அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

முதன்மை செய்திகள்

புலம்பெயர் தமிழர்கள்

தமிழின அழிப்பின் பங்காளி ரில்வின் சில்வாவிற்கு எதிராக பிரித்தானியாவில் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள்!

by Amizhthu 26 November 2025
written by Amizhthu

ஊடக அறிக்கை
24.11.2025

தமிழின அழிப்பின் பங்காளி ரில்வின் சில்வாவிற்கு எதிராக பிரித்தானியாவில் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள்!

நேற்று, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரித்தானியாவின் அல்பேட்டன் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக கடும்போக்கு சிங்கள பௌத்த இனவாதியும், தமிழின அழிப்பின் பங்காளருமான ரில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழ் மக்கள் அணிதிரண்டு மாபெரும் போராட்டத்தை நடாத்தியிருந்தனர்.

வரலாற்று ரீதியாக, 1983 ஆம் ஆண்டு (கறுப்பு யூலை) இன அழிப்புக்கு முன்னரும் பின்னரும், தமிழின அழிப்பையே தமது சித்தாந்தமாகக் கொண்டு செயற்பட்டவர் ரில்வின் சில்வா. முள்ளிவாய்க்காலில் தமிழ் இனம் மீது நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது, மகிந்த, கோத்தபாய, சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ அரச கட்டமைப்பினால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பிற்கான யுத்தத்தில், இன்றைய ஆளும் JVP/NPP இன் பிரதானியும் இதே சிந்தனைவாதியுமான ரில்வின் சில்வா, இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட இனவாதிகளுடன் இணைந்து, அரச இராணுவ இயந்திரத்திற்குப் பெரும் பக்கபலமாக நின்றவர்கள் என்பதை தமிழ் மக்கள் நினைவில் கொண்டு இப்போராட்டத்தை நடாத்தினர்.

சிங்கள மக்களைச் சந்திப்பதற்காக பிரித்தானியா வந்திருந்த தமிழின அழிப்பாளர்களில் ஒருவரான ரில்வின் சில்வாவின் வாகனத்தை தமிழ் மக்கள் வழிமறித்து நிறுத்தினர். ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் சில்வாவின் வாகனத்தைப் பாடசாலையின் வாயில் வழியாக நகர்த்த மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அங்கு நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தரப்பினர் உதவியுடன் மிகுந்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் அவரது வாகனத்தை அங்கிருந்து நகர்த்திச் சென்றனர். இதேவேளை போராட்டத்தின்போது, அங்கு வருகை தந்த சிங்கள மக்களுக்கும், அவர்களது வாகனங்கள் உள்ளே செல்வதற்கும் தமிழ் மக்கள் தமது சுய ஒழுங்கமைப்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

நேற்றைய போராட்டம் என்பது தம் சொந்த உறவுகளை சிங்கள பேரினவாதத்திடம் பறிகொடுத்த மக்கள் திரண்டெழுந்து தம் இனத்தின் அழிவுக்கு காரணமான இனப் படுகொலையாளருக்கு எதிராக தொடுத்த உரிமைக்கும் நீதிக்குமான போராட்டமாகும்.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்த அவசர அழைப்பை ஏற்று, தமிழ் தேசியத் தளத்தில் இயங்கி வரும் தேசிய செயற்பாட்டாளர்களும், உணர்வாளர்களும், பொதுமக்களுமாக ஒருமித்து நின்று போராட்டத்தைப் பலப்படுத்தினர். இந்த நிகழ்வு, சிங்களப் பேரினவாத அரசுக்கும் ரில்வின் சில்வா போன்ற இனவாதிகளுக்கும் காத்திரமான அரசியல் செய்தியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. தமிழின அழிப்பின் பங்காளிகளின் சுதந்திரமான வருகையை எமது மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்! எம் இனத்திற்கான நீதியைப் பெறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்!

நேற்றைய போராட்டத்தின் அதிர்வானது, சிங்கள பௌத்த பேரினவாதிகளை மட்டுமல்லாது, இறுதி யுத்தம் வரை இவர்களோடு இணைந்து செயற்பட்ட ஒட்டுக் குழுக்களையும் சினம் கொள்ள வைத்து, இனவழிப்பாளர்களை நியாயப்படுத்தி ஊடகச் சந்திப்புக்கள் மூலம் பிணை எடுக்கும் பிரயத்தனங்களைச் செய்ய வைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழீழ மக்களால் நிராகரிக்கபட்ட இவ்வாறான எம் தேசத்தின் விரோதிகள் தொடர்பாக தொடர்ந்தும் எம் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மீண்டும் வலியுறுத்தி நிற்கிறது .

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
TCC-UK

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
26 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Poem - கவிதை

விடுதலை வேட்கை: பிரபாகர காவியம்

by Amizhthu 26 November 2025
written by Amizhthu

களம் கண்ட நாயகன்! காவியத் தலைவன்!
தமிழ்த் தேசியத்தின் தனிப்பெரும் போர்வாள்!
விலைபோகா வீரத்தின் நிழல் நீ – எங்கள்
விடுதலைக் களத்தின் முகவரியே நீ!

தலைமைத்துவம் நீ – தமிழர் வழிகாட்டி,
ஒழுக்கமும் கட்டுப்பாடும் உனது மூச்சுக்காற்று.
மனிதநேயம் கொண்ட மகோன்னதத் தலைவா,
மண்டியிடாத மானத்தின் அடையாளம் நீயே!

போர்க்குணம் தாங்கிய புனிதமான வேங்கை,
புரட்சியின் தீச்சுடர், வீரம் விளைந்த கொம்பே.
தமிழ் மொழி மீது நீ கொண்ட பற்று – எங்கள்
தாய்மண்ணின் வேராய், தியாகமாய் நிலைத்தது!

ஈழத்தின் விடியலாய், எழுச்சியின் பேரொளியாய்,
இருண்ட வானில் உதித்த வீரச் சூரியன் நீ.
உலகத் தமிழர்களின் உயரிய முகவரி – நீதான்,
வரலாற்றுக் காவியத்தின் ஒப்பற்ற கதாநாயகன்!

உன் தலைமை திறன் – தீர்மானமும் வலிமையும்,
போர்வெளியில் ஒளி விளக்கும் குரல் போல.
அமைப்பும் யோசனையும் உன் கரங்களிலே;
ஒவ்வொரு தந்திரமும் வெற்றிக்கு வழிகாட்டும்.

உன்னில் ஒளிரும் தனித்துவம் – சிந்தனையின் பலம்,
சவால்களை மோதிச் செல்லும் நிமிர்ந்த முனைவர்.
உலகம் பாராட்டும் உன் திட்டம், உன் செயல்திறன்,
ஈழத் தமிழின் விடுதலைக்கான மகத்தான பாதை!

எங்களின் விடுதலை வேட்கை – உன்னில் பிறந்தது,
எழுச்சி கொண்டால் உன் நினைவு எமக்குத் துணிந்தது.
சத்திய வேள்வியில் தியாகத் தீயை மூட்டி,
சமர்க்களம் கண்ட எங்கள் சிம்மத் தலைவா!

உன் நிழல் வீரம்; உன் மூச்சு விடுதலை.
தமிழர் தேசம் காணும் வரை ஓயாது எம் ஓட்டம்!
ஈழத் தமிழின் விடுதலைப் போர்வாளனாய்,
நீயே எங்கள் கண்ணில் ஒளிரும் வீரன்.

உன் பாதையில் நடக்கும் ஒவ்வொரு தமிழும்,
மண்ணின் மீது எழும் விடுதலைக்கான பாடல்!
உலகம் நினைத்தாலும் எதிரிகளும் பயந்தாலும்,
உன் செயல்திறன் – எங்கள் விடுதலைக்கான தீபம்!

எழுதியவர்  ஈழத்து நிலவன்
26/11/2025 –


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
26 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Poem - கவிதை

Longing for Liberation: The Prabhakaran Epic

by Amizhthu 26 November 2025
written by Amizhthu

Longing for Liberation: The Prabhakaran Epic

Hero of the battlefield! Epic leader supreme!
The unmatched spear of Tamil national dreams!
Shadow of priceless courage – it is you,
The address of our liberation front, our guiding light!

You are leadership itself – the pathfinder of Tamils,
Discipline and virtue flow with every breath of yours.
A magnanimous leader, filled with humanity,
You are the emblem of a lion that bows to none!

A sacred tiger carrying the virtues of war,
The blazing flame of revolution, the horn of valor.
Your love for the Tamil language – eternal and unwavering,
Rooted in the motherland, sustained by sacrifice!

Dawn of Eelam, radiant flame of uprising,
Rising sun of courage piercing the darkest skies.
The high address of Tamils across the world – it is you,
Unmatched hero of our historical epic!

Your leadership – decisive, mighty, and bold,
A voice that shines like a guiding light on the battlefield.
Planning and strategy flow from your hands;
Every tactic paves the way to victory.

Your uniqueness glows – the power of insight,
A steadfast pioneer confronting all challenges.
Your vision and action are admired worldwide,
A glorious path leading to the liberation of Eelam Tamils!

Our longing for freedom – born from your being,
When inspired, your memory strengthens our courage.
In the oath of truth, igniting the flame of sacrifice,
Our lion-hearted leader, who has seen the battlefield!

Your shadow is valor; your breath, liberation.
Until the Tamil nation witnesses freedom, our march will never cease!
As the spear of Eelam Tamil liberation,
You shine eternally in the eyes of your people.

Every Tamil walking in your path,
Sings a song of freedom upon the earth!
Though the world watches, and foes may tremble,
Your skill and courage – the beacon of our liberation!

「 Written by  Eelaththu Nilavan 」
                     26/11/2025

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
26 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
சர்வதேசச் செய்திகள்

UK புதிய விதிமுறை: அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகள் (ETA) பெறாமல் நுழைய முடியாது.

by Amizhthu 25 November 2025
written by Amizhthu

ஐக்கிய இராச்சியம் (UK) அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின்படி, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிப்ரவரி 25, 2026 முதல் ETA (Electronic Travel Authorisation) பெறாமல் UK-க்குள் நுழைய முடியாது.

🔹 ETA என்றால் என்ன?

ETA என்பது ஆன்லைன் வழியாக முன்கூட்டியே பெற வேண்டிய மின்னணு பயண அனுமதி. இது விசா அல்ல, ஆனால் UK-க்கு குறுகிய கால சுற்றுலா, வணிகம் அல்லது குடும்ப சந்திப்பு போன்ற நோக்கங்களுக்காக வருவோருக்கு கட்டாயமாகும்.

🔹 புதிய நடைமுறையின் காரணம்

UK உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:

  • எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துதல்
  • பயணிகளின் அடையாளம் மற்றும் பயண நோக்கத்தை முன்கூட்டியே சரிபார்த்தல்
  • சட்டவிரோத நுழைவுகளைத் தடுக்கும் முயற்சி

🔹 பயணிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள்

  • பிப்ரவரி 25, 2026 முதல், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ETA இல்லாமல் விமான நிலையம் அல்லது துறைமுகத்தில் அனுமதி மறுக்கப்படலாம்.
  • ETA விண்ணப்பம் ஆன்லைனில் எளிதாக செய்யலாம்; சில நிமிடங்களில் அனுமதி கிடைக்கும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
  • ETA கட்டணம் குறைந்த அளவில் இருக்கும்; ஆனால் விண்ணப்பம் செய்யாமல் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது.

🔹 சர்வதேச எதிர்வினைகள்

சில பயணிகள் சங்கங்கள், “இது கூடுதல் சுமையாக இருக்கும்” எனக் கருத்து தெரிவித்துள்ளன. ஆனால் UK அரசு, “இது பாதுகாப்பு மற்றும் பயண வசதிக்காக அவசியமானது” என வலியுறுத்துகிறது.

🔹 முடிவுரை

பிப்ரவரி 25, 2026 முதல் UK-க்கு பயணம் செய்ய திட்டமிடும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் குடிமக்கள், ETA விண்ணப்பம் செய்வது கட்டாயம். பயணிகள் முன்கூட்டியே தயாராக இருப்பது அவசியம்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
25 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

மூதூர் மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

by Amizhthu 25 November 2025
written by Amizhthu

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றை மீட்டுத் தருமாறு கோரியும் (24.11.2025) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் (குளோபல் சீ பூட்) நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

மூதூர் தக்வா நகர் கடற்கரை பள்ளிவாசலிலிருந்து தொடங்கிய இந்தப் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி ஊடாக சென்று மூதூர் பிரதேச சபையில் முடிவடைந்தது.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் ரோஸானாவிடமும் மகஜரைக் கையளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மீனவர்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“மீனவர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்!”

“கடல் வளங்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”

“மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்”

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்டோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள், தினமும் கடலுக்குச் சென்று எங்கள் குடும்பங்களை நடத்துபவர்கள். எங்கள் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடைமுறை எங்களுக்குச் சட்டவிரோதமாகவும் அநியாயமாகவும் இருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர் எனக் கூறினர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
25 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

ரில்வினுக்கு எதிரான லண்டன் மக்களின் போராட்டத்தை ‘ஈபிடிபி’ கண்டிக்கிறது!

by Amizhthu 25 November 2025
written by Amizhthu

புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள் ஒருவரான ரின்வின் சில்வாவற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு தமது கண்டனத்தினையும் வெளிப்படுத்தி இருக்கின்றது.

யாழ். ஊடக மையத்தில் 24.11.2025’ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்தினால் குறித்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விமர்சனங்களுக்கு அப்பால் கடந்த ஆயுத வழிமுறையில் ஈடுபட்டு பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த தரப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்றது.

குறித்த தரப்பு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றது. புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட போதிலும் அந்த அமைப்பு சார்பாக உயிரழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவுகூர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்கிறார்கள். அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இவ்வாறான சூழலில் ரில்வின் சில்வாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதை அறிவுசார்ந்து சிந்திக்கின்ற யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தற்போதைய சூழலில் இவ்வாறான செற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் கோமா நிலையில் இருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.

ஒரு காலத்தில் இந்த நாட்டிலே தமிழ் மக்கள் சார்பிலே ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 87 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய போராட்டத்தின் பின்னர் ஈ.பி.டி.பி. மாற்று கருத்துக்களை வெளிப்படுத்தி வந்திருந்தது.

இருந்தாலும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் இலக்கை அடைய முடியும் என்று ஒரு தரப்பு செயல்பட்டு வந்தது. அதனை வலுப்படுத்தும் வகையில் புலம்பெயர் நாடுகளில் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் இன்று அந்த நிலை இல்லை என்பதையும், இப்போது முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் தாயகத்தில் வாழும் எமது மக்களின் இருப்பிற்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
25 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
NEWS

Tamil National Politics and Sinhalese Political Conspiracy: Power, Deception, and the Struggle for Self-Determination

by Amizhthu 25 November 2025
written by Amizhthu

Introduction: The Crisis of Tamil National Politics

Tamil national politics today stands at a critical historical crossroads. This is not merely a political setback, but a systematic attempt to dismantle the collective identity, historical consciousness, and territorial rights of the Tamil people. The challenges faced are not accidental; they are the direct outcome of a long-term, calculated strategy executed by the Sinhalese-dominated state structure.

This article presents a comprehensive and intensified political analysis of how Sinhalese political mechanisms operate as an organised structure of domination, and how Tamil unity remains the only viable path toward national revival.

The Systematic Structure of Sinhalese Political Conspiracy

Sinhalese politics is not a normal rival political force. It functions as a carefully designed machinery of control aimed at denying the Tamil people their homeland rights and political self-determination.

The ideology of “One Country” has never been a symbol of unity; instead, it has served as a permanent weapon to erase Tamil nationhood. Through constitutional manipulation, forced demographic alteration, and militarised occupation, the state has gradually transformed Tamil regions into zones of political experimentation and domination.

Schemes such as state-sponsored colonisation, massive irrigation projects, military cantonments, Buddhist symbolic encroachments, and aggressive cultural restructuring are not development initiatives; they are instruments of political and cultural eradication.

Each piece of land in the North and East has been converted into a battleground of identity, where the absence of Tamils is branded as “national development” and their marginalisation is marketed as “national unity.”

Psychological Warfare: The Hidden Architecture of Domination

The primary objective of Sinhalese political strategy is not merely physical suppression but cognitive destruction.
Key methods include:

• Branding Tamil nationalism as extremism.

• Fragmenting Tamil political formations.

• Exploiting individual leaders to weaken collective movements.

• Engineering fear through state-controlled propaganda.

This sustained psychological campaign aims to normalise Sinhalese supremacy and delegitimise Tamil political aspirations, thereby converting oppression into an accepted political reality.

Three Political Prisons: Seventy-Five Years of Deceptive Solutions

For over seven decades, Tamils have been trapped within three political constructs that masquerade as solutions but function as mechanisms of control:

• “Ekkiya Rajya” (Unitary State)

• Federal structures without genuine autonomy

• The Thirteenth Constitutional Amendment

These frameworks have systematically obstructed the Tamil right to self-determination and have been strategically used to pacify resistance while preserving centralised domination.

Global Historical Perspective: The Power of National Unity

History demonstrates that only unified peoples rise as strong nations. Countries such as the United States, Germany, China, Indonesia, and Italy consolidated their power by forging strong national identities under a unified political will.

The logic is clear:

• Unity builds nations.

• Division destroys them.

This universal principle equally applies to the Tamil nation.

The Call of the Tamil Homeland: One Nation – One Solution

Based on the collective voice of Tamil intellectuals, political thinkers, and global community forums, a decisive call emerges:

Under an indivisible Tamil national unity, a single political solution must prevail – the restoration of full and lawful self-governing authority of the Tamil nation.

Intermediate political formulas disguised as compromise only serve to legitimise Sinhalese dominance.

Conclusion: The Final Gateway to Political Reawakening

Tamil political history now stands at a decisive threshold. Continued fragmentation will lead to irreversible erosion. Sustained unity will ignite national resurgence.

The future of the Tamil people does not lie in Colombo, Delhi, or Washington. It lies in their collective political determination and unity.

Complete self-governing authority for the Tamil nation is no longer an aspiration; it is a historical necessity.

One Nation – One Solution – One Future.

╭────────────────────╮
Written by  Eelaththu Nilavan
╰────────────────────╯
25/11/2025


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
25 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
கட்டுரைகள்

தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை

by Amizhthu 25 November 2025
written by Amizhthu

தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை – வாக்கு வங்கிச் சரிவும் – அவசர ஒருங்கிணைப்பின் தவிர்க்க முடியாத அவசியமும்

முன்னுரை

இலங்கைத் தமிழர்களின் அரசியல் பயணம் என்பது சாதாரண கட்சி அரசியலின் வரலாறு அல்ல. அது நிலம், அடையாளம், மொழி, நினைவு, உரிமை, உயிர் ஆகியவற்றின் மீதான நீண்ட இனப்போராட்ட வரலாறு. அந்தப் போராட்டத்தின் அரசியல் முகமாக நீண்ட காலம் தமிழரசுக் கட்சி மற்றும் அதன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்கினாலும், அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வாக்கு வங்கி சரிவும், உள்கட்சிப் பிளவுகளும், கொள்கைத் தளர்ச்சியும் தமிழ்த் தேசிய அரசியலை ஆபத்தான நிலையுக்குக் கொண்டு சென்றுள்ளன.

இச்சூழலில், தமிழ் மக்களின் அரசியல் உரிமை சிங்கள ஆதிக்கச் சக்திகளின் கைகளில் முழுமையாகக் கைமாறும் அபாயம் உருவாகி வருகிறது. இதனை எதிர்கொள்வதற்கு ஒரே வழி – பிளவுகளை அகற்றி, தமிழ்த் தேசிய ஒற்றுமையை இறுகப் பதியச் செய்வதே.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கிச் சரிவு

2015க்குப் பின்னரான தொடர் வீழ்ச்சி

2015 பொதுத் தேர்தலில் 16 ஆசனங்களைப் பெற்று வடக்கு – கிழக்கு தமிழர்களின் தெளிவான அரசியல் பிரதிநிதியாகத் திகழ்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பின்னர் ஒவ்வொரு தேர்தலிலும் படிப்படியாகச் சரிவடைந்தது. இன்றைய நிலையில் தமிழரசுக் கட்சிக்கு நேரடியாக நிலைத்திருப்பது எட்டு ஆசனங்கள் மட்டுமே.
இந்தச் சரிவு வெறும் எண்களின் வீழ்ச்சி அல்ல. இது தமிழ் மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்பு, உற்சாகம் ஆகியவற்றின் சிதைவை வெளிப்படுத்தும் அரசியல் அறிகுறியாகும்.

வீழ்ச்சிக்கான அடிப்படை அரசியல் காரணங்கள்

❶. “ஏக்கிய ராஜ்ஜியம்” (ஒற்றை ஆட்ச்சி ) அரசியலமைப்புக்கு அளிக்கப்பட்ட மறைமுக அனுசரணை

தமிழ்த் தேசியத்தின் அடிப்படை கோட்பாட்டுக்கு முரணான ஒற்றை அரசுக் கட்டமைப்பை மறைமுகமாக ஏற்றுக்கொண்ட அரசியல் நிலைப்பாடுகள், கட்சித் தலைமையின் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் சிதைத்தன. இது தன்னாட்சி நோக்கத்திலிருந்து விலகிய ஒரு அரசியல் திசைமாற்றமாகவே பார்க்கப்பட்டது.

❷. உள்கட்சிப் பிளவுகளும் புதிய அணுக்களின் தோற்றமும்

விக்னேஸ்வரன் தலைமையில் உருவான புதிய அரசியல் அமைப்புகள் தமிழ்த் தேசிய வாக்குகளை மேலும் சிதறடித்தன. இது ஒருமைத்தன்மையைப் பலவீனப்படுத்தி சிங்கள ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது.

❸. மக்களிடம் தோன்றிய அரசியல் விரக்தி

தொடர்ச்சியான தோல்விகள், உறுதியற்ற செயல்திட்டங்கள், சமரச அரசியல் ஆகியவை தமிழ்த் தேசியத்திற்கான நம்பிக்கையை மக்களிடம் குறைத்துவிட்டன. இதன் விளைவாகப் பலர் அரசியலிலிருந்து முழுமையாக விலகத் தொடங்கினர்.

அவசர ஒருங்கிணைப்பின் தேவை

தேசிய மக்கள் சக்தியின் ஊடுருவல்

சிங்கள மைய அரசியலின் புதிய முகமாக தேசிய மக்கள் சக்தி வடக்கு – கிழக்கில் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்த முயன்றது. ஒற்றை அரசை வலுப்படுத்தும் அதன் நிலைப்பாடு தமிழ்த் தேசிய உரிமைக்கான நேரடியான சவாலாகும்.

பிளவுபட்ட தமிழ்த் கட்சிகளின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, “வடக்கு – கிழக்கின் பெரும்பான்மை ஆதரவு எமக்கே” என்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்பட்டது.

சிங்கள அரசியல் சூழ்ச்சி – திட்டமிட்ட ஆதிக்க இயந்திரம்

சிங்கள அரசியல் வெறும் அதிகாரப் போட்டி அல்ல. அது இன அடிப்படையிலான ஆதிக்கத் திட்டம். தமிழர்களின் தாயக உரிமையை மறுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அரசியல் அமைப்பே ஒற்றை ஆச்சி அரசு.

• தமிழர் நிலங்களில் திணிக்கப்பட்ட குடியேற்றங்கள்

• இராணுவ முகாம்களின் நிரந்தர நிறுவல்

• பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள்

• நில அபகரிப்பு மற்றும் குடிநீர் வளக் கைப்பற்றல்

• இராணுவ நகராக்கல் திட்டங்கள்

இவை அனைத்தும் தமிழர் நிலத்தை சிங்களமயமாக்கும் நீண்டகால உத்திகளாகும்.

சிங்கள அரசியலின் உளவியல் போர்

தமிழ்த் தேசியத்தை ‘பிரிவினை’ எனப் பொய்யாகச் சித்தரித்து, அதை சமூக விரோதமாக மாற்ற முயற்சிக்கிறது சிங்கள அரச இயந்திரம்.

• தமிழர்களுக்குள் பயமும் சந்தேகமும் விதைத்தல்

• தலைவர்களைத் தனித்தனியாக வேட்டையாடல்

• ஊடக வழித் திரிபான செய்தியைப் பரப்புதல்

• இளைஞர்களை அரசியலிலிருந்து விலக்குதல்

இவை அனைத்தும் தமிழ்த் தேசிய விழிப்பை முடக்க உருவாக்கப்பட்ட உளவியல் யுத்தங்களாகவே பார்க்கப்படுகின்றன.

75 ஆண்டுகளாக தொடரும் மூன்று அரசியல் சிறைகள்

தமிழர்கள் நீண்டகாலமாக மூன்று பொய்த் தீர்வுகளில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்:

• ஒற்றையாட்சி அரசு “Ekkiya Rajya” (Unitary State)

• சமஸ்டி அமைப்பு

• பதிமூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம்

இவை எதுவும் தமிழ்த் தேசிய விடுதலைக்காக உருவாக்கப்பட்டவை அல்ல. மாறாக, தமிழர்களை நிரந்தர சிறுபான்மையாகத் தாழ்த்துவதற்கான சூழ்ச்சித் திட்டங்கள் ஆகும்.

உலக வரலாற்றின் பாடம் : ஒற்றுமையே விடுதலையின் மூலக்கல்

உலக வரலாறு கூறும் உண்மை ஒன்று மட்டுமே – ஒற்றுமை உள்ள இடத்தில் தேசம் எழும்; பிளவு உள்ள இடத்தில் அடிமைத்தனம் தொடரும்.

பல தேசங்கள் ஒரே அடையாளத்தின் கீழ் இணைந்தபோது தான் தங்கள் சுய ஆட்சியை மீட்டன. தமிழ்த் தேசமும் அதே பாதையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தமிழர் நிலத்தின் வரலாற்று உண்மை

இந்தத் தீவு தமிழினத்தின் நாகரிக மரபால் உருவானது. சிங்கள அரசியல் தோற்றத்திற்கு முன்னரே தமிழின் அரசியல், ஆன்மீக, பண்பாட்டு அடையாளம் இங்கு நிலைபெற்றிருந்தது.

இன்றைய சிங்கள ஆதிக்கம் வலிமையால் ஏற்பட்டதல்ல; அது தமிழரின் ஒற்றுமைச் சிதைவின் விளைவு.

உலகத் தமிழர்களின் வரலாற்று அழைப்பு

இன்றைய சூழலில் உலகத் தமிழர்கள் முன்வைக்கும் ஒரே வேண்டுகோள் தெளிவானது:

ஒரே தேசம் – ஒரே தீர்வு – தமிழ்த் தேசத்தின் முழு அரசியல் தனியாட்சி
சமஸ்டி, அதிகாரப் பகிர்வு போன்றவை சிங்கள ஆதிக்கத்தை நீட்டிக்கும் இடைநிலைக் கட்டுப்பாடுகளே.

தீர்மானம் : தமிழ்த் தேச அரசியல் மீட்பின் நோக்கு

தமிழ்த் தேசிய அரசியல் இன்று தீர்மானகரமான தருணத்தில் உள்ளது. பிளவு தொடருமானால் வரலாற்று தாயகம் அழியும். ஒற்றுமை நிலைத்தால் தேசம் மீண்டும் எழும்.
தமிழ் மக்களின் எதிர்காலம் வெளிநாட்டு அதிகார மையங்களில் அல்ல; அது தமிழர்களின் ஒருங்கிணைந்த அரசியல் விழிப்புணர்வில்தான் உள்ளது.

தமிழ்த் தேசத்திற்கு முழு அரசியல் தனியாட்சி – அதுவே இறுதி இலக்கு

ஒரே தேசம் – ஒரே தீர்வு – ஒரே எதிர்காலம்.
தமிழ்த் தேசிய ஒற்றுமை வாழ்க.
தமிழர் தாயகம் வாழ்க.

╭──────────────────────╮
  எழுதியவர்  ஈழத்து நிலவன்
╰──────────────────────╯
25/11/2025


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
25 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விசுவமடு

by Amizhthu 24 November 2025
written by Amizhthu

மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.

விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு

அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரி புஷ்பராணி ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது

இதன்போது கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் வீரம் தியாகம் அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன.

விசுவமடு மேற்கு, கிழக்கு மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு ஏற்பாட்டு குழுவின் தலைவரும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளருமான வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் கு.அகிலன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
24 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

“மாவீரர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்.” – அருட்தந்தை மா.சத்திவேல்

by Amizhthu 24 November 2025
written by Amizhthu

“தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்.” என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எம்முடைய ஆட்சியில் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வோம்” என தற்போதைய ஜனாதிபதி அவரது ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மேடைகளில் முழங்கினார். இது தமிழர்களுக்கு கொடுத்த அரசியல் வாக்குறுதியாகும். இதனை நிறைவேற்றுவதைவிடுத்து காலத்தை இழுத்தடிப்பு இன்று வரை காலம் தாழ்த்துவது என்பதும் அது தொடர்பில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காதது என்பது அரசியல் வாக்குறுதி கொலையாகும். இதனையே கடந்த கால ஆட்சியாளர்களும் செய்தனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பல்வேறு மட்டங்களில் பல்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் பல போராட்டங்கள் நடத்தி குரல் கொடுத்தப் போதும் கடந்த கால ஆட்சியாளர்கள் அதற்கு செவிமடுக்கவில்லை.அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றே சிந்தித்தனர். தற்போதைய ஜனாதிபதி அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என கூறியபோது அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பமும் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் மகிழ்ந்தனர். அதற்கு தமிழர்கள் தம் வாக்குகளை அள்ளி வழங்கி நன்றி தெரிவித்தார். அந்த நன்றி உணர்வின் மீது தற்போதைய அரசாங்கம் மண்ணை அள்ளி கொட்டிக் கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து அமைதியோடு பார்க்கும் நிலையிலும் தமிழர்கள் இல்லை எனலாம்.

பாதாள உலகை வளர்த்துவிட்டு அதனோடு கைகோர்த்து அரசியல் செய்தவர்கள்; சர்வதேச போதை வஸ்துக்கு இலங்கையில் சந்தையை உருவாக்கி உழைத்தவர்கள், அவர்களின் அரசியல் காவலர்களாக உள்ளவருமே பயங்கரவாதிகளாவர். ஜனாதிபதியின் கூற்றின் படி அவர்கள் சுதந்திரமாக நாடாளுமன்றத்தை அலங்கரித்துக் கொண்டு சுகபோகும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவர்களே பயங்கரவாதிகளாவர். இந்நிலையில் இன விடுதலையை மையப்படுத்தி தேச விடுதலைக்காக செயற்பட்டவர்களை பயங்கரவாதிகள் என கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பதில் எந்த விதமான நியாயம் இல்லை எனலாம்.

தற்போது சிறையில் பத்திற்கும் குறைவான அரசியல் கைதிகளே உள்ளனர். இவர்கள் சமூக குற்றவாளிகள் அல்ல. பாதாள உலகில் அங்கத்தவர்களும் அல்ல. போதை வஸ்துக்கு அடிமையினவர்களுமல்லர். அதன் விநியோகஸ்தர்களும் அல்ல.இயக்க கட்டுப்பாட்டுக்குள் அதன் ஒழுக்க நெறிகளை பின்பற்றிய ஒழுக்க சீலர்களாவர். இவர்களை விடுவிப்பதன் மூலம் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே உடனடியாக இவர்களை விடுதலை செய்ய வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்கின்றோம்.

தற்போதைய அரசியல் கைதிகள் அனைவரும் தண்டனை காலத்தை விட அதிகமான காலத்தை சிறைகளுக்குள் கழித்துவிட்டனர். தற்போது நிலையில் இவர்களுடன் சேர்ந்து இவர்களது குடும்பங்களும் தண்டனையை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உதாரணமாக ஆனந்த சுதாகரன் கடந்த 17 வருட காலமாக சிறையில் இருக்கின்றார்.

இவரது மனைவி கணவரின் சோகம் தாளாது மரணத்தை தழுவிய நிலையில் குழந்தைகள் தாயை இழந்து பாட்டியியின் அரவணைப்பில் வாழ்ந்தவர்கள் தற்போது பாதுகாப்பற்ற வாழ்வுக்குள் தள்ளப்பட்டுள்ளதோடு அவர்களும் தண்டனையை அனுபவிப்பது சமூக குற்றமாகும்.ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அறிவித்தப் போதும் அது நடக்கவில்லை. ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதன் மூலம் க்ஷ குழந்தைகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க முடியும். அதனை தற்போதைய ஜனாதிபதி செய்வார் என எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்து தமிழ் மக்களின் அரசியல் கௌரவத்தையும் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றுமாறு கேட்கின்றோம்.

தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம். தமிழர் தாயக அரசியல் பலமடைந்து முன் செல்வதற்கான உறுதி ஏற்று சுடரேற்றுவதன் மூலம் தமிழ் தேசம் ஒளி வீசும். அதுவே மாவீர்களுக்கு நாம் செய்யும் நன்றி கடனும் தமிழர் தாயகத்திற்கு கடமையுமாகும் என்பதை உணர்வோம்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
24 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

கொழும்பு துறைமுக மனித புதைகுழிகள் தொடர்பில், மக்கள் போராட்ட முன்னணி கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

by Amizhthu 24 November 2025
written by Amizhthu

கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் மேலும் விபரமறிய பல்வேறு கேள்விகளை உள்ளடக்கி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளருக்கு மக்கள் போராட்ட முன்னணி கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை (24.11.2025) அனுப்பியுள்ளது.

மக்கள் போராட்ட முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில்,

இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ?

புதைகுழிகள் தொடர்பாக தடயவியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்னென்ன?

போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பல தசாப்தங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வரும் கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கூட்டு மனித புதைக்குழி தொடர்பான பின்வரும் கேள்விகளுக்கு மக்கள் போராட்ட முன்னணி பதில்களை எதிர்பார்க்கிறது.

  1. இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
  2. இதுவரை தோண்டி முடிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பில், எந்தளவு பாரிய புதைகுழிகளுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது?
  3. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைகள் மற்றும் ஊடக வெளியீடுகள் எவை?
  4. இது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? மேலும் இது தொடர்புடைய காலக்கெடு மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் எவை? தனிநபர்கள் யாவர்?
  5. இதற்கான காலக்கணிப்புக்காக (கார்பன் 14 சோதனைகள் போன்றவை) மாதிரிகள் சிறப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? அப்படியானால், அந்த நிறுவனங்கள் எவை? மேலும், அந்த அறிக்கைகள் கிடைக்கப்பெறும் திகதிகளைக் குறிப்பிட முடியும?

இது தொடர்பாக தடயவியல் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவை?

  1. இது தொடர்பாக ஒரு இடைக்கால நீதி செயலமுறை திட்டமிடப்பட்டிருந்தால், அது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை விளக்க முடியுமா?
  2. மனித எலும்புக்கூடுகள் தவிர வேறு ஏதேனும் சான்றுகள் (கலைப்பொருட்கள், அணிகலனகள் ஆடைகள் போன்றவை) இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா? அப்படியானால் அவை எவை?
  3. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அந்த ஆதாரங்களை அடையாளம் காண வாய்ப்பு வழங்கப்படுமா?

குற்றவியல் அரசுகளின் அழிக்க முடியாத கரும்புள்ளிகளாகக் கருதப்படும் பல பாரிய மனிதப புதைகுழிகள் இலங்கையில் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் அவற்றில் எதிலும் குறைந்தபட்ச நீதி அல்லது உரிய செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக முந்தைய அரசாங்கங்கள் அந்த செயல்முறைகளை வேண்டுமென்றே புறக்கணித்து தாமதப்படுத்தியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

அந்த விசாரணைகள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்று பாரபட்சமின்றி முழு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு / குறைந்தபட்சம் அவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த செயல்முறை முடிவடைய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பல்வேறு காரணங்களால் ஏற்கனவே தாமதமாகி வரும் விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை தாமதமின்றி முடிக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தால் அவர்கள் மீது விரைவில் வழக்குத் தொடரவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
24 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் 17 தமிழக மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

by Amizhthu 24 November 2025
written by Amizhthu

வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகை, கரூர், அரியலூர், மதுரை, கடலூர் ஆகிய 17 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.,24) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (நவ.,26) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை கனமழை காரணமாக இன்று (நவ.,24) பள்ளிகளுக்கு மட்டும் 10 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

தூத்துக்குடி
ராமநாதபுரம்
திருவாரூர்
கள்ளக்குறிச்சி
புதுக்கோட்டை
திருச்சி
தஞ்சாவூர்
மயிலாடுதுறை
விருதுநகர்
சிவகங்கை
நாகை
கரூர்
அரியலூர்
மதுரை
கடலூர்

கனமழை காரணமாக இன்று (நவ.,24) பள்ளி, கல்லூரிகளுக்கு 2 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

  • திருநெல்வேலி
  • தென்காசி

கனமழை எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (நவ.,24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், கனமழை காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
24 November 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d