வீரவேங்கை நிறையிசை | 15.05.2009

அரசியல்துறை ஊடக பிரிவு

வீரவேங்கை நிறையிசை

யாழ்ப்பாணம்
15.05.2009
முள்ளிவாய்க்கால்


வீரவேங்கை நிறையிசை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் இந்துக் கல்லூரியில் தனது கல்வியைக் கற்றார். தனது கல்வியை சிறப்புற முன்னெடுத்தார். 2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறையினர் அரசியல் பணியினை யாழ். மாவட்டத்தில் முன்னெடுத்திருந்த வேளையில் கல்வி செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த இவர் அரசியற் கூட்டங்களிற் பங்கு கொண்டார். இதனூடாக விடுதலைப் போராட்டம் சார்ந்த தெளிவினை ஆழமாகப் புரிந்து கொண்டார். இதன் மூலம் 2004 ஆம் ஆண்டு இவ் அமைப்பில் அரசியல் துறையினர் ஊடாகப் போராளியாக தன்னை இணைத்துக் கொண்டார்.


அதன் பின் வன்னியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து நிறையிசை எனும் பெயருடன் வரிப்புலியாகி மாலதி படையணியில் இணைக்கப்பட்டார். தொடர்ந்தும் இவர் கல்வி. அறிவியல். படைத்துறை சார்ந்து சிறந்த ஆற்றல் உள்ளவராக இனங்காணப்பட்டு படையறிவியற் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு படை அறிவியல் சார்ந்து சிறப்பாகக் கற்றதோடு தனது ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தி நின்றார்.

இக்காலப்பகுதியில் வன்னிக் கள முனைகள் திறக்கப்பட்டு சிறிலங்கா இராணுவம் தமிழர் நிலங்களைக் கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது. முன்னேறி வந்த இராணுவத்திற்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டு படையணியுடன் நகர்ந்து வந்தார். அங்கிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிங்கள இராணுவத்திற்கு எதிராக வீரமுடன் களமாடி 15 மே 2009 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீரவேங்கை நிறையிசை தமிழீழ மண்ணில் வித்தானார்.

Related posts

வீரவேங்கை ரமேஸ் 10.03.1989

38 ஆம் ஆண்டு வீரவணக்கம் “யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான்” 03.03.2026

லெப்டினன்ட் ராதா – 26.02.1992