திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12-04-2026) குடும்ப சமையல் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (12-04-2026) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த கடல் அலை காரணமாக குறித்த இளைஞர் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த சௌமி முஹம்மது அப்லல் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
- சர்வதேச அளவில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கானவீரவணக்க நிகழ்வு 2026
- ஈகைப்பெருநாளாம் இரம்ஜான் திருநாளை உலகெங்கும் கொண்டாடும் எனதருமை இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்
- உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் தாக்கியது; சவுதி அரேபியாவில் பதற்றம்!
- மயிலத்தமடு–மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம்: மூன்றாவது ஆண்டில் தொடரும் அவலம் மற்றும் ஆக்கிரமிப்பின் விளைவுகள்
- மாகாண சபை தேர்தலை தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் நடைபெற்றுள்ளது.
- இந்தியா–ஓமான் வர்த்தக ஒப்பந்தம் பிராந்திய பொருளாதார உறவுகளை வடிவமைத்துக் கொண்டே செல்கிறது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞனின் திடீர் மறைவால் அந்தப் பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகின்றன.