தமிழகம்
சிலம்பம் பிரிவில்தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மாணவக் கண்மணிகளுக்கு நெஞ்சம் நிறைந்தநல்வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்
பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பாக நேபாள நாட்டின் போக்ரா நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் ஒருங்கிணைந்த பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில், சிலம்பம் பிரிவில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் ஐவர் 4 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர் என்பதும், அதில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புமகள் ச.வர்சா அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தியும் அறிந்து மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
தமிழ் மண்ணின் பண்பாட்டை பறைசாற்றும் சிலம்பம் சுற்றுதல் விளையாட்டு போட்டிகளில் தங்கள் தனித்திறனை வளர்த்து, சாதனை படைத்துள்ள எனதன்பு மாணவக்கண்மணிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
அன்புமகள் ச.வர்சா மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் உள்ளன்புகொண்டு வாழ்த்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
விஜய நாராயண் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. அதை தொடர்ந்து ஏற்கனவே அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த பி.எஸ். ராமன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இன்று தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய நாராயண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் நாராயண் ஏற்கனவே 2017-2021 வரை தமிழக தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் முன்னாள் இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலின் உறவினர் ஆவார்.
திரு.கா.பிரபாகரன் அவர்கள்
நாம் தமிழர் கட்சியின் இளைஞர்பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
12.05.2026 செவ்வாய்கிழமை காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாம் தமிழர் கட்சி
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி
வருத்தம் தெரிவிக்க: 95667 44529
மது விற்பனை தமிழக அரசின் பொறுப்பாக இருக்கக்கூடாது: தமிழக முதல்வருக்கு கமல் வேண்டுகோள்!
மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு நடிகர் கமல் வரவேற்பு தெரிவித்துள்ளார். மதுபானம் விற்பனை அரசின் பணியாக இருக்க கூடாது என கமல் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ் நிலையங்களுக்கு அருகேயுள்ள மது விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை தமிழக முதல்வர் விஜய் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மது விற்பனை ஓர் அரசின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழக அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும். வாழ்த்துகள். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
