Thursday, April 9, 2026

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறுத்தை கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது.

0 comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தை கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (07-04-2026) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, இலங்கையில் அரிதாகக் காணப்படும் சிறுத்தை ஒன்றை கொன்று, அதன் நான்கு கால்களையும் வீட்டுவளவில் புதைத்து, பற்களை விற்பனை செய்திருப்பது கண்டறியப்பட்டன. இலங்கை செய்திகள்

குறித்த சிறுத்தைப்பற்களை ரூபாய் 110,000க்கு வாங்கிய வர்த்தகர் ஒருவரும், அதற்குத் துணைநின்ற மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாக உள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00