சம்பூர் கடலில் நீந்திக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது!

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12-04-2026) குடும்ப சமையல் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (12-04-2026) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த கடல் அலை காரணமாக குறித்த இளைஞர் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த சௌமி முஹம்மது அப்லல் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞனின் திடீர் மறைவால் அந்தப் பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தூதரக சரிவு: இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைக்குப் பிந்தைய அமெரிக்கா–ஈரான் முட்டுக்கட்டை

இயற்கை அழகுசாதனப் பொருட்கள் என்று கூறி, தரம் குறைந்த கிரீம்களைத் தயாரித்து வந்த மாத்தளையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.