டீசல் விலை உயர்வால் லாரிகளின் வாடகை கட்டணம் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசிகளின் விலை கிலோவிற்கு ரூ.8 வரை உயர்ந்துள்ளது.
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போரினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. போர் நெருக்கடியால் பெட்ரோல், டீசல், காஸ் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் மே 15 முதல் நான்கு முறை எரிபொருள் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் உயர்த்தியது. இதனால் சரக்குகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் லாரிகளின் வாடகை கட்டணம் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
அரிசி வியாபாரிகள் கூறியதாவது: கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரும் கர்நாடகா பொன்னி, நெய் கிச்சடி, உள்பட பல்வேறு அரிசி ரகங் களின் விலை உயர்ந்துள்ளது. 10கி., அரிசி பை ரூ.40, 26கி., அரிசி ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது.மேலும் சில்லரை விற்பனையில் கிலோவிற்கு ரூ.8 வரை விலை உயர்ந்துள்ளது என்றனர்.