சட்டத்தில் இடமிருக்கா ? மனுவை விசாரிக்க கோரியதற்கு சட்ட நடவடிக்கையா ?
வழக்கு விசாரணையின் திசைவழி போக்கை மாற்ற விரும்பவில்லையா?

சட்டத்தில் இடமிருக்கா ? மனுவை விசாரிக்க கோரியதற்கு சட்ட நடவடிக்கையா ?
வழக்கு விசாரணையின் திசைவழி போக்கை மாற்ற விரும்பவில்லையா?

திருப்பரங்குன்றம் சிக்கலில் கவனிக்கப்படாத தமிழ் சித்தாந்த சைவ வழிபாட்டு முறைகளை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும், அதன்படி முடிவுகள் எடுக்கவேண்டும் என்றும் நேற்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக மேல்முறையீடு மனுவினை தாக்கல் செய்திருந்தோம் ( SR No : 108685 /2025). முறைப்படி இன்று அந்த மனுவானது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் சிக்கல் தீபத்தூண் வழக்குடன் நாம் தாக்கல் செய்திருந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்.

இன்று காலையில் நமது வழக்கறிஞர் திரு அருணாசலம் அவர்கள் மதுரை உயர்நீதி மன்ற கிளையின் நீதிபதியும், ஜி.ஆர். ஸ்வாமிநாதன் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்தது தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை விசாரிக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நமது மனுவினையும் விசாரணையில் இணைத்துக்கொள்ளம் படி பேசினார்.
அதற்க்கு நீதிபதி செயச்சந்திரன் அவர்கள், கூடுதலாக எந்த மனுவினையும் இந்த விவகாரத்தில் எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூற, அதற்கு வழக்கறிஞர் அருணாசலம் அவர்கள், விசாரணையில் இருக்கும் அதிமுக்கியமான வழக்கில், கடைசி நேரத்தில் கூட தங்களது கருத்தை கூறலாம் என்று ஏற்கனவே நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள், மேலும் இந்த வழக்கில் தமிழ் சித்தாந்த சைவ வழிபாட்டு முறைப்படி எந்த கருத்தும் விவாதிக்கப்படவில்லை இதனால் எங்களது மனுவினையும் இணைத்து விசாரியுங்கள் என்று சொன்னவுடன் கோபமான நீதிபதி ” நீதிமன்ற காவலர்களை வைத்து இவரை வெளியேற்றுங்கள்” என்று மிகவும் கடுமையாக நடந்துள்ளார் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதிபதி.
நீதி துறையில் நீதியரசர்கள் என்ற நீதிபதியை “மை லார்ட்” என்று சொல்வது அந்த பணிக்கான மரியாதையே தவிர, நீதியரசர்கள் தன்னையே கடவுளாக நினைத்துக் கொண்டு, தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க கூடாது என்பது, நீதித்துறையில் நீதிபதிகள் மேற்கொள்ளும் பயங்கரவாதம் ஆகும். ஏற்கனவே முடிந்த வழக்கில் கூட ஒருவர் கருத்தை பதிவு செய்ய மேல்முறையீடு செய்யலாம் என்று சட்டம் சொல்லும் போது, நடந்துகொண்டு இருக்கும் வழக்கில், தீர்வின் முக்கிய அம்சங்களை கொண்ட ஒரு கருத்தை நீதிபதிகள் பார்வைக்கே கொண்டுவர கூடாது என்பது என்ன வகையான அணுகுமுறை ?
ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தீர்ப்பை விசாரிப்பவர்களுக்கே, புதிய கருத்துக்களை எதிர்கொள்ள பயம்வரும். நீதியரசர் ஜெயச்சந்திரன் எதைக்கண்டு பயப்படுகிறார் ? எதனால் இவ்வளவு வெளிப்படையான கோபத்தோடு நடந்துகொள்ளகிறார் ?
பிறகும் விடாத நமது வழக்கறிஞர் திரு அருணாச்சலம் அவர்கள், நீதிபதியை பார்த்து, நான் என்ன செய்தேன் ? நீதிமன்ற போலீசை வைத்து வெளியேற்றும் அளவிற்கு நடந்த குற்றம் என்ன ? “தமிழ் கடவுள் முருகனின் முதல் படைவீடு திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தமிழர் வழிபாட்டு முறையின் கீழ் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறும் மனுவை விசாரிக்க சொல்வது தவறா என்று கேட்டவுடன், உங்களுடைய, பார் கவுன்சில் எண் என்ன ? என்று கேட்டு மிரட்டி, துறை ரீதியாக உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டி, நீதிமன்றத்தில் நீதிமன்ற காவலர்களை வைத்து வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்.
சுதந்திரம் பெற்ற இந்தியாவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதே நீதியரசர்கள் இப்படிநடந்து கொள்வது மிகவும் துரதிஸ்டவசமானது. இந்த வழக்கை இதுவரை இவர்கள் எப்படி கையாண்டு கொண்டிருக்கிறார்கள், இனி எவ்வாறு கையாள போகிறார்கள் ? என்ற கேள்விகளுக்கு, நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் அணுகுமுறை சான்றாக அமைகிறது.
வீரத்தமிழர் முன்னணி முன்வைத்த, இந்த வழக்கத்தின் திசைவழி பயணத்தை மாற்றக்கூடிய முக்கியமான கருத்துக்களை கொண்ட ( 15 புள்ளிகள் கோடிடப்பட்டு இருந்தது) நமது மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீதியரசர் அச்சம் கொள்ள தேவை என்ன ?, நீங்கள் அந்த வழக்கை விசாரித்து தள்ளுபடி கூட செய்யலாம். ஆனால் விசாரணைக்கே எடுத்துக் கொள்ள மாட்டேன் என்பதும், அதை முன்மொழிய வரும் வழக்கறிஞரை மிரட்டுவதும் என்ன மாதிரியான அணுகுமுறை ?
ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது, இந்த வழக்கு தொடர்பான கூடுதல் மேல்முறையீடுகளை எப்படி நீதியரசர் மறுக்கமுடியும் ?
ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று முன்மொழிய வந்த வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்களை மிரட்டி, நீதிமன்ற காவலர்களை வைத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதும், நடவடிக்கை எடுப்பேன் என்பதும் மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியது. இதுபோன்ற நீதியரசர்கள் முன்வந்து இந்த வழக்கில் இருந்து வெளியேறிக்கொள்வது நீதித்துறைக்கு செய்யும் நற்காரியம். கூடுதலாக ஒரு கருத்தினை உள்வாங்க மறுக்கும் நிலையில் இந்த விசாரணையும், அதன் தீர்ப்பும் எப்படி நேர் வழியில் செல்லும் ?
நாம் தொடுத்திருக்கும் வழக்கும் “லீவ் க்ராண்ட்” அணுகுமுறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு எடுக்காமல் விடமுடியாது என்பதன் அடிப்படையில் நமது வழக்கிற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்ற ஆவலோடு காத்திருக்கிறேன்.
அதே வேளையில், நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் இந்த அணுகுமுறைக்கு வீரத்தமிழர் முன்னணியின் கண்டங்களை பதிவுசெய்கிறேன். நீதியை நீதியாக எதிர்கொண்ட வழக்கறிஞர் அருணாச்சலம் அவர்களுக்கு உடன் நிற்கவேண்டியது நமது கடமை.
நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கலாம், நீதியரசர்களை விமர்சிக்க கூடாது என்பது சாலை மோசமாக போடப்பட்டிருந்தால், பொறியாளரை விமர்சிக்க கூடாது. அந்த சாலையையும், அங்கே நடப்பட்டுள்ள அளவை கல்லையும் விமர்சிக்கலாம் என்பது போல இருக்கிறது. எப்பேர்ப்பட்ட நாட்டில் வாழ்கிறோம் என நினைக்கும் போது பயமாகவும் இருக்கிறது.
தமிழம் செந்தில்நாதன்
வீரத்தமிழர் முன்னணி
மாநில ஒருங்கிணைப்பாளர்

| தமிழ் நாட்காட்டி டிசம்பர் 2025 | |
| அமாவாசை | 19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை |
| பௌர்ணமி | 04-டிசம்-2025 வியாழன் |
| கார்த்திகை | 03-டிசம்பர்-2025 புதன்கிழமை 31-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| சஷ்டி விரதம் | 25-டிசம்பர்-2025 வியாழன் |
| சங்கடஹர சதுர்த்தி | 08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை |
| சதுர்த்தி | 24-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| பிரதோஷம் | 02-டிசம்பர்-2025 செவ்வாய் 17-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| திருவோணம் | 23-டிசம்பர்-2025 வியாழன் |
| மாத சிவராத்திரி | 18-டிசம்பர்-2025 வியாழன் |
| ஏகாதசி | 01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை 15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை 30-டிசம்பர்-2025 செவ்வாய் |
| அஷ்டமி | 12-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை 27-டிசம்பர்-2025 ஞாயிறு |
| நவமி | 13-டிசம்-2025 சனிக்கிழமை 28-டிசம்பர்-2025 திங்கட்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | 25-டிசம்பர்-2025 வியாழன் கிறிஸ்துமஸ் பண்டிகை |
| திருமண நாட்கள் | 01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை வளர்பிறை 08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை 10-டிசம்பர்-2025 புதன்கிழமை தேய்பிறை 14-டிசம்பர்-2025 ஞாயிறு தேய்பிறை 15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை |
| திருவிழாக்கள் | 03-டிசம்பர்-2025 புதன்கிழமை திருக்கார்த்திகை 19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தி 25-டிசம்பர்-2025 வியாழன் கிறிஸ்துமஸ் பண்டிகை 30-டிசம்பர்-2025 செவ்வாய் வைகுண்ட ஏகாதசி |

மேஷ ராசி நேயர்களே, நம்பியவர்களுக்கு நல்லுதவி செய்ய முடியும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிக்க தொடங்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். திட்டமிட்ட காரியம் கைகூடும். புது நபர்கள் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. .

மிதுன ராசி நேயர்களே, யாருக்கும் வாக்குறுதி தர வேண்டம். புது முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் இழந்த செல்வாக்கை திரும்ப பெற முடியும். வாழ்க்கை தரம் உயரும். உற்றார், உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சிம்ம ராசி நேயர்களே, புது சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும் தேடி வரும். எதையும் தாங்கும் மனவலிமையை உண்டாகும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் திடீர் செலவுகள் வரும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

துலாம் ராசி நேயர்களே, பிரியமானவர்கள் ஆதரவாக இருப்பர். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே, பெரியவர்களின் அறிவுரை கிடைக்கும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் மேன்மை நிலை உண்டாகும். பணவரவு சொல்லும்படி இருக்கும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி நேயர்களே, புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்க்க முடியும். பொருளாதார வளம் மேம்படும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கும்ப ராசி நேயர்களே, உங்கள் வசதி, வாழ்க்கை பெறுக ஆரம்பிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே, குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்

மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப நலனுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். உங்களுடைய தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பத்தின் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். நேர்மையான செயல்களால் பலரது பாராட்டை பெற முடியும். உத்யோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும்

ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. வெளியில் யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதிக் குறைவு உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனத்தெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். குடும்பத்திற்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். புதிய நபர்களுடன் பழகும் பொது கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்

மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் பேச்சு திறன் அதிகமாகும். எந்த முயற்சி மேற்கொண்டாலும் அதை திறமையாக முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். தேவையான பொருட்களை வாங்க முடியும். உடல் ஆரோக்கியத்தைப் எந்த பிரச்னையும் இருக்காது. பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். யாருடைய பிரச்சனையிலும் தலையிட வேண்டாம். சுற்று வட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சின்னச் சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். உடன்பிறப்புகளிடம் நல்ல ஒற்றுமை இருக்கும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர் கூட ஒதுங்கி நிற்பர். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்க முடியும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும்.
பரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்.

கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிவரும். சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். பயணங்கள் சாதகமான பலன் தரும். தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் ஏற்படும். குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும். புது நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் போகவும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே உங்கள் எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை. வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.
பரிகாரம் : பழனி முருகரை வணங்கி வழிபடவும்.

சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடைபெறும். ஆன்மிகப் நாட்டம் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். வாக்குவாதங்களையும், அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். குடும்பத்தில் சந்தோஷ தருணங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் அனுகூலம் உண்டாகும். சுப செலவுகள் எதிர்பார்த். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : ஒரு முறை சூரியனார் கோவில் சென்று வரவும்.

கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் பல புதிய திட்டங்கள் தோன்றி அதை செயல்படுத்த வழி கிடைக்கும். குடும்பத்தில் ஆதரவு பெருகும். உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத்தரும். புதிய நபர்களின் நட்பு உற்சாகம் தரும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கை இருப்பு குறையும். நண்பர்கள் மூலம் பெருமை கிடைக்கும். உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்ப்புகள் தானே விலகும். கணவன், மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களின் உறவு புதுப்பிக்கப்படும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
பரிகாரம் : வரசித்தி விநாயகரை வணங்கி வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லவிதமாக நடந்து முடியும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். எதிர்பாராத திருப்பங்களால் உங்களது வாழ்க்கைத் தரம் உயரும். பெரியோர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பணவரவில் சின்ன ஒரு தடை வரும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். உங்களுடைய சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். குடும்பத்துடன் பயணம் செல்ல விருப்பம் ஏற்படும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிப்படவும்.

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மனதில் நினைத்திருந்த விஷயம் கூட எளிதில் முடியும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வரும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கைகள் சில நேரங்களில் பாதகமாக இருக்கலாம். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறைகொள்ளவும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். கொடுக்கல், வாங்கல் திருப்தியாக இருக்கும். பெரியோர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவது நல்லது. வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிப்படவும்

தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்க தாமதமாகலாம். வரும் எதிர்ப்புகளை தைரியமாக சமாளிக்க முடியும். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்னை உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். குடும்பத்தில் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். வாகனங்களில் செல்லும்போது பொறுமை அவசியம். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.

மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். மனச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாகப் பழகுவது அவசியம். குடும்பத்தில் வரும் பிரச்சனைகள் நாளடைவில் சீராகும். உடனிருப்பவர்களுடன் சற்று கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த உதவி தக்க சயமத்தில் கிடைக்கும். குடும்ப மருத்துவரிடம் உடல் நலத்தை பரிசோதித்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். தான, தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். பேச்சு திறமையால் எல்லா வேலைகளையும் சுலபமாக்கி கொள்ள முடியும். உங்களது பல நல்ல செயல்கள் காரணமாக சமூகத்தில் மதிப்பு கூடும். வெளிநாடு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். .
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும்.

கும்ப ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, உங்களது உயர்வான எண்ணங்களும், நேர்மையான சிந்தனைகளும் உங்களை பெரியளவில் உயர்த்தும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். பொருளாதார வளம் கூடும். மனசங்கடம் வராமல் தடுக்க தினமும் தியானம் செய்யவும். நண்பர்கள் எப்போதும் ஆதரவாக இருப்பர். பயணங்களில் கவனம் தேவை. பெற்றோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியதிருக்கும். உறவினர்களால் சில உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் முடிவுக்கு வரும். குல தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. எதிலும் பொறுமையுடனும் கவனமுடனும் செயல்பட்டால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். குடும்பத்தில் எப்போதும் இல்லாத சந்தோஷம் ஏற்படும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். நட்பு வழியில் நல்லது நடக்கும். குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிரமம் இருக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். எதிரிகளின் சதிகளை முறியடிக்க முடியும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். கணவன் மனைவிடையே பனிப்போர் வரும். பெரியோர்களிடம் உங்கள் குறைகளை சொல்லவும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவத்தை பெற முடியும். புதிய முயற்சிகள் எதிலும் தற்சமயம் ஈடுபட வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவுப் பெருகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்.
| தமிழ் மாத ராசி பலன்கள் – டிசம்பர் 2025 |
| (2025) – டிசம்பர் மாத ராசி பலன்கள் – (01-12-2025 – 31-12-2025) விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15ம் தேதி முதல் மார்கழி மாதம் 16ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி 01-12-2025 முதல் 31-12-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை. 2025 டிசம்பர் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : 07/12/2025 தனுசு – செவ்வாய் 16/12/2025 தனுசு – சூரியன் 24/12/2025 மகர – சுக்கிரன் 29/12/2025 தனுசு – புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் “ஆலந்தூர்” A.வினோத் குமார், Ph.d (Astrology) |
மேஷ ராசி நேயர்களே, இந்த மாதம் நீண்ட நாள் எண்ணங்களும், திட்டங்களும் செயல்வடிவம் பெரும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புத்தி சாதூரியதால் எதிலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். சுற்று வட்டாரத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். எதிர்கால கனவுகள் நிறைவேறும். தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளையும் மன குழப்பங்களையும் தவிர்ப்பது அவசியம். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்படும். அடுத்தவரிடம் உங்களது குறைகளை சொல்வதை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எங்கும் எதிலும் கவனம் தேவை. பண விஷயங்களில் எச்சரிக்கை இருக்கவும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். பயணங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அடுத்தவர் பிரச்னையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். குடும்பத்தில் வீண் விரயங்களை தவிர்க்கவும். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். கடன் தொல்லை அவ்வப்போது இருக்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உடல் நலம் சீராகும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். நல்லவர்களின் நட்பு உற்சாகம் தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
ரிஷப ராசி நேயர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வரும். பல இக்கட்டான சூழ்நிலைகளில் கூட தெளிவான முடிவினை எடுக்க முடியும். எந்த ஒரு செயலையும் நன்கு யோசித்து செய்வது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில வேலைகள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். பொருளாதார சிக்கல் வந்தாலும் பெரிதாக பாதிக்காது. இஷ்ட தெய்வ வழிபாட்டால் அனுகூலம் உண்டு. குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்ப விஷயங்களில் எப்போதும் கவனத்துடன் இருக்கவும். யாரிடத்திலும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுவும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்னைகளை தவிர்க்கலாம். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் பற்றிய பயம் குழப்பம் வந்து நீங்கும். பூர்விக சொத்து வழியில் சில வில்லங்கம் இருக்கும். உற்றார், உறவினர்கள் அனுசரணையாக இருப்பர். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உடல் உபாதைகள் நீங்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடி வரும். பழைய கடனை அடைக்க முடியும். அனாவசிய செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் திட்டமிடல் அவசியம்.
சந்திராஷ்டமம் : 19,20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மிதுன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியத்தை கன கச்சிதமாக முடிக்க முடியும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வந்து நீங்கும். பொருளாதார நிலையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். பயணங்களில் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். தேக ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமம் ஏற்படும். நண்பர்களின் வருகையும் அவர்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். சுற்று வட்டாரத்தில் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பயணங்களின் போது உங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக்கொள்ளவும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உற்றார், உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும். சில நேரங்களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும், ஆகையால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொண்டால் பிரச்சனை ஏதும் இல்லை. கணவன், மனைவிக்குள் இருந்த மனசங்கடம் நீங்கும். உறவினர்கள் வழியில் சில பிரச்சனைகள் வரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் பல சாதகமான விஷயங்கள் நடக்கும். எதிலும் சரியான முடிவுக்கு வரமுடியாமல் தடுமாற்ற நிலை ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 22,23,24 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கடக ராசி நேயர்களே, இந்த மாதம் எடுக்கும் போகும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும். எதிலும் நிதானமும், கவனமும் தேவை. குடும்பத்தில் அனுசரித்து செல்வதால் மட்டும் பிரச்னைகளை தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து நன்மதிப்பை பெற முடியும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தெய்வ பிராத்தனையால் வேண்டியது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடினமான காரியங்கள் கூட எளிதில் முடியும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். குடும்ப பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்ளவும். திட்டமிடாத பயணங்கள் நிறைய உண்டு. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்பட வேண்டாம். வம்பு வழக்குகளை தவிர்க்கவும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் வரும். புதிதாக செய்ய விரும்பும் காரியங்களை சற்று தள்ளிப்போடவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
சிம்ம ராசி நேயர்களே, இந்த மாதம் பல புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்ற முடியும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசுவது பல வகையிலும் நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தெளிவான மனநிலை இருக்கும். எதிர்பார்க்காத நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். மன சஞ்சலங்களை தவிர்த்து உறுதியுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட பயணங்கள் நன்மை தரும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் வேண்டாத விவாதம் செய்ய வேண்டியிருக்கும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தினரிடம் வளைந்து கொடுத்து போக வேண்டியது முக்கியம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் அகலும். கையில் எடுத்துக் கொண்ட வேலையை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். நெருங்கின உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர். மனதில் நினைத்த காரியத்தை சீக்கிரத்தில் முடிக்க முடியும். விலகி சென்ற நபர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். குடும்பத்தில் சுப நிகழ்வுகளும், சுபவிரங்களும் உண்டு. நண்பர்களுக்கு கேட்ட உதவியை செய்து தர இயலும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இனிய பேச்சால் மற்றவரை எளிதில் கவர முடியும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். தேவையற்ற வீண் மனக்குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. குடும்பத்திற்கு தேவையானதை செய்து தர முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தெய்வ காரியங்களில் சிந்தனை செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டு அவசியம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். பொது பிரச்சனையில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். புதிய தொழில், வியாபாரம் முயற்சிகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
சந்திராஷ்டமம் : 1,2,3 & 29,30,31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
துலாம் ராசி நேயர்களே, இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் தனி கவனம் செலுத்த வேண்டி வரும். மன வலிமை அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர முடியும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை உருவாகும். எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாரநிலை சீராக இருக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எதிரிகளின் பலம் குறைந்து காணப்படுவர். உடன்பிறப்புகளால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாளாக தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். உற்றார், உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். சில நேரங்களில் மன குழப்பங்களும், மன சஞ்சலங்களும் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உடல் நிலையில் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். வெளிநாடு சென்று வரும் பாக்கியம் உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நட்பு வழியில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கடன் பிரச்னைகள் குறையும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் தொடங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். பிறர் பாராட்டும் செயல்களை செய்ய முடியும். புதிய பொறுப்புகளும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 & 31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
விருச்சிக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவர். குடும்பத்தில் சாதகமான நிலைகள் நிலவும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு தேவை. பொருளாதார நிலையில் சிறுசிறு ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நிலை நீங்கும். அடுத்தவரின் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும், அதை சமாளிக்க முடியும். உங்கள் விருப்பங்களில் ஒரு சில விஷயங்கள் நிறைவேறும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும். உடல் ரீதியாக ஒரு சில தொந்தரவுகள் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனையே தவிர்க்கவும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். வாகன சேர்க்கை ஏற்படும். திருமணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களுக்கு நிறைய செலவு செய்யவேண்டிவரும். அடிக்கடி பயணங்கள் செல்வதன் மூலம் ஆதாயங்கள் உண்டு. வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நிலை நிலை மாறும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 5,6,7 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் நல்ல பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். கடந்த கால பிரச்னைகளை நினைத்து வருந்த வேண்டாம். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். குடும்ப விஷயங்களில் ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் அதை சீர் செய்ய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் மட்டுமே வெற்றி கிடைக்கும். தேவையற்ற வீண் விரயங்கள் இருப்பதால் சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்ட இடைறுகள் நீங்கும். முக்கிய காரியங்கள் முடிவதில் தாமதம் இருக்கும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லைகள் குறையும். நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும். நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தற்போது குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். வாகனத்தால் ஏற்பட்ட அலைச்சல் வெகுவாக குறையும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் மனக் கசப்புகள் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். திருமணம் தொடார்பான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். பிரியமானவர்களிடம் இருந்த மனக்கசப்பு விலகும். உடனிருப்பவர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மகர ராசி நேயர்களே, இந்த மாதம் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மனதில் நினைத்ததை சாதித்து கொள்ள முடியும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவை பொறுத்தவரை ஓரளவு திருப்திகரமாக இருக்கும், இருப்பினும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பின் சீராகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தவன் மூலம் நன்மை உண்டாகும். சோம்பேறித்தனத்தை விட்டு சுறுசுறுப்புடன் செயல்படவும். எதிர்மறை சிந்தனையை தவிர்க்கவும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளால் தொல்லை இருப்பினும் ஆதாயமும் உண்டு. எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் நடக்கும். உடனிருப்போர் ஆதரவாக இருப்பர். சொந்த பந்தங்களால் நன்மைகள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒரு மந்தமான சூழ்நிலை நிலவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். தெய்வ அனுகூலம் உண்டு. மன பயத்தை நீக்கவும். வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிதாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். பிதுர் வழி சொத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். எந்த ஒரு நல்ல காரியத்தையும் தாமதிக்காமல் செய்து முடிக்கவும். இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சீக்கிரத்தில் நல்ல பலன் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளின் அதிக கவனம் தேவை. பண சேமிப்பில் கூடுதலாக கவனம் செலுத்தவும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரங்களில் சாதகமாக முடியும். பிரியமானவர்களிடம் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். பழைமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். வீட்டிற்கு தேவையானதை வாங்க முடியும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். ஒரு சில காரிய தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் சுபமாக முடியும். கடன் பிரச்சனை தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் தான் அதிகம் இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிறகு சீராகும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். சில கசப்பான விஷயங்களை அனுசரித்து போக வேண்டியுள்ளது. சமுக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 12,13,14 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மீன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்ப பொருளாதார நிலை தேவையான அளவு உயர்ந்தாலும், ஆடம்பர செலவினங்கள் உண்டு. உங்களது செயல்கள் ஒவ்வொன்றும் அனைத்தும் வேகமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்வதால் நன்மைகள் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குடும்ப வாழ்வில் சில தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். செவ்வாய் பலம் பெறுவதால் தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. எதிலும் தீர யோசித்து பின் முடிவு எடுக்கவும். எடுக்கும் முயற்சிகளில் சில நேரங்களில் தடை இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெற முடியும். உற்றார், உறவினர்களிடம் மனகசப்புகள் உண்டாகும். பண தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை வரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி கொண்டே போகும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். சொந்த பந்தங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் அவ்வப்போது வரும். பிரியமானவர்களால் நன்மை உண்டாகும். முன் பின் தெரியாத நபர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிடையே சுமுகமான உறவு இருக்கும். குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல், வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களின் தரம் அறிந்து உதவுவது நல்லது. உத்யோகத்தில் நிதானம் அவசியம். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
சந்திராஷ்டமம் : 14,15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜ பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 45 ஆண்டுகளாகத் தோற்கடிக்கவே முடியாது என்ற இறுமாப்புடன் இருந்த கேரள இடது சாரி முன்னணியை பாஜ தனித்து களம் கண்டு திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு உள்ளாட்சிகளில் பாஜ கால் பதித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றிக்குக் காரணம் பிரதமர் மோடி மீது உள்ள மக்களின் நம்பிக்கையும், கேரள பாஜ தொண்டர்களின் தொய்வில்லாத உழைப்பும்தான்.

பூத் கமிட்டி உறுப்பினர்களின் இடைவிடாத உழைப்பின் காரணமாகக் கிடைத்த பாஜகவின் இந்த அபார வெற்றி தமிழக பாஜகவிற்குப் புது உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. தமிழகத்திலும் பாஜ எல்லா சட்டசபை தொகுதியிலும் பூத் வாரியாக கமிட்டிகளை நியமித்துவிட்டது. அவர்களுக்கான பயிற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். அப்போது பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலைச் சரி பார்க்க வேண்டும்.
தகுதியில்லாத புது வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தால் அதனை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும். தமிழகத்திலும் ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலை மக்களிடம் காணப்படுகிறது. அதனை நாம் முறையாகப் பயன்படுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தருவோம். பிரதமர் மோடிக்கு அவ்வெற்றியைச் சமர்ப்பிப்போம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளைக்கு (டிசம்பர் 16) ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிகுமார் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்’ என்றார். நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் 2வது நாளாக ஐகோர்ட் மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு முன் நடந்து வருகிறது.
அப்போது கோவில் தரப்பில், ”இது கார்த்திகை தீபத்தூண் அல்ல. சமணர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தூண். இரவில் அதில் விளக்கேற்றி வெளிச்சத்தில் விவாதிப்பார்கள். இது போன்ற தூண் அமைப்பு மதுரை மாவட்டத்தில் சில மலைகளில் உள்ளன” என முன்வைக்கப்பட்டது.
”தனி நீதிபதி தங்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை. தர்கா நிர்வாகம் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளதாக தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டது ஏற்புடையதல்ல” என என தர்கா தரப்பில் வாதிட்டப்பட்டது.
இன்று தர்ஹா தரப்பு, தர்ஹா ஆதரவு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர். நாளைக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய வரலாறு படைத்தது. ஒரு சவரன், 1,00,120 ரூபாய் ஆக விற்பனை ஆகிறது. இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,160 உயர்ந்தது.

சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்ததால், நம் நாட்டிலும் அதன் விலை புதிய உச்சங்களை எட்டி வந்தது. தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம், சவரன் விலை, கடந்த அக்டோபரிலேயே, 95,000 ரூபாயை எட்டியது.
அம்மாதம், 21ம் தேதி தங்கம் சவரன், 97,600 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. பின், தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்தாலும், உச்சத்தை எட்டவில்லை. கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த வெள்ளி கிழமை (டிசம்பர் 12) காலை தங்கம் கிராமுக்கு, 200 ரூபாய் உயர்ந்து, 12,250 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. சவரனுக்கு, 1,600 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில், 98,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.மாலை மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 12,370 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 960 ரூபாய் அதிகரித்து, 98,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி சனிக்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று (டிச 14) ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (டிச.,15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,460க்கு விற்பனை ஆனது.
ஆனால், மதியம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,120 ஐ தாண்டியது. ஒரு கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515 க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் மீண்டும் ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்தது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெள்ளி விலை கிராமுக்கு இன்று ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: சர்வதேச முதலீட்டாளர்களின் பெரும்பாலான முதலீடுகள், தங்கமாகவே உள்ளது. இது போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்து, நம் நாட்டிலும், அதன் விலை அதிகரித்து வருகிறது.
வெள்ளியிலும் அதிக முதலீடுகள் குவிந்து வருவதால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்(கிராமப்புறம்) (VB G RAM G)’ மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் வேலைநாட்கள் 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பாஜ அரசு!
தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!
100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!
இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழகம் தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழக மக்களுக்குக் கிடைக்குமாம்!
பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு!
வேளாண் சட்டம், ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே புதிய திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்! இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சா பொதிகளுடன், மரைன் பொலிசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு,கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள், மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை (13-12-2025) இரவு தொண்டி அடுத்த முள்ளிமுனை கடற்கரையிலிருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (13) இரவு முள்ளிமுனை முக துவார கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மரைன் பொலிசாரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து மரைன் பொலிசார் தீவிரமாக தேடினர்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டையில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை தேவிபட்டினம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து எடை போட்டுப் பார்த்தபோது அதில் 150 கிலோ கஞ்சா இருந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த மரைன் பொலிசார் கடத்தலில் ஈடுபட்ட முள்ளிமுனை பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூ.25 லட்சம் எனவும் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என மரைன் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
TNPSC கோரிக்கை மாநாட்டில் சீமான் முழக்கம் – விருத்தாசலம்
அப்துல் ரவூப் 30வது ஆண்டு நினைவு நாள் – 15-12-2025
நீ தீக்குளித்த செய்தி அறிந்து திகைத்தேன்.

வேதனையோடு வெட்கத்துள் முகம் புதைத்து அழுதேன்.
உனக்காக மட்டுமல்ல, என்னையும் எண்ணித்தான்.
பேர் அறியா உறவே என்னை உனக்குத் தெரியாது, ஆனால் இன்று எனக்கு மட்டுமல்ல உலகத்திற்கே உன்னைத் தெரிந்துவிட்டது.
என் மனக் கண்ணில் நீ நடாத்திய யாகம் தெரிகிறது.
நீ எழுதிய இறுதி வரிகளும் தெரிகிறது.
நீ எரிகிறாய், நெய்யாய் உருகிறாய், புழுவாய் நெளிந்து விழுகிறாய், ஐயனே நீ படும் வேதனையை என்னால் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை.
ஏன் இந்த வேதனை? யாருக்காக இந்தத் தியாகம்? எனக்காகத்தானே, என் உறவுக்காகத்தானே, என் அம்மாவிற்காக, என் அப்பாவிற்காக, அக்காவிற்காக, தம்பி தங்கைக்காக, என் குடும்பத்திற்காக, எங்கிருந்தோ நீ உன்னை வருத்தி உயிரை விட்டாய்.
ஆனால் நான் மட்டும் இங்கே, என் உறவிற்காக உயிர் நீத்த உத்தமனே ,ஏன் இப்படிச் செய்தாயோ? எனக்குப் புரிகிறது.
உனக்கும் ஒரு சொந்த நாடு இருந்திருக்குமானால் நீ இப்படி யோசித்து மாண்டிருக்க மாட்டாய்.
படைதிரட்டி வந்து தமிழன் யார் என்பதைக் காட்டியிருப்பாய்.
என்ன செய்வது? உலகம் எங்கும் பறந்து வாழும் தமிழனுக்கு ஒரு நாடு இல்லை.
சுதந்திரமாய் குந்தி இருக்க ஒரு கூடு இல்லை, தமிழனாகப் பிறந்ததற்காக நிம்மதியான ஒரு வாழ்வு இல்லை.
இந்த அவல நிலைமையை மாற்றப்போவது தமிழீழம்தான் என்பதை நீ சரியாகப் புரிந்து கொண்டாய்.
தமிழன் என்றாலும் உலகில் எந்த மூலையில் வந்தாலும் உணர்வால் ஒன்று பட்டவன் என்று தத்துவத்திற்கு புத்துயிர் ஊட்டிவிட்டாய்.
என் இனத்தின் இரத்தமே, உன் தேசத்தில் நீ மூட்டிய நெருப்பு உன்னை மட்டும் எரிக்கவில்லை.
தமிழ் உருவத்தில் எதிரிக்கு கொள்ளி கொடுக்கும், கோடரிக் காம்புகளின் போலி முகத் தோலையும் எரித்துவிட்டது.
எம் தேசத்தில் இளைஞர், யுவதிகளின் நெஞ்சத்திலே புதிய வேகத்தை ஊட்டிவிட்டது.
இனியும் எம் இன்லம் தலைமுறை உறங்காது.
விழித்து எழும்.
எம்பகை வேருடன் விழும்.
உன் நினைவு நெஞ்சத்தில் நீங்காது வாழும்.
இப்படிக்கு
தமிழீழத்தின் உடன்பிறப்பு.!