அரசியலுக்கு எது பிரதானம் !
தேர்தல் முடிந்த பிறகும் விகடன் தன்னுடைய வேலையை விடவில்லை. பாவம் இன்னும் அது விஜய்க்கு முட்டுக்கொடுப்பது என்பதில் இருந்து மீளவில்லை !
நாதக படுதோல்வியா ? இல்லை தேர்தல் அரசியலில், கொள்கை கோட்பாடுகள், தத்துவங்கள், ஜனநாயக அணுகுமுறைகள் என அனைத்தும் படுதோல்வியா ? என்ற கேள்வியை நடுநிலையோடு கேட்க இங்கே ஏதாவது ஒரு ஊடகம் இருக்கிறதா ?
தேர்தலுக்கு முன்புவரை விஜய், தீயசக்தி என்று திமுக கூட்டணியையும், ஊழல் சக்தி என்று அதிமுக கூட்டணியையும் விமர்சித்ததோடு இல்லாமல், தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறி குழந்தைகளை, சிறார்களை எமோஷனலாக தூண்டிவிட்டு டிஜிடல் மோசடிவளையாக அதிகாரத்தை அடைந்ததோடு இல்லாமல், தீய சக்தி, ஊழல் சக்தி ஆட்களை வைத்து பெரும்பான்மை நிரூபித்து நிலை அரசியலில் குதிரை பேரம் இல்லை, சோபா பேரம் நடந்தது என்பது குறித்து பேச இங்கே எவருக்கும் நேர்மையும் ஜனநாயக பண்பும் இல்லை !
திமுகவின் துணையோடு வெற்றியடைந்து, அதன், ஈரம் காயும் முன்பே கட்சி மாறிய காங்கிரசு, சோபா வந்தபிறகு பேரம் படிந்த விசிக, மற்றும் கம்யூனிஸ்ட், முதலில் இல்லை பிறகு ஆதரவு என பேசி குழப்பி இப்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் அரசியல் நேர்மை குறித்தோ, ஜனநாயகத்தில் அவர்கள் எடுத்துள்ள சந்தர்ப்பவாதம் குறித்து பேச, எழுத எவருக்கும் நேர்மையில்லை.
தேர்தல் அரசியலில் இவ்வளவு கேலிக்கூத்துக்கள் அரங்கேறியபோதும் முறைப்படி ஜனநாயகத்தின் படி தேர்தலை சந்தித்து நேர்மையான வாக்குகளைப்பெற்று பதிவு செய்த ஒரு கட்சி நாதக. ஆளும் கட்சியில் நின்றவர்களில் 41 பேர் கிரிமினல் வழக்கு உள்ளவர்கள். இன்னும் அடுத்த அடுத்த நிலையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்க, ஒரு கிரிமினல் வழக்குகள் கூட இல்லாத வேட்பாளர்களை களத்தில் இறக்கி களம் கண்டது நாம்தமிழர் கட்சி.
எது ஜனநாயகத்தின் தேவை ?
ஒரு கொள்கையை முன்னிறுத்தி, அதில் தடம்பிறலாமல் பயணித்து, எவரோடும் கூட்டணி சேராமல், ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் தேர்தலை சந்திப்பது ஜனநாயகத்தின் தேவையா ?
பொதுவெளியில் ஒன்றும், உறுதிமொழி பத்திரத்தில் ஒன்றும் என சொல்லி, பொய் சொல்லி, மக்களை ஏமாற்றி, கொள்கை கோட்பாடு, தத்துவம் என எதுவும் இல்லாமல் மக்களை ஏமாற்றி வாக்கை பெற்று வெற்றி பெறுவது ஜனநாயகத்தின் தேவையா ?
நாங்கள் ஜனநாயகத்தை பின்பற்றி, அரசியல் கொள்கை கோட்பாடுகளை பாதையக்கி பயணித்து, மக்களை அரசியல் மயப்படுத்தி எல்லா தேர்தலையும் சந்திக்கிறோம். இதில் எங்களுக்கு படுதோல்வி அல்ல, மாறாக ஜனநாயகத்திற்கான படுதோல்வி !
பூனையை விட, புலி வலிமையானது என்று எலிகள் எப்போதும் ஒத்துக்கொள்வது இல்லை !
அதிலும் விகடன் போன்ற கூலிக்கு மாறடிக்கும் எலிகள் ஏற்றுக்கொள்வதே இல்லை.
எந்த தம்பிகள் கடுப்பில் இருக்கிறார்கள் ? விகடன் பதில் சொல்லுமா ?
இக்கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே தவிர, அவை அமிழ்துவின் தலையங்க நிலைப்பாட்டைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.