Saturday, November 7, 2026

இன்று (நவம்பர் 06), ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,960 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில், கடந்த வாரத்தில் குறைந்து வந்த தங்கம் விலை, சில தினங்களாக உயர்ந்து வருகிறது.

சென்னை, தமிழகம் | 06.11.2026

கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 02) தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து 12,775 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் 200 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

செவ்வாய் கிழமை (நவம்பர் 03)தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

புதன்கிழமை (நவம்பர் 04) தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 12,825 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மீண்டும் மதியம் தங்கம் விலை சவரனுக்கு 2,200 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் கிராமுக்கு 275 ரூபாய் அதிகரித்து 13,100 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 210 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நேற்றைய நிலவரம்: இன்று (நவம்பர் 05) தங்கம் விலை சவரனுக்கு 2280 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 285 ரூபாய் அதிகரித்து 13,385 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 210 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்: இன்று (நவம்பர் 06) தங்கம் விலை சவரனுக்கு 1960 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 245 ரூபாய் குறைந்து 13,140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 205 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Leave a Comment