அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

செய்திகள்

தமிழீழம்

செம்மணி மனித புதைகுழிகளில் வெள்ளம்; வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!

by Amizhthu 20 January 2026
written by Amizhthu

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் , அவற்றினை வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்வரும் , 09’ம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதன் போது புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்பதனால் அடுத்த அகழ்வு பணிகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் 09ஆம் திகதி வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது என்றும் , அன்றைய தினம் அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கையில் பணியாளரின் நிர்வாண வீடியோவை பதிவேற்றியதற்காக பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

by Amizhthu 20 January 2026
written by Amizhthu

தனது வீட்டில் பணிபுரிந்த குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்ணின் ஆடையைக் களைந்து ஏனைய பணியாளர்கள் முன்பாக நிர்வாணப்படுத்தி அநாகரிகமாக நடந்துகொண்டது மாத்திரமல்லாது, அதைக் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பிரபல வர்த்தகர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகப் பகிரப்பட்டு வந்த குறித்த காணொளி தொடர்பில், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொரளை, ஃபெயார்ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய குறித்த வர்த்தகர், இச்சம்பவத்தின் பின்னர் பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காகப் பல ஹோட்டல்களில் தங்கியிருந்துள்ளார்.

விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் கொழும்பு அளுத்கடை நீதிமன்றில் இந்த வழக்குத் தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைத்திருந்ததுடன், சந்தேகநபருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையினையும் பெற்றிருந்தனர். இந்நிலையில், சந்தேகநபர் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்குடன் ஹிக்கடுவ பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது ஞாயிற்றுக்கிழமை (18) அன்று கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் பொலிஸாருக்குச் சாட்சியங்களை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் எஹலியகொட பகுதியைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வர்த்தகரின் வீட்டில் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த ஏனையவர்கள் முன்னிலையில் அவர் இழிவுபடுத்தப்பட்டு, அநாகரிகமாக நிர்வாணப்படுத்தப்பட்டமை விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

by Amizhthu 20 January 2026
written by Amizhthu

இன மோதலைத் தூண்டும் குற்றச்சாட்டுகள்.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் ஆற்றிய உரை, இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக நேற்றைய தினம் (19-01-2026) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிவிதுரு ஹெல உறுமய’ அமைப்பின் இளைஞர் விவகார செயலாளர் குமார ராஜரத்ன உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரே இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.

ஜனாதிபதியின் கருத்துக்கள் நாட்டின் ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், இது தொடர்பில் உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரையானது, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குமார ராஜரத்ன,

ஜனாதிபதி தனது உரையின் மூலம் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் வன்முறையையும் பிரிவினையையும் ஏற்படுத்தத் திட்டமிட்டு முயற்சித்துள்ளார். இது தண்டனைக்குரிய குற்றமாகும். புனித பூமிகளை மையப்படுத்தி அவர் வெளியிட்ட கருத்துக்கள், பௌத்த மக்கள் வடக்கு நோக்கி வருவது குரோதத்தை பரப்புவதற்கே என்ற தோரணையில் அமைந்திருந்தன. மதச் சுதந்திரமும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான உரிமையும் உள்ள ஒரு நாட்டில், இத்தகைய கருத்துக்கள் தமிழ் மக்களிடையே சிங்கள மக்கள் மீது தேவையற்ற பகையை உருவாக்கும்.

தற்போது ஜனாதிபதிக்கு சட்ட விலக்களிப்பு காணப்படுவதால் உடனடியாகக் அவரை கைது செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம். எனினும், அவரது பதவிக்காலம் முடிந்தவுடன், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தை மீறியமைக்காக அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் தொடர்பில் அனைத்து சட்ட ரீதியான ஆதாரங்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளித்துள்ளோம். அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததும் அவரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழகம்

எனக்கே இதுவரை காரணம் சொல்லவில்லை !

by Amizhthu 20 January 2026
written by Amizhthu

தமிழம் பதிப்பகத்தின் வெளியீட்டு நூலாகிய “இந்தி எதிர்ப்பு போரில் ஈவெரா பித்தலாட்டம்” வெளியிடப்பட்டு அடுத்த நாளே காவல்துறை அடக்கு முறைக்கு உள்ளாகி பறிமுதல் செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில்தான் இந்த நூலுக்கான திறனாய்வினை ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தோம். இந்த நிகழ்வை கூடுகை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்தது.

திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த நிகழ்வை தடுக்க, காவல்துறை குவிக்கப்பட்டு அந்த அரங்கை வாடகைக்கு கொடுத்த உரிமையாளரை மிரட்டி தடுத்துள்ளது நிகழ்வை.

அரங்க உரிமையாளரை அணுகி, இந்த நூல் தடைசெய்யப்பட்ட நூல், அதை திறனாய்வு செய்ய அனுமதிக்க கூடாது என்று நிறுத்தியுள்ளது.

இந்த நூல் தடைசெய்யப்பட்ட நூலா?, 1965 இல் சிவானந்த அடிகள் வெளியிட்டு பல்லாயிரம் படிகள் விற்று தீர்ந்த இந்நூல், நாம் 2023 ஆண்டு வெளியிட்டு 1000 படிகள் விற்று தீர்ந்த நிலையில் இப்போது மறுவெளியீடு செய்து வருகிறோம். இதில் அரசுக்கு என்ன சிக்கல் ?

இது ஏற்கனவே தமிழக அரசினால் தடைசெய்யப்பட்ட நூல் என்றால், அதற்கான தடை ஆணை எங்கே ?, அப்படி தடை செய்யப்பட்ட அந்த நூலை விற்றால், விற்பனை நிறுவனத்தை, பதிப்பகத்தையோ காவல்துறை அணுகவேண்டும் தவிர, இந்த சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்ற நகச்சுவையை அரசே செய்யக்கூடாது. இது அரசு ஒரு சாதாரண மனிதனின் கருத்துரிமையின் மீது நிகழ்த்தும் போராகவே பார்க்க வேண்டும்.

இந்த நூல் குறித்து பதிப்பகத்தையோ, பதிப்பாளரையே அணுக்காத அரச அதிகாரம் நமக்கு அரங்கம் வழங்குகிறவர்களை மிரட்டி, தடைசெய்வது என்ன மாதிரியான செயல் என்று விளங்கவில்லை.

இந்த நூலை தமிழ்நாடு எங்கும் இலவசமாக கொடுக்க ஒரு 1 இலட்சம் பிரதி அடிக்கலாமா என்ற திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் புரவலர்கள் விரும்புகிறவர்கள் தங்களால் இயன்ற பிரதியை வாங்கி மற்றவர்களுக்கு இலவசமாக கொடுக்கலாம்.

எல்லோரும் நம்மிடம் கேட்பது, எதற்காக இந்த நூலை கண்டு திராவிட அரசு அஞ்சுகிறது ?என்ற கேள்வியே ! ஒரு பதிப்பகத்தாரா எனக்கு இன்னும், அவர்களின் பயத்திற்கான காரணம் தெரியவில்லை என்பதே உண்மை !..

சொல்லுங்கள் உங்களுக்கு என்ன வேணும்? எதற்காக தடுக்கிறீங்க ?

இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழம் பதிப்பகத்தின் எதிர்பார்த்த விற்பனை இல்லை. உறவுகள் தங்களால் இன்ற ஆதரவினை நல்கிட வேண்டுகிறேன் !

தமிழம் பதிப்பகம்
அரங்கு எண் : 192
சென்னை புத்தகக் கண்காட்சி
YMCA நந்தனம்
பேச : 9442248351

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

பேருந்தை கவனயீனமாக செலுத்திய வழக்கில்; பேருந்து சாரதியொருவருக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை.

by Amizhthu 20 January 2026
written by Amizhthu

ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்தை குறுகிய வீதியில் கவனயீனமாக செலுத்தி நபரொருவரின் மரணத்திற்கு காரணமான வழக்கில், கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து சாரதியொருவருக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் ரூ.15,000 அபராதமும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நஷ்டஈடும் செலுத்துமாறு கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த சாரதியின் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

ஒரே ஒரு சட்டம் மட்டுமே இருப்பதாகக் கூறும் இலங்கை ஜனாதிபதி, விஹாரை விஷயத்தில் அதை ஏன் செயல்படுத்தவில்லை? – வணக்கத்திற்குரிய தந்தை மா. சக்திவேல்.

by Amizhthu 20 January 2026
written by Amizhthu

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும்  இனப்படுகொலையாளி அனுரா தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் 18-01-2026 வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் திருநாளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் சிங்கள பௌத்த ஆதிக்க இனவாத நோக்கில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்தின் பிக்குவை தான் கலந்துகொண்ட கூட்டத்தின் முன் வரிசை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர்.

இனவாத சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு எதிராகவும், இராணுவத்தினரின் தனியார் நிலங்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடுபவர்களை இனவாதிகள் என அடையாளப்படுத்தி தமிழர் தாயக மக்களை அவமானப்படுத்தியுள்ளார். இதுதான் தமிழர் திருநாளில் தமிழர்கள் கொடுத்த பரிசா? என கேட்பதோடு இதற்கான எதிர்ப்பினை தமிழ் தேசப்பற்றாளர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தையிட்டி விகாரையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது சட்டவிரோத விகாரை கட்டிடத்தை அகற்றி மக்களின் காணிகளை மக்களின் கைகளில் கொடுப்பதாகும். அதுவே தமிழர்களுக்கான நீதியாகவும் அமையும். சட்டம் அனைவருக்கும் சமம்.

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன்?

சட்ட விரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தயங்குவதாகவும், இனவாத சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பயந்து நிற்பதாகவும் நாக விகாரை பிக்கு ஜனாதிபதி அவரை சந்தித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இனவாதம் மதவாதத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் ஒருவர் சொந்த காணிகளை கேட்டு நடக்கும் போராட்டத்தினை இனவாதம் என குறிப்பிடுவதில் என்ன நியாயம் உள்ளது?

தைப்பொங்கல் என்பது உழைக்கும் வர்க்கத்தின் விழா. மண்ணோடு ஒட்டிய வாழ்வின், வாழ்வு கலாச்சாரத்தின், பண்பாட்டின் விழா மட்டுமல்ல மண் தமது வியர்வை விழுந்த மண்ணின் சுதந்திர வாழ்வுக்கான அரசியல் உரிமைசார் விழாவுமாகும். இதனை கௌரவப்படுத்துவது என்பது மண்ணின் மக்களை சுதந்திரமாக வாழ விடுவதாகும். அதற்கான எந்த உறுதிமொழியையும் ஜனாதிபதி தனது உரையில் வெளிப்படுத்தவில்லை. தேர்தல் காலங்களில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறியவர் அதற்கான எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக தெளிவாக இதனை கூறாதவர் தமிழ் மக்களின் மண்ணில் நின்று தம் மக்களை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களோடு விழா கொண்டாட வந்த ஜனாதிபதி தமிழர்களின் அரசியல் பண்பாட்டு விழாவினை தமது அரசியல் களியாட்ட விழாவாக்கி மகிழ்ந்துள்ளார். தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதியும் அவர்களின் சுதந்திர தினத்திலே தமிழர் தாயகத்தில் அவர்களின் களியாட்ட விழாவாக்க திட்டமிட்டிருப்பார்கள்.

தமிழ் மக்களின் மண் பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோய்க்கொண்டு இருப்பது போல எமது தேசிய அரசியலும் தேசிய மக்கள் சக்தியின் போலி அரசியல் களியாட்டங்களால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது.

இதற்கும் ஜனாதிபதி எமது மண்ணிலிருந்து எம்மை அவமானப்படுத்தியமைக்கும் முழு எதிர்ப்பினை காட்டவும் எதிர்வரும் சுதந்திர தினத்தினை தமிழர் தேசம் தழுவிய கரி நாளாக்க அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் மக்களை திரட்டுவதற்கான செயல் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். விடுதலையை மையப்படுத்தியது சமயங்கள். எனவே அனைத்து சமய தலைமைகளும், அவர்கள் சமய மையங்களும் அதற்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் கேட்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
பிரித்தானியா

இணுவில் ஒன்றியம் – UK நடாத்தும் பொங்கல் விழா சிறப்புப் பட்டிமன்றம்.

by Amizhthu 20 January 2026
written by Amizhthu

புலம்பெயர் தமிழர் வாழ்வு
வரமா? சாபமா?

24/01/2026 | 6.00-10.30
Alperton Community School,
Wembley HA0 4PW

அனுமதி இலவசம்

அனைவரும் வாரீர்!!

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
அகவை வாழ்த்து

அகவை வாழ்த்து – ஜனவரி 20

by Amizhthu 20 January 2026
written by Amizhthu

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை பப்பா (பவான்)
மருசலின் ஜெபநேசன்
பெரியபண்டிவிரிச்சான்
மன்னார்
வீரச்சாவு: 14.11.1985
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அல்வின்
அமிர்தலிங்கம் சற்குணராசா
அல்வாய் தெற்கு, வதிரி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.05.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் இம்ரான்
சங்கரப்பிள்ளை சதானந்தன்
சிறிகரன் வீதி, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.03.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சின்னரவி
ஆறுமுகம் புவனேஸ்வரன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.04.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ஒஸ்ரின்
தனேசன் இளங்கோவன்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் ஏகாம்பரம்
மாரிமுத்து மகாலிங்கம்
12ம் கட்டை, மாளிகைப்பிட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 17.02.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை இருதயன்
சி. தர்மலிங்கம்.
சித்தாண்டி, மட்டக்களபபு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.02.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் ஆதித்தன்
சின்னப்பு ஜெயதாஸ்
தங்கபுரம், அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.11.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் குன்றத்தூரான் (கோமளன்)
கார்த்திகேசு விஜயரட்ணம்
6ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 05.10.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் சிவராஜா
விசுவலிங்கம் பேரின்பராஜ்
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை காங்கேயன்
சிங்கராசா கஜமுகன்
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.06.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ஜெயச்சந்திரன் (எல்லாளன்)
மாரிமுத்து சரவணலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.03.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நிதிகரன் (துரோணன்)
தம்பிமுத்து சந்திரகுமார்
40ம் கிராமம், திக்கோடை, மகிழடித்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.07.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நிருபாலினி
தர்மராசா வளர்மதி
நவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சூரன்
பாலசுப்பிரமணியம் சுபாஸ்கரன்
வேலணை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.06.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் இளங்குமரன்
சாமிநாதர் சந்திரசேகர்
5ம் வட்டாரம், குமுழமுனை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை பமிலா
செல்லத்துரை தயாளினி
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் இளங்குமரன்
வேலாயுதம் சிவபாலன்
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.06.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அரவாணன்
தியாகராசா செல்வகுமார்
மாங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் வண்ணன் (றெஜி)
தங்கராசா அழகேந்திரம்
இடைக்குறிச்சி, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் அணியரசி
பெரியசாமி யோகேஸ்வரி
மாணிக்கபுரம், றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.10.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ரஜீந்திரன்
செபமாலைக்குஞ்சு பஸ்ரியான்செபழன்குஞ்சு
தலை கிராமம், தலை
மன்னார்
வீரச்சாவு: 22.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சுடர்மகள்
தர்மகுலசிங்கம் ஜெகதா
குமுழமுனை, முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் வேங்கை
சுப்பிரமணியம் சுரேந்திரறொசான்
கனகாம்பிகைக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கலைச்செல்வன்
நடராசா சுபாகரன்
சீமெந்து தொழிற்சாலை, காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

நினைவு வணக்கம் | ஜனவரி 20

by Amizhthu 20 January 2026
written by Amizhthu

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை நிலவழகி
கந்தசாமி கிருஸ்ணவேணி
பிரமந்தனாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை முல்லைக்கோன்
கருணாமூர்த்தி சிவகரன்
3ம் படிவம், யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் புலிவேந்தன்
அருளானந்தம் மகேஸ்அன்ரனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் கார்வண்ணன்
தில்லைநாயகம் ஜெபநேபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அறிவு
சுப்பிரமணியம் புவனேஸ்வரன்
நெடுங்குளம், புநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் குயிலன்
பாலசிங்கம் தனரஞ்சன்
திருநகர் தெற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் வளர்முகில்
யேசுதாசன் மேரிசகுந்தலா
தேவன்பிட்டி, வெள்ளாங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 20.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் வெற்றி
தங்கவேல் தியாகரன்
உதயநகர் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கலவளவன்
முருகேசு காந்தரூபன்
இடதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் கனியரசன்
அமையமுத்து அன்பழகன்
திருகோணமலை
வீரச்சாவு: 20.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் தமிழ்வேந்தினி
சீனிவாசகம் சுகோதினி
4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.01.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் அணியரசன்
தியாகராசா விவாகரன்
அம்பகாமம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் இனியன்
அமலதாஸ் நந்தன்
வலைப்பாடு, பொன்னாவெளி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் கடற்சோழன்
கந்தையா சிவதாசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் மிதுலன்
உருத்திரலிங்கம் உதயநேசன்
பாரதிபுரம் மேற்கு, மலையாளபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் காதாம்பரி
சத்தியமூர்த்தி அனுஜா
பெண்கள் குடியேற்றத்திட்டம், புளியங்குளம், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சுடர் (கெங்கன்)
பரமநாதன் கெங்காதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் கடல்மாறன்
தவராசா சுமன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் இன்பக்கேள்வன்
மைக்கல் ஜோய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் குறலினியன்
டெனிஸ் தமிழ்ச்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் செங்கவியன்
கோபாலசிங்கம் சண்முகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அருளரசன்
பத்மநாதன் வேல்வரன்
4ம் படிவம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அறிவழகன்
பத்மநாதன் பிரபாகர்
புதுக்குளம், கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை இசைவாணி
திருநாவுக்கரசு ரஜனி
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தேவன்
செபமாலை யூட்பிரபாகரன்
அண்டான்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 20.01.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை எழில்வேந்தன்
செலஸ்ரின் சொயிசாடிரோன்சன்
மன்னார்
வீரச்சாவு: 20.01.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் ஐங்கரன்
பத்மநாதன் கோபி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.01.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் துவாரகன்
கந்தசாமி கிருஸ்ணராசா
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் பிரபல்யன் (பிரவிழியன்)
பூரணலிங்கம் ஜீவகுமார்
அத்தாய், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அமுதரசி
தம்பிப்பிள்ளை துவாரகாதேவி
செட்டியார்குறிச்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் சுகந்தி
நடராஜா சுபாஜினி
ஊரெழு தெற்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சுபாஸ் (மாங்குயிலன்)
தேவநாயகம் சுதாகரன்
கண்ணகிபுரம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நெடுமாறன்
தங்கவடிவேல் மதிவண்ணன்
மாமூலை, தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.01.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அன்பரசன்
சோமசுந்தரம் புவனேசன்
மந்துவில் கிழக்கு, கருணாபுரம், கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் நாவரசன்
மகாலிங்கம் கஜேந்திரன்
நயினாமடு
வவுனியா
வீரச்சாவு: 20.01.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கணேஸ்
அழகரத்தினம் சத்தியேந்திரா
அம்பனை, சுண்ணாகம் மேற்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ராஜன்
குலசேகரம்பிள்ளை புவிராஜசிங்கம்
பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ராஜ்மோகன்
சிவராமலிங்கம் ராஜ்மோகன்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.01.1984
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
20 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

கிஷ்த்வார் மலைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை: ஏழு ராணுவ வீரர்கள் காயம்

by Amizhthu 19 January 2026
written by Amizhthu

ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் உயர்ந்த காடுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வெடித்த துப்பாக்கிச்சண்டையில் ஏழு இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மோதல் சோன்னார்–சாத்த்ரு காடுப்பகுதியில் நடைபெற்றது. அடர்ந்த காடு, கடினமான நில அமைப்பு மற்றும் கடும் குளிர் காரணமாக இந்த பகுதி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சவாலானதாகும்.

எப்படி மோதல் தொடங்கியது?

இரண்டு முதல் மூன்று வெளிநாட்டு பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த துல்லியமான உளவுத்தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படைகள் மதியம் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை தொடங்கின.
அவர்கள் ஜெய்ஷ்‑இ‑மொஹம்மது (JeM) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

தேடுதல் குழு காடின் ஆழப்பகுதிக்கு சென்றபோது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி, கைக்குண்டுகள் வீசி சுற்றிவளைப்பை உடைக்க முயன்றனர்.
படையினர் உடனடியாக பதிலடி கொடுத்ததால் பல மணி நேரம் இடைவிடாத துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

காயமடைந்த வீரர்கள்

முதல் கட்ட மோதலிலேயே ஏழு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
அவர்களில் மூன்று பேரை தீவிர சிகிச்சைக்காக விமானம் மூலம் மருத்துவமனைக்கு மாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடினமான நில அமைப்பு மற்றும் மோசமான வானிலை சூழ்நிலையில் வீரர்கள் காட்டிய தொழில்முறை திறமை மற்றும் தைரியம் குறித்து ராணுவம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

கூடுதல் படைகள் மற்றும் கண்காணிப்பு

பயங்கரவாதிகள் தப்பிச் செல்லாமல் தடுக்க ராணுவம், CRPF, மற்றும் ஜம்மு & காஷ்மீர் போலீஸ் படைகள் கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், நாய் படைகள் உள்ளிட்ட மேம்பட்ட கண்காணிப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பெரிய பாதுகாப்பு சூழல்

இந்த மோதல், 2026 ஆம் ஆண்டில் ஜம்மு பிராந்தியத்தில் நடைபெறும் மூன்றாவது முக்கிய துப்பாக்கிச்சண்டை ஆகும். இதற்கு முன் கத்துவா மாவட்டத்தின் கஹோக் மற்றும் நஜோட் காடுகளில் இதே மாதம் இரண்டு மோதல்கள் நடந்துள்ளன.

குடியரசு தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் சார்பிலான குழுக்கள் மேலும் பயங்கரவாதிகளை அனுப்ப முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலை

‘ஆபரேஷன் த்ராஷி‑I’ என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் பல பயங்கரவாதிகள் சிக்கியிருக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் மதிப்பிடுகின்றன.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
19 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இந்தியா

ஜான்ஸி கொடூரம்: இணை வாழ்வு பெண்ணை கொலை செய்து, உடலை பெட்டியில் எரித்த வழக்கு – விரிவான செய்தி அறிக்கை

by Amizhthu 19 January 2026
written by Amizhthu

“ஜான்ஸி அதிர்ச்சி: இரட்டை வாழ்க்கை நடத்திய ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் – காதலியை கொன்று, உடலை பெட்டியில் எரித்த மரண ரகசியம் வெளிச்சம்!”

செய்தி அறிக்கை

உத்தரப் பிரதேசத்தின் ஜான்ஸி நகரை உலுக்கிய கொடூரமான கொலை வழக்கு ஒன்று கடந்த வார இறுதியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ராம் சிங் பரிஹார் (62), தன்னுடன் இணை வாழ்வில் இருந்த ப்ரீதி (32/35) என்பவரை கொலை செய்து, உடலை ஒரு நீல நிற இரும்பு பெட்டிக்குள் வைத்து எரித்தார் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

கொலை நடந்த காலம்

  • ஆரம்ப விசாரணைகளின்படி, கொலை ஜனவரி 8 அன்று நடந்திருக்கலாம்.
  • ப்ரீதி பல நாட்களாக காணாமல் போனதை யாரும் சந்தேகிக்கவில்லை; காரணம், அவர் தன் கணவருடனும், ராம் சிங்குடனும் மாறி மாறி வாழ்ந்து வந்தார்.

குற்றத்தின் பின்னணி

இரட்டை வாழ்க்கை – இரண்டு மனைவிகள், ஒரு இணை வாழ்வு

  • ராம் சிங்கிற்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்; இருவரின் பெயரும் கீதா என்பதே விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • இதற்கிடையில், அவர் ப்ரீதியுடன் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து இணை வாழ்வில் இருந்தார்.

பணம் தொடர்பான தகராறு

  • ப்ரீதி அவரிடம் ஏற்கனவே லட்சக்கணக்கில் பணம் வாங்கியிருந்தார், மேலும் பணம் கேட்டு வந்ததாக போலீஸ் கூறுகிறது.
  • இந்த தகராறே கொலையின் முக்கிய காரணம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

உடலை எரித்த கொடூர முறை

விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன:

  • ப்ரீதியின் உடலை முதலில் டார்பாலின் கொண்டு சுற்றி வைத்தார்.
  • பின்னர் அதை நீல நிற இரும்பு பெட்டிக்குள் வைத்து, மரம் மற்றும் நிலக்கரி கொண்டு எரித்தார்.
  • உடல் சாம்பலாகியதும், அதை சாக்குகளில் நிரப்பி அருகிலுள்ள ஆற்றில் தூக்கி எறிந்தார்; சில எச்சங்கள் மட்டும் பெட்டியில் இருந்தன.

குற்றம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது?

இந்த வழக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது ஒரு சாதாரண லோடர் வண்டி ஓட்டுநரின் விழிப்புணர்வே:

  • ராம் சிங், பெட்டியை நகர்த்த லோடர் வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்தார்.
  • பெட்டியின் அசாதாரண எடை மற்றும் சந்தேகமான நடத்தை ஓட்டுநருக்கு சந்தேகம் எழுப்பியது.
  • அவர் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
  • போலீஸ் பெட்டியை திறந்தபோது எரிந்த எலும்புத் துண்டுகள், சாம்பல், நிலக்கரி போன்றவை இருந்தன.

விசாரணை நிலை

  • ராம் சிங் தற்போது ஒளிந்துவிட்டார்; அவரை பிடிக்க பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • அவரது மகன் மற்றும் இன்னொருவர் விசாரணைக்காக காவலில் உள்ளனர்.
  • உடல் எச்சங்கள் மருத்துவ மற்றும் நுண்ணறிவு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சமூக மற்றும் சட்டப் பார்வை

இந்த வழக்கு,

  • இணை வாழ்வு உறவுகளில் பாதுகாப்பு,
  • பெண்கள் மீதான வன்முறை,
  • குடும்ப அமைப்புகளில் மறைமுக உறவுகள்,
  • மனநிலை மற்றும் பொருளாதார அழுத்தங்கள்

என்பன குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.
சட்ட ரீதியாக, இது முன்கூட்டிய திட்டமிட்ட கொலை (Section 302 IPC) மற்றும் சான்றுகளை அழித்தல் (Section 201 IPC) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

ஜான்ஸி நகரை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த வழக்கு, மனித உறவுகளில் உருவாகும் சிக்கல்கள் எவ்வாறு கொடூரமான முடிவுகளுக்கு வழிவகுக்கின்றன என்பதற்கான துயரமான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. போலீஸ் விசாரணை தொடர்கிறது; முக்கிய குற்றவாளி ராம் சிங்கை பிடிக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
19 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
இலங்கை

இலங்கை நாணய மாற்று விகிதம்

by Amizhthu 19 January 2026
written by Amizhthu

இன்று திங்கட்கிழமை (19-01-2026) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 313.4940 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 305.9570 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
19 January 2026 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d