திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (12-04-2026) குடும்ப சமையல் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (12-04-2026) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த கடல் அலை காரணமாக குறித்த இளைஞர் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த சௌமி முஹம்மது அப்லல் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
- திருகோணமலை, குச்சவளி காவல் பிரிவுக்கு உட்பட்ட சலப்பையாறு பகுதியில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
- மோடியின் பிடியில் தமிழ்நாடு!
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “ஆறாம் நாள் 20.09.1987” தியாக வேள்வி.!
- புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மீதமுள்ள உயர்தரப் பரீட்சைகள் ஜனவரி 12’ம் தேதி திங்கள் முதல் ஜனவரி 20’ம் தேதி வரை நடைபெறும்.
- நீரிணையில் எரியும் நெருப்பு: எரிசக்தியும் போருமான உலகத்தின் விளிம்பு நிலை
- கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) | 19.10.1997
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞனின் திடீர் மறைவால் அந்தப் பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகின்றன.