2009 ஆம் ஆண்டு மே 18 வரை தமிழில் விடுதலைக்காக வீர சாவைத் தழுவியவர்களின் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்பட்டவர்களின் தமிழ் விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன் கஸ்ரோ உட்பட எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வு
இது ஒரு வீரம் பொறிந்த உணர்வு நிறைந்த கனியான ஆயிரம் கனவுகளை எம்முடன் கொண்டு வந்துள்ள ஒரு நிகழ்வு. இதற்கான பொழுதுகளிலும் நம் உயிராய் நேசித்த தாய் மண்ணை கையிலும் மனதிலும் உறுதியாய் அணைத்துக்கொண்ட உன்னத வீரர்களின் வீரத்தை உணர்த்தும் நிகழ்வு. வார்த்தைகளால் விளக்க முடியாத வரலாறு படைத்த தமிழ் விடுதலை வேங்கைகளின் நிகழ்வு, இன்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் முன்னெடுக்கப்பட்டது.
பொதுச் சுடரினை தமிழீழ விடுதலை புலிகளின் காவல் துறை பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் பிரதாப் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தேசியக் கொடியினை முன்னாள் சிறுத்தை படையணியின் தளபதியும் அனைத்துலக மகளிர் அணி பொறுப்பாளருமான ஆரபி மணியரசன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். மாவீரர் பொதுப் படத்திற்கான மலர் மாலையினை முகுழினி சொர்ணம் அவர்கள் அணிவித்தார்கள்.
இன்றைய வீரவணக்கத்திற்குரிய மாவீர்களுக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தை தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.