திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தியிருந்த புகையிரத இயந்திரம் (எஞ்சின்) நேற்று புதன்கிழமை (08-04-2026) மாலை 3.00 மணியளவில் திடீர் என தீக்கிரையாகி உள்ளது.
தூரப்பிரதேசங்களில் இருந்து நிலையத்திற்கு வரும் புகையிரதங்களை நிலைய எல்லைக்குள் கொண்டு சென்று நிறுத்தும் செயற்பாட்டிற்கு இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று மதியம் கொழும்பிலிருந்து வந்த புகையிரத பெட்டிகளை இடமாற்றும் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்ட போதே இந்த இயந்திரத்தில் திடீர் என தீப்பரவல் ஏற்பட்டதாகவும்,தீப்பிடித்தமைக்கான காரணம் என்னவென்று தற்போது கூறமுடியாதுள்ளது என்றும்,எனினும் தீயணைப்படையினர் இது பற்றி விரைவில் தமக்கு தகவல் வழங்குவார்கள் எனவும் பிரதான புகையிரத நிலைய அதிபர் எஸ்.சர்வேஸ்வரன் கூறினார்.
புகையிரத இயந்திரம் தீயினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
- லெப்.கேணல் விக்ரர்
- லெப்.கேணல் குமரப்பா | 05.10.1987
- உறவுகளை அஞ்சலிப்பதற்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவத்திடமிருந்து விடுவிக்க தீர்மானம் வேண்டும். – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
- கப்டன் சர்மிலன் | 18.05.1998
- அகவை வாழ்த்து – டிசம்பர் 24
- குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு 2.8 மில்லியன் மதிப்பீடு!