வட தமிழீழம், முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பெல்சியம் Antwerpen மாநகரில் 06.04.2024 அன்று மாலை 16.30 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.
பின்னர் மாவீரர்கள் பொதுமக்களின் குருதியில் உருவான தமிழிழ தேசியக்கொடியினை பெல்சியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு துணைப் பொருப்பாளர் ஏற்றிவைத்தார்.
பின்னர் ஆனந்தபுர நாயகர்களின் திருவுருப்படங்களுக்கு வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் மலர்தூவி சுடர்வணக்கம் செலுத்தினர்.
வணக்க நிகழ்வில் எழுச்சிப்பாடல்கள், கவிதைகள், சிறப்பு பேச்சுக்கள் இடம்பெற்றதோடு, இறுதியாக தமிழீழ தேசியக் கொடி கையேற்றலுடன் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலுடன் வீரவணக்க நிகழ்வு நிறைவு பெற்றது .
- “தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி” சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது.
- ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட போதிலும் “ரேபிஸால் இறப்புகள் ஏன் ஏற்படுகின்றன ?”
- அமெரிக்கா – வெனிசுலா எண்ணெய் பேச்சுவார்த்தைகள்: தொழில் உலகம் எச்சரிக்கை சைகை
- சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி: ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையின் மூலம் மட்டுமே பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
- இரானில் ஆட்சிமாற்றம் ‘நடக்கக்கூடிய சிறந்த விஷயம்’ என டிரம்ப் கருத்து; மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவப் பங்கு அதிகரிப்பு
- Here are the full details of the 221 individuals banned by the Sri Lankan government.
“தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம்”
நன்றி




