சட்டசபை தேர்தலில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களுக்கு உதவ, முன்னாள் அரசு அதிகாரிகளை, தன்னார்வலர்களாக நியமிக்க, அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. த.வெ.க., சார்பில் தேர்தலில் போட்டியிடுவோரிடம் தபால் மற்றும் நேரடியாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிப்பது, நேற்றுடன் முடிந்தது.
விரைவில், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. இந்நிலையில், த.வெ.க., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதவ, தன்னார்வலர்களை நியமிக்க, அக்கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, த.வெ.க. வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களுக்கு, வேட்பு மனு தாக்கல் துவங்கி, அனைத்துவித தேர்தல் செயல்பாடுகளிலும் உதவ, முன்னாள் அரசு அதிகாரிகள், ஊழியர்களை தன்னார்வலர்களாக பணி அமர்த்த, தலைமை முடிவு செய்துள்ளது.
- ஜனவரி 23‑ஆம் தேதி மதுராந்தகத்தில் NDA தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார் இந்திய பிரதமர் மோடி
- த.வெ.க. எம்.எல்.ஏ. தன் பிறந்த நாள் மற்றும் வெற்றி கொண்டாட்டத்தில், கேக்கை வாளால் வெட்டியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தியப் பிரதமர் மோடி சென்னை வந்தார்: பாஜக உறுப்பினர்கள் அவருக்கு அன்பான வரவேற்பு அளித்தனர்.
- தமிழகத்தில் நவம்பர் 12ம் தேதி 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- மதுரை தமிழர் தொன்மை மாநாடு – வரலாறு, தொன்மை, எதிர்காலப் பாதை
- கல்லனைப்பகுதிக்கு எமது வாக்குறுதிகள் – முனைவர் செந்தில்நாதன்
தாக்கல் செய்யும் வேட்பு மனுக்களில் தவறுகள் இடம் பெறாமலிருக்கவும், தேர்தல் கமிஷன் விதிகளை முறையாக கடைப்பிடிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.