சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்து தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் முழுதும் பெரிதும் சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, நவம்பர் மாதத்தில் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.

சென்னை | 09.11.2026
நவ., 2ம் தேதி முதல் நவ., 7ம் தேதி வரையில் மட்டும் ரூ.3200 அதிகரித்துள்ளது. நவ.,6ம் தேதி மட்டும் ரூ.1,960 குறைந்திருந்தது.
இந்த வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை அதிகரித்தே காணப்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.760 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 1,06,040க்கும் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.13,255க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய வாரத்தில் ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, பண்டிகை முடிந்தும் அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் எந்தவித மாற்றமும் இன்றி, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும், கிராம் ரூ.205க்கு விற்பனையாகிறது.