16
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ராவலகோட் பகுதியில், விலைவாசி உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தை தொடர்ந்து இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
ராவலகோட் / 06.11.2026
பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான் வீடியோ, படங்களை போராட்டக்காரர்கள் இணையத்தில் பகிர முயன்றதால் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புமாறு உலக நாடுகளுக்கு போராட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.