இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2026 திங்கட்கிழமை

தமிழ் நாட்காட்டி ஜூன் 2026
அமாவாசை14-ஜூன்-2026 ஞாயிறு
பௌர்ணமி29-ஜூன்-2026 திங்கட்கிழமை
கார்த்திகை13-ஜூன்-2026 சனிக்கிழமை
சஷ்டி விரதம்20-ஜூன்-2026 சனிக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி04-ஜூன்-2026 வியாழன்
சதுர்த்தி18-ஜூன்-2026 வியாழன்
பிரதோஷம்12-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை
27-ஜூன்-2026 சனிக்கிழமை
திருவோணம்05-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை
மாத சிவராத்திரி13-ஜூன்-2026 சனிக்கிழமை
ஏகாதசி11-ஜூன்-2026 வியாழன்
25-ஜூன்-2026 வியாழன்
அஷ்டமி08-ஜூன்-2026 திங்கட்கிழமை
22-ஜூன்-2026 திங்கட்கிழமை
நவமி09-ஜூன்-2026 செவ்வாய்கிழமை
23-ஜூன்-2026 செவ்வாய்
அரசு விடுமுறை நாட்கள்26-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை
மொஹரம் பண்டிகை
திருமண நாட்கள்04-ஜூன்-2026 வியாழன்
தேய்பிறை

07-ஜூன்-2026 ஞாயிறு
தேய்பிறை

17-ஜூன்-2026 புதன்கிழமை
வளர்பிறை

18-ஜூன்-2026 வியாழன்
வளர்பிறை

24-ஜூன்-2026 புதன்கிழமை
வளர்பிறை

25-ஜூன்-2026 வியாழன்
வளர்பிறை
திருவிழாக்கள்22-ஜூன்-2026 திங்கட்கிழமை
ஆனி உத்திர தரிசனம்

26-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை
மொஹரம்

இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2026 திங்கட்கிழமை

மேஷ ராசி :
குடும்ப விருப்பங்களை சிறப்பாக நிறைவேற்ற முடியும். தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.


அதிர்ஷ்ட குறியீடுகள் :
அதிர்ஷ்ட எண் : 1 & 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் & ஞாயிறு
ஏற்றமான திசைகள் : கிழக்கு, வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்
பரிகாரம் : செவ்வாய்க்கிழமை விரதங்களை மேற்கொள்வது நல்லது


நட்சத்திர பலன்கள்
அசுவினி : விருப்பங்களை பூர்த்தி செய்ய முடிந்த நாள்
பரணி : அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும்
கிருத்திகை 1 : பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்

ரிஷப ராசி:
குடும்ப அடிப்படை தேவைகளை மேம்படுத்த முடியும். பிரபலங்கள் அறிமுகமாவர். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 6
அதிர்ஷ்ட நிறம் : மண் நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி
பரிகாரம் : குல தெய்வத்தை முறையாக வணங்கி வழிப்படவும்


நட்சத்திர பலன்கள்
கிருத்திகை 2,3,4 : தேவைகளை மேம்படுத்த முடியும்
ரோகிணி : பிரபலங்கள் அறிமுகம் கிடைக்கும்
மிருகசீரிடம் 1,2 : ஜாமின் கையெழுத்தை தவிர்க்கவும்

மிதுன ராசி :
புதிய முயற்சிகளைத் தற்சமயம் தவிர்க்கவும். பிரியமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். கடன் தொந்தரவுகள் அவ்வப்போது இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் & வெள்ளி.
ஏற்றமான திசைகள் : வடக்கு, மேற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : அன்னை மீனாட்சி
பரிகாரம் : புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகள் பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைத் தரும்.


நட்சத்திர பலன்கள்
மிருகசீரிடம் 3,4 : புதிய முயற்சிகள் தள்ளி போகும்
திருவாதிரை : பிரியமானவர்கள் சந்திப்பு நிகழும்
புனர்பூசம் 1,2,3 : கடன் தொந்தரவுகள் இருக்கும்

கடக ராசி :
பொது வாழ்வில் புகழ் ஓங்கும். நண்பர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 2 &7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள் & வியாழன்.
ஏற்றமான திசைகள் : வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சந்திரசேகரர் (சிவபெருமான்)
பரிகாரம் : பௌர்ணமி தினங்களில் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்வது துரதிர்ஷ்டங்களைப் போக்கும்.


நட்சத்திர பலன்கள்
புனர்பூசம் 4 : உங்கள் புகழ் ஓங்கும் நாள்
பூசம் : நண்பர்களிடம் மன விரோதம் ஏற்படும்
ஆயில்யம் : சுற்றத்தாரின் ஆதரவு பெருகும்

சிம்ம ராசி :
ஆன்மீக பலத்தை அதிகரிக்க முடியும். விலகிச் சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். காரிய அனுகூலம் உண்டாகும். புது தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 1 & 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் ஆரஞ்சு
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு & செவ்வாய்
ஏற்றமான திசைகள்: கிழக்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ நரசிம்மர்
பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வணங்குவது அதிக நன்மையை தரும்.


நட்சத்திர பலன்கள்
மகம் : தெய்வ பலம் கிட்டும்
பூரம் : விலகியவர்கள் கூட விரும்பி வருவர்
உத்திரம் 1 : இன்று அனுகூலமான நாளாக இருக்கும்

கன்னி ராசி :
எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் & வெள்ளி
ஏற்றமான திசைகள் : வடக்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீமன் நாராயணன்
பரிகாரம் : பறவைகளுக்குத் தினமும் ஊறவைத்த பச்சைப் பயறு தானமாக வழங்கலாம்.


நட்சத்திர பலன்கள்
உத்திரம் 2,3,4 : நிதானமாக செயல்பட வேண்டிய நாள்
அஸ்தம் : பண வரவுக்கு அதிக வாய்ப்புண்டு
சித்திரை1,2 : தம்பதியருக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்

துலாம் ராசி :
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வர். மனக்கவலைகள் அடியோடு மறையும். பெரியோர்களின் அன்பு, ஆதரவும் கிட்டும். புது தொழில், யோகம் அமையும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 6 & 8
அதிர்ஷ்ட நிறம் : லாவெண்டர்
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ ரங்கநாதர்
பரிகாரம் : ஏழைப் பெண்களுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்வது நன்மை தரும்.


நட்சத்திர பலன்கள்
சித்திரை 3,4 : உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்
ஸ்வாதி : மனக்கவலைகள் நீங்கும்
விசாகம் 1,2,3 : பெரியோர்கள் அன்பு பாராட்டுவர்

விருச்சிக ராசி:
குடும்பத்தில் நிலவி வந்த கஷ்டங்கள் குறையும். உங்களால் மற்றவர்கள் பயனடைவது உறுதி. எதிரிகள் விலகியே நிற்பர். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 9
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் & ஞாயிறு
ஏற்றமான திசைகள் : வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சண்முகர் (முருகன்)
பரிகாரம் : மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, பசுவின் பால், தயிர், சர்க்கரை தானம் செய்வது நற்பலனைத் தரும்.


நட்சத்திர பலன்கள்
விசாகம் 4 : கஷ்டங்கள் வெகுவாக குறையும்
அனுஷம் : உங்களால் மற்றவர்கள் பயன் பெறுவர்
கேட்டை : எதிரிகள் காணாமல் போவர்

தனுசு ராசி:
குடும்ப வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேன்மை பெரும். நண்பர்களிடத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன் & செவ்வாய்
ஏற்றமான திசைகள் : கிழக்கு, வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி
பரிகாரம் : வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்


நட்சத்திர பலன்கள்
மூலம் : குடும்ப முன்னேற்றம் ஏற்படும்
பூராடம் : உடல் பலம் அதிகரிக்கும்
உத்திராடம் 1 : வீண் விவாதங்களை தவிர்க்க பார்க்கவும்

மகர ராசி:
வாழ்க்கை தரத்தை வெகுவாக உயர்த்த முடியும். மற்றவர்களை மட்டுமே நம்பி எந்தவொரு செயலிலும் இறங்க வேண்டாம். காரிய தடைகள், தாமதங்கள் விலகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 6 & 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி & வெள்ளி
ஏற்றமான திசைகள் : தெற்கு, மேற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : காலபைரவர்
பரிகாரம் : நவகிரங்களை தினமும் 9 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பு


நட்சத்திர பலன்கள்
உத்திராடம் 2,3,4 : உங்கள் தரம் உயர ஆரம்பிக்கும்
திருவோணம் : பொறுப்புகளை மற்றவர்களை நம்பி தர வேண்டாம்
அவிட்டம் 1,2 : தடை மற்றும் தாமதங்கள் விலகும்

கும்ப ராசி:
குடும்பத்தில் ஏற்படும் விரிசல்களை சரி செய்ய முடியும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 4 & 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்,
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : யோக கணபதி
பரிகாரம் : சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது வாழ்வில் ஏற்றத்தைத் தரும்.


நட்சத்திர பலன்கள்
அவிட்டம் 3,4 : குடும்ப சிக்கல்களை குறைக்க முடியும்
சதயம் : வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும்
பூரட்டாதி 1,2,3 : பணம் வரவு, செலவுகளில் கவனம் தேவை

மீன ராசி:
வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். மனசாட்சிக்கு முரணான செயல்களில் ஈடுபட வேண்டாம். வாகனங்களில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும்


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் புஷ்பராகம்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன் & திங்கள்
ஏற்றமான திசைகள்: வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தத்தாத்ரேயர்
பரிகாரம் : மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வழிபாடு செய்வது சிறப்பு.


நட்சத்திர பலன்கள்
பூரட்டாதி 4 : பராமரிப்பு செலவுகள் கூடும்
உத்திரட்டாதி : பிடிக்காத காரியத்தை செய்ய தவிர்க்கவும்
ரேவதி : வாகனத்தில் மித வேகம் அவசியம்

தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 29-06-2026 To 05-07-2026

மேஷ ராசி அன்பர்களே

மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப நபர்களின் ஆதரவு வழக்கம் போல் தொடரும். முக்கிய விஷயங்களில் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படவும். பணத் தேவைகள் அதிகம் இருப்பதால் அதற்காக நிறைய போராட வேண்டியிருக்கும். வெளியில் கொடுத்த பணம் கைக்கு வருவதில் தாமதமாகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்களிடம் விட்டுகொடுத்து போவது நல்லது. உடன்பிறப்புகளால் சில ஆதாயங்கள் உண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொது பிரச்சனைகளில் அதிகம் தலையிடாமல் இருக்கவும். குடும்பத்தில் சுப விரயங்களால் எதிர்பார்த்ததை விட அதிகம் செலவுகள் ஏற்படும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி இருக்கும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். மனதில் நினைத்திருந்த காரியம் எதுவாக இருந்தாலும் அது நிறைவேற வழி பிறக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். குடும்ப வரவு, செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உங்கள் காரியத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கவும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வேறு வீட்டிற்கு மாற்றலாகி செல்லகூடும். கடன் பிரச்சனையில் அதிகம் சிக்காமல் பார்த்துக்கொள்ளவும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். புது வண்டி, வாகனம் வாங்கும் முயற்கள் தள்ளி போகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தகும்.
பரிகாரம் : குலதெய்வத்தை முறையாக சென்று வழிபடவும்

மிதுன ராசி அன்பர்களே

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். பல நாட்களாக இருந்து வந்த மன பிரச்சனை நாளடைவில் தீரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த வழியில் சில மருத்துவ செலவுகள் வரும். உற்றார், உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டு பின் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதிலும் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். பெண்கள் வகையில் ஒரு சில நன்மைகள் உண்டு. எதிர்பாராத சில மருத்துவ செலவுகள் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். குடும்ப விஷயங்களை வெளியில் யாரிடத்திலும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
பரிகாரம் : மகாலக்ஷ்மியை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே

கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரவும், செலவும் சரிசமமாக இருக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அதை முழுமனதோடு செய்தால் வெற்றி நிச்சயம். மகிழ்ச்சியான நிகழ்வுகள் மனதிற்கு இதமளிக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. உறவினர்கள் வழியில் கூடுதல் செலவுகள் வரும். குடியிருக்கும் வீட்டை சீர் அமைக்க வேண்டிவரும். கடனை கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி கொண்டு போகும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் சுப காரிய பேச்சுக்கள் நடக்கும். சஞ்சலம், குழப்பத்தால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கல் குறைந்த லாபம் தரும். அடுத்தவர்களை நம்பி முக்கிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். அதிகப்படியான உடல் உழைப்பு காரணமாக உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவியிடையே சுமூக நிலை காணப்படும். குடும்பத்தில் வளைந்து கொடுத்தது போவது நல்லது. அவசர நேரங்களில் எடுக்கும் முடிவுகளால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும்.உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்

கன்னி ராசி அன்பர்களே

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தன வரவும், புதிய பொருள் சேர்க்கையும் இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் பல வழிகளில் உதவியாக இருப்பர். குடும்பத்திற்காக நிறைய பாடுபட வேண்டியது இருக்கும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி தள்ளி போகலாம். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். உடல் நலத்தில் கவனம் தேவை. புது வீடு, மனை வாங்குவது தொடர்பான காரியங்கள் சிறப்பாக முடியும். உடன்பிறப்பு வழியில் மனக்கசப்புகள் உண்டாகும். யாரும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதிர்பாராத வகையில் பொருள் விரயம் ஏற்படும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : புதன்கிழமை பெருமாளை வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் பேச்சு திறமையால் அனைத்து விஷயங்களையும் சாதித்து காட்ட முடியும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் உண்டாகும். எதிர்பாராத தன வரவு இருக்கும்.குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஆன்மீக நாட்டம் கூடும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். பாலிய நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களை இயக்கும் பொழுது கவனம் தேவை. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் அதிக ஈடுபாடு வரும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கிடைக்கும். பல நல்ல வாய்ப்புகளை சரியான நேரத்தில் உருவாக்கிக்கொள்ள முடியும். எங்கும், எதிலும் நிதானம் தேவை. கொடுக்கல், வாங்கலில் சீரான நிலை இருக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். வீட்டில் சுபகாரிய பேச்சுகள் நடைபெறும். பூர்வக சொத்துக்கள் மூலம் லாபம் வரும். வாழ்க்கைதுணையின் ஆலோசனை கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் பெரிய பதவிகள் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : சிவன் கோவிலுக்கு சென்று வழிப்படவும்

தனுசு ராசி அன்பர்களே

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். எதிலும் மனநிறைவு இருக்கும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். காரிய தடை விலகும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். பெரியோர்களின் ஆசி கிட்டும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உடல் நலம் சீராகும். உறவினர்களிடம் வீண் சச்சரவுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் கவனம் அவசியம். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வரவேண்டிய பணம் எந்த வித தடையுமின்றி வரும். உடன்பிறப்பு வகையில் சில சங்கடங்கள் வரும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யவும்

மகர ராசி அன்பர்களே

மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்திற்காக நிறைய தியாகம் செய்ய வேண்டிவரும். மனதில் பட்டதை தைரியமாக பேசும் துணிச்சல் இருக்கும். உங்கள் பேச்சிலும், செயலிலும் வேகம் இருக்கும்.பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். தேக நலனில் அக்கறை தேவை. புதிய விஷயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று வரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்ப வளர்ச்சியில் உங்கள் பங்கு அதிகமாக இருக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முடியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். எதிர்பாலினத்தவருடன் பழகும்போது எச்சரிக்கையாக இருக்கவும். நீண்ட நாட்களாக நடக்காத காரியம் ஒன்று நடந்து முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான சிக்கலை தீர்க்க முடியும்.
பரிகாரம் : ஆஞ்சநேயரை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே

கும்பம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். பிரியமானவர்களிடம் முக்கிய விஷயங்களில் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனக்குழப்பங்கள் தீரும். அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது மூலம், வரும் பிரச்னைகளை தவிர்க்கலாம். உடல் நலம் பலம் பெரும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்டு வந்த காரியங்கள் விரைவில் கைகூடும். உத்யோகத்தில் மாற்றம் ஏற்படும். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே

மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும். தன வரவு கூடும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுப விரையங்களால் பணம் நிறைய செலவாகும். தெய்விக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வீட்டு பராமரிப்பு செலவு அதிகமாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். வாகனத்தில் செல்லும் போது பொறுமை அவசியம். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் நிதானமாக செயல்படவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிப்படவும்


ஜூன் மாத ராசி பலன்கள் 2026

ஜூன் மாத ராசி பலன்கள் 2026
ஜூன் மாத ராசி பலன்கள் – (2026)

(பராபவ வருடம் வைகாசி மாதம் 18ம் தேதி முதல் ஆனி மாதம் 16ம் தேதி வரை )

வாக்கிய பஞ்சாங்கப்படி 01-06-2026 முதல் 30-06-2026 வரை பலன்கள் கணித்து எழுதப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ராசிக்கும் தனித் தனியே கிரக நிலையின் அடிப்படையில் எழுதப்பட்ட பொது பலன்கள் ஆகும். மேலும் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும்.

கிரக நிலை மாற்றம்

08-06-2026 – கடக சுக்கிரன்
15-06-2026 – மிதுன சூரியன்
20-06-2026 – ரிஷப செவ்வாய்
22-06-2026 – கடக புதன்

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர்
ஆலந்தூர் ஜோதிடர் A.வினோத் குமார் P.hd Astrology (அலைபேசி: 09003019831)

அஸ்வினி 1, 2, 3, 4 பாதம், பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1ம் பாதம் முடிய)
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற இறக்கமாகவே உள்ளது. உங்கள் பேச்சில் நிதானமும், செய்யும் செயல்களில் கவனமும் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒரு சில காரியங்கள் நடக்கலாம் குல தெய்வ வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் காரிய வெற்றிக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். கடன் தொல்லைகள் சில நேரங்களில் மனதை பாதிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடும் கவனமும் தேவை. சுப காரியங்கள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்க முடியும். குடும்பத்துடன் கலந்து ஆலோசிப்பது எல்லா விஷயத்திற்கும் நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
சந்திராஷ்டமம் : 1,26,27,28,29 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

(கார்த்திகை 2, 3, 4, ரோகினி 1, 2, 3, 4, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் முடிய)
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் நிதானமாக முடிவு எடுப்பது நல்லதும். தினமும் தியானம் செய்வது மனதிற்கும், உடலுக்கும் நல்லது. மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த காரியங்களை கூட எளிதில் முடிக்க முடியும். குடும்பத்தில் பொருள் விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயங்களாகவே இருக்கும். தடைபட்ட காரியங்கள் கூட மாறி கை கொடுக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைத்து சுகமும் நிம்மதியும் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திட்டமிடாத பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். வழக்கில் இருந்த இழுபறி நிலை நீடிக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 1,2,3,4 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

(மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை 1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 முடிய)
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமாகவே உள்ளது. பல சிக்கலான விஷயங்களை கூட சாதுர்யமாக பேசி முடிக்க முடியும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெற்றோர்களின் ஆலோசனை முக்கியமான நேரத்தில் கிடைக்கும். வெளியிடத்தில் கடன் வாங்கி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நிலை பொறுத்தவரை சின்ன சின்ன பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் ஏற்படும். பயணத்தில் மூலம் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 4,5,6 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

(புனர்பூசம் 4ம் பாதம் முடிய, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள் முடிய)
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல நல்லதும், கெட்டதும் கலந்தே நடக்கும். உங்களது செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். பண வரவு அவ்வப்போது இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உடன்பிறப்பிடம் சுமூகமான உறவு இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். கொடுக்கல், வாங்கலில் சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் எந்த குறையும் இல்லாமல் இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். உங்கள் மேல் சுமத்தப்பட்ட வீண் பழி நீங்கும். உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும், தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 6,7,8,9 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

(மகம் 1, 2, 3, 4, பாதங்கள், பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1ம் பாதம் முடிய )
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். வர வேண்டிய பண கூட சற்று தாமதித்து பின் கைக்கு வரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் நிறைய மாற்றங்களை சந்திக்க வேண்டிவரும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் திகரிக்கும். பொருளாதார சிக்கல்களை திறமையாக சமாளிக்க முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். உடல் நலம் சீர்பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களால் சில பிரச்சனைகள் வரும். உங்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கும். வெளியில் கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் திருப்தி தரும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 9,10,11 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம் 1, 2, 3, 4, சித்திரை 1, 2 பாதங்கள் முடிய )
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த காரியத்தை செய்தாலும் பல முறை யோசித்து செய்வது உத்தமம். குடும்பத்தில் ஆதரவு பெருகும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். சொந்த பந்தங்களிடே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அடுத்தவர் பிரச்னையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை மனஉறுதியடன் போராடி வெற்றி பெற முடியும். உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனை கேட்பது பல வகையில் உதவியாக இருக்கும். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். மனக்குழப்பம் தோன்றி மறையும். பெரிய மனிர்தர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோக பணியில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி இருக்கும்.
சந்திராஷ்டமம் : 11,12,13 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 முடிய )
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பல திருப்பு முனையான விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் தொலைத்து போன சந்தோஷம் மீண்டும் வரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வராது என்று நினைத்த பொருள் கைக்கு வரும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். உங்கள் பிடிவாத குணத்தை விட்டு விடுவது எல்லா வகையிலும் நல்லது. குடும்பத்தில் எல்லாரிடமும் மற்றவர்களிடம் முக்கிய விஷயத்தில் அனுசரித்து செல்வது நல்லது. பணம் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். பேச்சில் நிதானம் அவசியம் தேவை. புதிய வீடு வாங்கும் முயற்சிகள் தாமதம் ஆகும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சந்திராஷ்டமம் : 13,14,15 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

(விசாகம் 4ம் பாதம் முடிய, பனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 பாதங்கள் முடிய )
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல சிக்கல்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் தானாகவே வரும். குடும்பத்தில் பல அவசர முடிவுகளால் பிரச்சனைகள் கொடுக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம். வீட்டை புதிப்பிக்கவோ, வீடு மாற்றி செல்லவோ வாய்ப்பு வரும். பல பிரச்சனைக்கு நடுவே பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். வரவுக்கு மீறிய செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு அவசியம். வீடு, வாகனங்களுக்கான செலவு அதிகரிக்கும். குடும்பத்துடன் பயணிக்க விருப்பம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கற இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்பிருக்கிறது. கடன் வாங்கும் என்னத்தை கை விடுவது நல்லது. உடல் நலம் தொடர்பாக மருத்துவ செலவு ஏற்படலாம். திட்டமிட்ட பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

(மூலம் 1, 2, 3, 4 பாதம், பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1ம் பாதம் முடிய )
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் தொடக்கத்தில் மனக்குழப்பத்துடன் காணப்பட்டாலும், பிற்பாதியில் நல்ல திருப்பம் உண்டாகும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் நாளடைவில் சீராகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி போடவும். வண்டி, வாகனம் வாங்கும் எண்ணத்தை சிறிது காலம் தள்ளி வைக்கவும். தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.பணம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகரிக்கும். எங்கும், எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 பாதங்கள் முடிய)
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியம் விரைவில் முடியும். எதிர்பாராத பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் வரவுகளும், செலவுகளும் சரிசமமாக இருக்கும். உங்களிடம் புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். ஒரு காரியம் செய்யும் முன் தீர யோசித்து செய்வது நல்லது. யாருக்காகவும், எப்போதும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பொதுப்பிரச்சனைகளை எதிர்கொள்வதில் அதிக கவனம் தேவைப்படும். எதிர்பாராத சில செலவுகளால் வெளியில் கடன் வாங்கி செலவு வேண்டிய சூழ்நிலை உருவாகும். பாலிய நண்பர்களின் நிறைய ஆலோசனை கிடைக்கும். முக்கிய காரியங்களை நீங்களே செய்து முடிப்பது நல்லது. வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.புதிய தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 19,20,21 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் முடிய )
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல சௌபாக்கியங்களை பெற முடியும். மனதில் புத்துணர்ச்சியும். தெம்பும் பிறக்கும். சற்றும் எதிர்பாராத பணவரவும், அதிர்ஷ்டங்களும் வந்து சேரும். புத்தி சாதூர்யத்தால் எதையும் சாதிக்க முடியும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பிறக்கும். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பிரியமானவர்கள் வழியில் ஏதாவது மனகசப்பு ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாருக்கும் எந்த உத்திரவாதமும் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
சந்திராஷ்டமம் : 21,22,23,24 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 பாதங்கள் முடிய )
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் விருப்பத்தினை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். முயற்சி செய்யும் எல்ல காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது. எதிர்ப்புகளை சமாளிக்கும் மனவலிமை உருவாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகமும் அவர்களால் நிறைய ஆதாயமும் உண்டு. தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். எதிரிகளின் பலம் குறையும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். கடன் பிரச்சனைகள் தீரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடா வேண்டாம். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சந்திராஷ்டமம் : 24,25,26 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்


Related posts

இன்றைய ராசி பலன் 27 ஜூன் 2026 சனிக்கிழமை

இன்றைய ராசி பலன் 26 ஜூன் 2026 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசி பலன் 25 ஜூன் 2026 வியாழக்கிழமை