சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி, திருச்செந்துாரில் தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி ஆகியோர் போட்டியிட, தி.மு.க.,வினர் விருப்ப மனு அளித்தனர்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறும் பணி, தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று துவங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், 1,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றனர். பொதுத் தொகுதிகளில் போட்டி யிட, விண்ணப்பக் கட்டணமாக 25,000 ரூபாய்; தனித் தொகுதிகளில் போட்டியிட 15,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுவில், கட்சியில் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வேறு அமைப்புகளில் வகிக்கும் பதவி, கட்சி போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி, திருச்செந்துார் தொகுதியில் கனிமொழி ஆகியோர் போட்டியிட, கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.
- 18-05-2026 | தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை!
- “தமிழகத்தில் வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை, நின்று கேள்வி கேட்கும் திறமை நம்மிடம் இருக்க வேண்டும்” என கட்சியினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறினார்.
- நவம்பர் 15 ஆம் தேதி கல்லணைக்கு அருகில் உள்ள பூதலூர் பகுதியில் “தண்ணீர் மாநாடு” – தமிழம் செந்தில்நாதன்
- தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் தெரு நாய் கடியால் 22 பேர் இறந்துள்ளனர். – பொது சுகாதாரத் துறை
- என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
- விஜய் மீது செருப்பு எறிந்த ரசிகர்கள் ! ஆதார வீடியோ வெளியீடு !