திருகோணமலை,குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலப்பையாறு பகுதியின் திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியோரத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (12-12-2025) காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் 56 வயதுடைய பெண் ஆவார்.
இவர் வியாழக்கிழமை (11-12-2025) இரவு அயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக தனது வீட்டவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றதாக அவரது பிள்ளைகள் கூறியுள்ளனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. எனினும் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.