யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து கூர்மையான வாள் ஒன்று மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் 20 போதைமாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் திங்கட்கிழமை (06-04-2026) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாசையூர் பகுதியில் இளைஞன் போதை முத்திரைகளுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இளைஞனிடம் இருந்து 20 போதை மாத்திரைகள் மற்றும் கூரிய வாள் ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.