23 February 2026

“ஸ்டாலினை ஆயிரம் விளக்கிலும், உதயநிதி சேப்பாக்கத்திலும், கனிமொழி திருச்செந்தூரிலும் போட்டியிட” தி.மு.க.’வினர் விருப்ப மனு அளித்தனர்.

சென்னை

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி, திருச்செந்துாரில் தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி ஆகியோர் போட்டியிட, தி.மு.க.,வினர் விருப்ப மனு அளித்தனர்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறும் பணி, தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று துவங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், 1,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றனர். பொதுத் தொகுதிகளில் போட்டி யிட, விண்ணப்பக் கட்டணமாக 25,000 ரூபாய்; தனித் தொகுதிகளில் போட்டியிட 15,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனுவில், கட்சியில் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வேறு அமைப்புகளில் வகிக்கும் பதவி, கட்சி போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி, திருச்செந்துார் தொகுதியில் கனிமொழி ஆகியோர் போட்டியிட, கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *