாராவது அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். வெளிநாடு சென்று வரும் யோகம். திருமணம் காரியம் கைகூடும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிப்படவும்


ஏப்ரல் மாத ராசி பலன்கள் 2026

ஏப்ரல் மாத ராசி பலன்கள் 2026
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 18ம் தேதி முதல் ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 17ம் தேதி வரை (01-04-2026 – 30-04-2026)

வாக்கிய பஞ்சாங்கப்படி 01-04-2026 முதல் 30-04-2026 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே அனுபவ பூர்வ உண்மை.

ஏப்ரல் 2026 மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு :

ஏப்ரல் 02, 2026 – மீன செவ்வாய்
ஏப்ரல் 11, 2026 – மீன புதன்
ஏப்ரல் 14, 2026 – மேஷ சூரியன்
ஏப்ரல் 19, 2026 – ரிஷப சுக்கிரன்
ஏப்ரல் 30, 2026 – மேஷ புதன்


ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் A.வினோத் குமார் Ph.d (Astrology), செல்: 9003019831

மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, இந்த மாதம் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது அதிகளவில் நன்மையை தரும். பொருளாதாரத்தில் சிறிது சரிவினைச் சந்திக்க நேரலாம். குடும்ப வர செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பிரியமானவர்களால் சில நெருக்கடிகள் வரலாம். பெரியோர்களின் ஆசி கிட்டும். சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர்களின் அரவணைப்பு கிட்டும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். நண்பர்களால் சில மனக்கசப்புகள் வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. எதிலும் பதற்றமடையும் போக்கை கைவிட்டு நிதானமாக நடந்துகொள்ள பழகிக்கொள்ளவும். வேலையில் சிரமங்கள் வரலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் : 5,6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்ப நிதி நிலை சீரடையும். திட்டமிட்ட பயணங்களால் மகிழ்ச்சி கூடும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். ஒரு சில உடல் உபாதைகள் அவ்வப்போது இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் கவனமாக இருக்கவும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியிடங்களில் வார்த்தைகளை குறைத்து பேசவும். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சில சண்டை, சச்சரவுகள் வந்து போகும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் சேமிப்பை உயர்த்தும். உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்களால் சில பிரச்னையை சந்திக்கக் கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். முடிந்த வரை கடன் வாங்குவதை குறைத்து கொள்ளவும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

சந்திராஷ்டமம் : 8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்

மிதுன ராசி அன்பர்களே

மிதுன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புத்தி சாதுரியத்தால் பல காரியங்களை செய்ய முடியும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை உண்டு. குலதெய்வ வழிபாடு நன்மை தரும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். குடும்ப வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். எதிர்காலம் பற்றிய பயத்தை தவிர்ப்பது நல்லது. தேக நலனில் அக்கறைகொள்ளவும். பண தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

சந்திராஷ்டமம் : 10,11,12,13 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

கடக ராசி அன்பர்களே

கடக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். பொருளாதார நிலையில் ஏற்றம் ஏற்படும். எல்லாவகையிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். மனதில் நிலவி வந்த கவலைகள் நீங்கும். உற்றார், உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். பிரியமானவர்களால் நிறைய நன்மைகள் உண்டு. உண்டு. தொல்லை தந்தவர்கள் கூட தானாக விலகுவர். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். குடும்பத்தில் வீண் விரயங்களும் மருத்துவ செலவினங்களும் உண்டு. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திட்டமிடாத செலவுகள் நிறையவே வரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகன யோகம் உண்டு. சொந்த விஷயங்களுக்கு அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதை தவிர்க்கவும். பயணங்களால் வீண் அலைச்சல் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். உடல் உபாதைகள் தொடர்பாக சில மருத்துவ செலவுகள் வரும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.

சந்திராஷ்டமம் : 13,14,15 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.


சிம்ம ராசி அன்பர்களே

சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண வரவில் ஏற்றம் இருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அதில் வெற்றி பெற முடியும். யாரிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் சில இக்கட்டான சூழல் நிலவும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளியூர் பயணம் செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். புது நண்பர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் அதிக சிரமம் இருக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் அவசியம். குடும்பத்தில் புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து ஒற்றுமை நீங்கும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். கொடுக்கல், வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

சந்திராஷ்டமம் : 15,16,17 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்

கன்னி ராசி அன்பர்களே

கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சில நேரங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். குடும்பத்தில் பணம் எவ்வளவு வந்தாலும், செலவுகளும் காத்துகொண்டு தான் இருக்கும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களில் வெற்றி பெற முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். பயணங்களால் தேவையற்ற செலவுகள் வரும். குடும்ப நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஓயாத அலைச்சல் காரணமாக உடல் அசதியும் சோர்வும் ஏற்படலாம். உங்களுக்கு வந்த பிரச்சனைகள் எல்லாம் பனி போல விலகி நிற்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உற்றார், உறவினர்களின் அன்பு மகிழ்ச்சியை தரும். பூர்விக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப வளர்ச்சிக்கான செலவுகள் அதிகம் இருக்கும். எதிரிகளால் பிரச்னைகள் வந்தாலும் அதை திறமையாக சமாளிக்க முடியும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்

துலாம் ராசி அன்பர்களே

துலாம் ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் உண்டாகும். உங்கள் திறமையை வெளிப்படுத்தும் நல்ல வாய்ப்புகள் வரும். எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் இப்போது நடக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். எதிலும் மனதிருப்தியுடன் செயலாற்ற முடியும். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிக்கல் இருக்கும். உடல் சோர்வு நீங்கி, உற்சாகம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி வரும். மனதில் இருந்த கவலை நீங்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

சந்திராஷ்டமம் : 19,20,21 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

விருச்சிக ராசி அன்பர்களே

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். புது முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். மருத்துவச் செலவுகள் அவ்வப்போது தோன்றி மறையும். பெண்கள் வழியில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. கணவன் மனைவிடையே இணக்கமான போக்கு காணப்படும். குடும்பத்தை பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். மற்றவர்களுக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.

சந்திராஷ்டமம் : 21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்

தனுசு ராசி அன்பர்களே

தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்ப விஷயங்களை மிகவும் கவனமாக கையாளுவும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன வரவுக்கும் வாய்ப்புண்டு. வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர முடியும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அவ்வப்போது வரும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் சீராகும். யாரிடத்திலும் வீண் வாக்கு வாதங்களால் பகையை வளர்த்து கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்

மகர ராசி அன்பர்களே

மகர ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் பழைய அமைதி திரும்பும். பொருளாதார நிலை வெளியில் சொல்லும் படி இருக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். உடல் நிலையிலும், மனநிலையிலும் அதிக கவனம் செலுத்தவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். எதையும் சாதிக்கும் ஆற்றல் உருவாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்றார், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உடல் நலம் சீராகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். விலகி நின்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் ஏற்படும். பெற்றோரின் நலனில் அக்கறைகொள்ளவும். கணவன் மனைவிடையே சின்ன மனவருத்தம் ஏற்படும். வெளியில் கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உங்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் கூட சாதகமாக இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற நிலை உருவாகும்.

சந்திராஷ்டமம் : 25,26,27,28 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

கும்ப ராசி அன்பர்களே

கும்ப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். திட்டமிட்டு செய்ய நினைத்த காரியம் விரைவில் முடியும். எந்த ஒரு செயலையும் முழு மனதோடு செய்தால் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் வரும். குடும்ப பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் அவசர முடிவையும், குழப்பத்தையும் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.

சந்திராஷ்டமம் : 28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

மீன ராசி அன்பர்களே

மீன ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படவும். எதையும் சுயமாக சிந்தித்து செயல்படும் திறன் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் அவசர முடிகளை தவிர்க்கவும். முன் கோபத்தை குறைக்கவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வரவும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். புது நட்பு வட்டாரம் உருவாகும். விஐபிகளின் அறிமுகம் ஆதாயம் தரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோசமான சூழல் நிலவும். உறவினர்கள் உதவி கரம் நீட்டுவர். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். பிரியமானவர்களிடம் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நெடுதூர பயணங்களை தவிர்க்கவும். உங்கள் விருப்பங்களை எதுவானாலும் அதை நிறைவேற்றிக்கொள்ள இயலும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் : 3,4,5 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.


Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00